எமது முந்தைய ஒரு கட்டுரையில் கோடக் மகிந்திரா வங்கி இங்க் வைஸ்யா வங்கியை வாங்குவதைப் பற்றி குறிப்பிட்டு இருந்தோம். இதில் இங்க்கை விட கோடக்கிற்கு இந்த டீல் லாபகரமானது என்றும் எழுதி இருந்தோம்.
தற்போது இந்த டீல் ஒப்புதலுக்காக ரிசர்வ் வங்கிக்கு சென்றுள்ளது. முதல் கட்டமாக செபி ஏதேனும் சந்தேகத்திற்குரிய பங்கு வர்த்தகம் நடந்துள்ளதா என்பதை விசாரித்து வருகிறது.
அதே நேரத்தில் இந்த இரு வங்கிகளும் வேறு ஒரு சுவராஸ்யமான பிரச்சினையில் சிக்கியுள்ளன.
அதாவது இந்த இரு வங்கிகளும் தங்கள் பங்குதாரர்கள் ஒப்புதலைப் பெற வேண்டும். வழக்கமாக நம்மைப் போன்ற பொது மக்களிடம் இருக்கும் பங்குகளுக்கு அவ்வளவு மதிப்பு இருக்காது. ஆனால் இந்த டீலில் பொது மக்களிடம் இருக்கும் பங்குகள் அதி முக்கியத்துவம் பெறுகிறது.
எப்படி என்றால்,
இந்த டீல் நிறுவனத்தை இணைப்பது தொடர்பானது என்பதால் மொத்த பங்குதாரர்களில் மூன்றில் இரண்டு பங்கு பங்குதாரார்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதாவது 100 பங்குகள் இருந்தால் 67 பங்குகள் சாதகமாக ஒட்டு அளிக்க வேண்டும்.
அதே நேரத்தில் இந்த ஒப்பந்தம் வங்கி தொடர்பானது என்பதால் வங்கி ஒழுங்குமுறை விதிகளுக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியம் உள்ளது. அந்த விதி முறையின் படி, ஒருவர் 10 சதவீதத்திற்கு மேல் பங்குகளை வைத்து இருந்தால் அவரது ஓட்டுரிமை 10% அளவிலே கருதப்படும். அதாவது 10%க்கும் மேல் உள்ள பங்குகளுக்கு ஓட்டுரிமை கிடையாது.
இதன்படி,
கோடக் வங்கி நிறுவனர் உதய் கோடக் 40% பங்குகளை வைத்து இருந்தாலும் அவருடைய 10% பங்குகள் தான் ஓட்டுரிமை பெறும். இதனால் மீதி 30% பங்குகள் வீணாகிப் போகி விடுவதால் மொத்த பங்குகள் 70% என்று கருதப்படும். அதில் 47% பங்குகள் ஓட்டுகளைப் பெற்றால் தான் டீல் வெற்றி பெறும்.
இதே போல் தான் இங்க வைஸ்யாவுக்கும். நிறுவனர்கள் 43% பங்குகளை வைத்து இருந்தாலும் 10% தான் ஒட்டு போட முடியும். அதே நேரத்தில் பங்குகள் இரண்டு நிறுவனர்களிடம் பிரிந்து கிடப்பதால் அவர்கள் 19% ஒட்டு போடலாம். இதனால் மேல் உள்ள கணக்கீடுகளின் படி விவரமாக பார்த்தால் இன்னும் 32% பங்குகள் ஆதரவு வெளியில் இருந்து தேவை.
இந்த சூழ்நிலையில் தான் பொது மக்களிடம் இருக்கும் பங்குகள் முக்கியத்துவம் பெறுகிறது. அவர்களது பங்குகளும் சேர்ந்தால் தான் இந்த டீல் வெற்றி பெறும் நிலை உள்ளது.
கோடக்கை பொறுத்த வரை நல்ல டீல் என்பதால் அவர்கள் பங்குகள் மூலம் அவ்வளவு பிரச்சினை வராது. ஆனால் இங்க் பங்குதாரர்களுக்கு நல்ல டீல் இல்லை என்பது போல் ஒரு எண்ணம் உள்ளது. அதனால் பிரச்சினை இங்க் மூலம் வர வாய்ப்பு உள்ளது.
உங்களிடம் இந்த வங்கிகளின் பங்குகள் இருந்தால் ஒட்டு போட மறந்து விடாதீர்கள்! தொங்கு சட்டசபையில் சுயேச்சை எம்எல்ஏ பவர் போல் உங்கள் ஒட்டும் கிங் மேக்கர் தான்!
டிமேட் மூலம் இ-ஓட்டு போடலாம் என்று நினைக்கிறேன்.
English Summary:
Minority share holders are playing critical role in Kotak Bank and Ing Vysya Bank deal. Ing vysya stakeholders may oppose the deal due to lower prices in their stocks

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக