புதன், 19 நவம்பர், 2014

100 மாதங்களில் இரட்டிப்பாக்கும் கிசான் விகாஸ்

பொருளாதார வீழ்ச்சிகளின் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் சேமிக்கும் தன்மை மக்களிடம் நன்கு குறைந்து விட்டது. அதாவது 36 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைந்து விட்டது.


இதனால் தனி நபராக நமக்கு மட்டும் பிரச்சினை இல்லை. நாட்டின் பல திட்டங்களுக்கு தேவையான பணத்தை அரசு திரட்டுவது மிக கடினமான செயல்.

நாம் அஞ்சலகத்தில் போடும் பணம் இறுதியாக பார்த்தால் அரசே செலவு செய்து கொண்டு இருக்கும். வேறு இடத்தில அதிக வட்டிக்கு வாங்குவதை விட குடிமக்கள் பணத்தை பயன்படுத்தவது அரசிற்கு பல வழிகளில் சௌகரியம்.



இதன் தொடர்ச்சியாகத் தான் பல கைவிடப்பட்ட திட்டங்கள் மீண்டும் ஜெட்லியால் தொடங்கப்பட்டு உள்ளன. இது ஒரு நல்ல அணுகுமுறையே.

இந்த திட்டங்கள் பற்றிய எமது கட்டுரைகளை இங்கு விரிவாகக் காணலாம்.

தற்போது கடந்த ஏழு வருடங்களாக கைவிடப்பட்ட கிசான் விகாஸ் பத்திரத்தை மீண்டும் புதுப்பித்துள்ளனர்/ திட்டத்தின் அணுகுமுறை எதுவும் மாறவில்லை. ஆனால் முதலீட்டுக் காலமும், வட்டி விகிதங்களும் மாற்றப்பட்டுள்ளது.

பழைய கிசான் விகாஸ் திட்டத்தில் ஐந்தரை வருடங்களில் முதலீடு இரட்டிப்பாகி விடும் ஆனால் தற்போது எட்டு வருடம் நான்கு மாதங்களில் (100 மாதங்களில்) இரட்டிப்பாக உள்ளது. இந்த முறையின் கீழ்  வருடத்திற்கு கூட்டு வட்டி(Compound Interest) முறையில் 8.7% வட்டி கிடைக்கும்.

இந்த பத்திரங்களை அணைத்து அஞ்சலகங்களிலும் வாங்கலாம். 1000, 5000, 10000, 50000 ரூபாய் பாத்திரங்களாக வாங்க முடியும். முன்பு போல் அதிகபட்ச வரம்பு  எதுவுமில்லை.

முதல் இரண்டரை வருடங்களுக்கு முதலீடை திரும்ப பெற முடியாது. ஆனால் கடனாக பெற முடியும். அதன் பிறகு காலத்திற்குரிய வட்டி விகிதங்களை கழித்த பிறகு திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைக்கு இந்த பத்திரங்களை அஞ்சலகங்களில் மட்டுமே வாங்க முடியும். விரைவில் வங்கிகள் மூலமாக பெறும் வசதியும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த பத்திரங்களை பயன்படுத்தி வங்கிகளில் கடனும் பெற்றுக் கொள்ளலாம்.

அரசு சார்ந்த முதலீடு என்பதால் ரிஸ்க் இல்லை. ஆனால் வரி பயன்கள் எதுவும் இல்லாதது ஒரு பெரிய எதிர்மறையான விடயம்.

குறைந்த ரிஸ்க்கில் நிரந்தர வருமானம் பெற இதுவும் ஒரு நல்ல வழியே.

தொடர்பான கட்டுரைகள்:


English Summary:
Kisan Vikaas plan is relaunched in India. It doubles investment money in 100 months with 8.7% interest rate. 

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. பழைய கிசான் விகாஸ் திட்டத்தில் ஐந்தரை வருடங்களில் முதலீடு இரட்டிப்பாகி விடும் ஆனால் தற்போது எட்டு வருடம் நான்கு மாதங்களில் (100 மாதங்களில்) இரட்டிப்பாக உள்ளது. இதனால் சராசரியாக 8.7% வருடத்திற்கு கூட்டு வட்டி கிடைக்கும். - If it takes eight years four months for the doubling of Capital Amount, how an additional interest of 8.7% per year would be get.... Second to my personal view doubling the capital for eight years would be too long and even presume inflation after eight years make the real value of the capital amount would not have much impact.. only it would be safest investment..

    பதிலளிநீக்கு
  2. My intention also same like you. But due to the lack of clarity on the same line, it's misinterpreted. இது கூடுதல் வட்டி அல்ல, கூட்டு வட்டி. திருத்தப்பட்டு விட்டது. As you said, the interest rate is same like FD but without variance for 8 years even thought interest rate is changing. This is only suitable for low risk takers.

    பதிலளிநீக்கு