செவ்வாய், 11 நவம்பர், 2014

ராஜீவ் பங்கு முதலீட்டுத் திட்டம் - ஒரு விமர்சனம்

கடந்த ஒரு வருடத்தில் சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பல பங்குகள் 50% அளவு ரிடர்ன் கொடுத்துள்ளன. ஆனால் இந்த லாபம் முழுவதும் இந்தியர்களுக்கு கிடைத்து இருக்குமா என்றால் இல்லை. இந்த லாபத்தின் பெரும்பங்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தான் சென்று உள்ளது.


நமது பங்குச்சந்தை மதிப்பில் 27% வெளிநாட்டுக்காரர்கள் கையில் தான் உள்ளது. இதனால் அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பங்குச்சந்தையை கணிசமாக பாதிக்கிறது.

நாளைக்கே அவர்கள் முதலீடுகளைத் திரும்ப பெற்று விட்டால் பத்து சதவீதம் வரை சந்தை குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் நமது பொருளாதாரம் நல்ல நிலையில் சென்றாலும் கட்டுப்பாடு என்பது FII கையில் தான் அதிகம் உள்ளது.

இதனைத் தவிர்க்க வேண்டும் என்றால், இந்தியர்களாகிய நாம் தான் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் நமது நாட்டில் மக்கள் தொகையில் வெறும் 7% தான் சந்தைக்கு வருகிறது. மீதி பணம் எல்லாம், தங்கம் அல்லது FDயில் முடங்கி கிடக்கிறது. இதனால் நமது வளர்ச்சி முழுவதையும் வெளிநாட்டுக்காரன் அறுவடை செய்து கொண்டு போய் விடுகிறான்.

Rajiv gandhi equity savings scheme


இதனைத் தவிர்ப்பதற்கு அரசும் ஒரு சில முயற்சிகள் எடுத்தது.

ஒன்று, ELSS என்ற ம்யூச்சல் பண்ட்டில் முதலீடு செய்தால் வரி விலக்கு அறிவித்தார்கள். அதுவும் நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

அடுத்து, நேரடியாக பங்குகளில் முதலீடு செய்தாலும் வரி விலக்கு பெருமளவு ஒரு திட்டத்தை அறிவித்தார்கள். அந்த திட்டத்தின் பெயர். ராஜீவ் காந்தி பங்கு முதலீட்டுத் திட்டம். ஆனால் நடைமுறைக்கு ஒத்து வராத சில விதி முறைகளைக் கொண்டிருந்ததால் அந்த திட்டம் முழுமையாக தோல்வி அடைந்தது.

தோல்வி அடைந்தாலும் அதனை நாம் தெரிந்து கொள்வது நல்லது.

பங்குச்சந்தை முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக தொடங்கப்பட்டது. அதில் 50,000 ரூபாய் அளவுக்கு மிகாமல் முதலீடு செய்ய வேண்டும். இந்த தொகைக்கு 50% வரி விலக்கு பெறலாம். இது ஏற்கனவே உள்ள ஒரு லட்சம் வரி விலக்கு திட்டத்திற்கு மேலும் வரியை சேமிக்க உதவுவது இந்த திட்டத்தில் சாதகமான விஷயம்.

அடுத்து வருவது தான் யாரோ நேரம் போகாமல் எழுதிக் கொடுத்த விதி முறைகள்.

இது வரை பங்கு வர்த்தகம் செய்யாதவர்கள் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் முதலீடு செய்யலாம். அதற்கென்று முகவர்கள் மூலம் தனியான டிமேட் கணக்கு திறக்க வேண்டும்.

அதன் பிறகு Form A என்ற ஒன்றை சமர்பிக்க வேண்டும். இந்த திட்டம் மூலம் அல்லாமல் பங்குகளை வாங்குவதாக இருந்தால் Form B என்ற ஒன்றை சமர்பிக்க வேண்டும். இதில் முதலீடு செய்பவர்கள் வருமானம் வருடத்திற்கு 12 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகையை மூன்று வருடத்திற்கு எதுவும் செய்ய முடியாது. முதல் ஒரு வருடத்திற்கு முதலீடு செய்யும் பங்குகளை மாற்றக் கூடாது. அடுத்த இரு வருடங்களுக்கு முதலீட்டுத் தொகையை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் பங்குகளை மாற்றிக் கொள்ளலாம்.

நினைத்துப் பாருங்கள். ஒரு 5000 தொகையை வரியாக சேமிப்பதற்கு இவ்வளவு விதி முறைகளை போட்டால் யார் வருவார்கள்?

இந்த திட்டத்தை எவருமே தங்கள் ஆயுட்காலத்தில் முதல் மூன்று வருடங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் அதற்கென்று செலவழிக்கும் நேரம் மிக அதிகம்.

இதனால் தான் கடந்த வருடத்தில் இந்தியா முழுமைக்கும் இந்த திட்டம் மூலம் வெறும் 60 கோடி மட்டுமே முதலீடாக பெற முடிந்தது.

சிக்கலான திட்டம். குறைவான வரவேற்பு கிடைத்ததிலும் ஆச்சர்யமில்லை.

எமது அடுத்த போர்ட்போலியோ நவம்பர் 15 அன்று வெளிவருகிறது. விரும்பும் நண்பர்கள் இந்த இணைப்பை பார்க்கலாம். அல்லது muthaleedu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இரண்டு வருடங்களுக்கு 40% தருமளவு போர்ட்போலியோ தயாரிக்கப்படும்.

தொடர்பான பதிவுகள்:
English Summary:
Reviews on Rajiv gandhi equity savings scheme. Due to difficult formalities in demat account opening, plan is lacking to collect fund and low interest with peoples.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்: