ஞாயிறு, 9 நவம்பர், 2014

பங்குச்சந்தையின் அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி இருக்கலாம்?

தற்போது சந்தை 28,000 புள்ளிகளைத் தொட்டு சிறிய திருத்த நிலைக்கு வந்துள்ளது. இந்த சமயத்தில் அடுத்தக் கட்ட நகர்வுகள் எதனை அடிப்படையாக வைத்து இருக்கும் என்று ஓரளவு அனுமானிக்க முடிகிறது.


நாம் முன்னர் ஒரு கட்டுரையில் கூறியவாறு கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட உயர்வுகள் நிதி நிலை அறிக்கைகளை அடிப்படையாக வைத்தே அமைந்து உள்ளன. கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே 5 முதல் பத்து சதவீத வளர்ச்சியைக் கொடுத்துள்ளன. அதனால் இந்த உயர்வுகளை ஓரளவு நம்பலாம்.

இன்னும் சில நிறுவன நிதி அறிக்கைகள் வர வேண்டி உள்ளது. அவைகளும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறோம்.



மத்திய  நிலை ரிஸ்க் எடுக்கும் விருப்பம் உள்ளவர்கள் கூட தற்போதைய சந்தையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றே நினைக்கிறோம். வங்கி மற்றும் ஆட்டோ பங்குகள் தற்போதைய சூழ்நிலையில் நல்ல டிமேண்ட்டில் உள்ளன. அடுத்த ஆறு மாத காலங்களுக்கு காற்று இன்ஜினியரிங், பவர் மற்றும் கட்டமைப்பு துறைகளை  நோக்கி திரும்பலாம். சூழ்நிலைகளை  பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமாக இருக்கும்.

பங்குச்சந்தையில் பொறுமை என்பது அவசியமானது. நமது போர்ட்போலியோ மூலம் குறுகிய கால முதலீடு செய்தவர்களையும் நீண்ட கால முதலீட்டிற்கு மாற்றி உள்ளோம். அதனால் ஆரம்ப கட்டங்களில் பங்கு விலை சிறிது குறைந்தாலும் நிறைய மெயில்கள் வந்து விடும். தற்போது நிலைமை மாறி விட்டது.

அதே நேரத்தில் அவர்களுக்கு அந்த பொறுமையும் பலன் கொடுக்க ஆரம்பித்து விட்டது. எல்லா போர்ட்போலியோகளுமே நல்ல லாபம் கொடுக்க ஆரம்பித்து விட்டன. அந்த நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் சாதகமாக இருந்ததே உயர்வுக்கு காரணமாக அமைந்தது. விவரங்களுக்கு இங்கு பார்க்க.

இனி அடுத்தக் கட்டங்களை பார்ப்போம்.

நாட்டின் பொருளாதரத்திற்கான பல தரவுகள் சாதகமாகவே வந்து உள்ளன. இதனால் அடுத்த மாதம் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கலாம் என்று நம்பப்படுகிறது. நிதி அமைச்சரும் இதற்கு சாதகமாக பேட்டி  அளித்துள்ளார். அப்படி அமைந்தால் டிசம்பர் முதல் இரண்டு வாரங்களிலே 29,000 புள்ளிகளைத் தாண்டலாம்.

கடந்த வாரம் அருண் ஜெட்லி அவர்கள் கொடுத்த பேட்டியைப் பார்த்தால் பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகள் இன்னும் வேகமாக நடக்கும் என்று தெரிகிறது. பல நஷ்டத்தில் இயங்கும் பொது துறை நிறுவனங்கள் தனியாரிடம் கொடுக்கப்படும். இன்னும் நிறைய துறைகளில் அந்நிய முதலீடு திறக்கபப்டும் என்றும் தெரிகிறது. இது தொடர்பாக அவ்வப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் சந்தையை ஏற்றம் செய்ய உதவும்.

அடுத்து அடுத்த வருட பட்ஜெட். இதற்கான வேலைகள் இப்பொழுதே ஆரம்பித்து விட்டது என்று தெரிகிறது. சந்தைக்கு சாதகமாக நிறைய விடயங்கள் இடம் பெறலாம் என்று தெரிகிறது. கடந்த பட்ஜெட்டில் இருந்த ஒரு விதமான இறுக்க சூழ்நிலை தற்போது இல்லை. அதனால் சில முடிவுகள் துணிச்சலாக எடுக்கப்படும் என்று நம்பலாம்.

வரும் மார்ச்/ஏப்ரல் மாதத்தில் விடப்படும் நிலக்கரி சுரங்க ஏலம் எந்த நிறுவனங்களில் முதலீடு செய்யலாம் என்பதை தீர்மானிக்க உதவும். இதனைப் பொறுத்து போர்ட்போலியோவில் சுரங்கம், நிலக்கரி, மின் நிறுவனங்களை சேர்த்துக் கொள்ளலாம்.

உலகக் காரணிகளைப் பொறுத்த மட்டில் ஐரோப்பிய சந்தையில் ஏற்படும் முன்னேற்றங்கள் சந்தைக்கு உதவும். அதே சமயத்தில் அங்கு ஏற்படும் பாதிப்புகள் சந்தையை அவ்வப்போது கொஞ்சம் கீழிறக்கி திருத்தவும் உதவும்.

ஆக, இது பங்குச்சந்தை முதலீட்டிற்கு ஏற்ற தருணம் என்று சொல்லலாம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்! ஒவ்வொரு இறக்கமும் வாங்குவதற்கான வாய்ப்புகளே..

எமது அடுத்த போர்ட்போலியோ நவம்பர் 15 அன்று வெளிவருகிறது. விரும்பும் நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்! இங்கு விவரங்களைப் பார்க்கலாம். அல்லது muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். வருடத்திற்கு குறைந்தபட்சம் 20% வருமானம் கொடுக்கமளவு இந்த போர்ட்போலியோ தயாரிக்கப்படும்.

English Summary:
Indian share market favors for long term investment.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக