கடந்த வாரத்திலே சந்தையில் ஒரு சிறிய திருத்தம் எதிர்பார்க்கப்படுவதாக கூறி இருந்தோம். ஆனால் சில நாட்கள் மட்டும் குறைந்து மீண்டும் சந்தை 28,000 புள்ளிகளிலே நிலை கொண்டுள்ளது.
இது நல்ல விடயம் தான் என்றாலும் வளரும் நாடுகளின் சந்தையை ஒப்பிடுகையில் நமது சந்தை மலிவாக இல்லை. இதனால் தற்போதைய நிலையில் ஒரு சிறு திருத்தும் தேவைப்படுகிறது. இது 26,500~27,000 புள்ளிகள் வரை இருக்கலாம் என்று அனுமானிக்கிறோம்.
கடந்த வாரத்தில் பணவீக்கம் கணிசமாக 1.76% சதவீதமாக குறைந்துள்ளது இந்திய சந்தைக்கு இது மிக முக்கிய நேர்மறை காரணியாகக் கருதபப்டுகிறது. இது கிட்டத்தட்ட 2007க்கு பிறகு பல வருடங்களில் இல்லாத அளவு குறை அளவாகும். இதனால் டிசம்பரில் வட்டி விகிதம் குறையும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
அமெரிக்கா, சவுதி, ரஷ்யா அரசியல் விளையாட்டுகளில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்து கொண்டே செல்கிறது. இன்னும் பார்ரல் கச்சா எண்ணெய் விலை 50$ வரையும் செல்ல வாய்ப்பு உள்ளதாகக் கருதுகிறார்கள்.
இதுவும் இந்தியாவிற்கு பண வீக்க குறைவிற்கு முக்கிய காரணம். இது போக, பெட்ரோல், டீசல் விலைகள் சந்தைக்கேற்ப மாற்றப்படுவதும் எண்ணெய் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது. இப்படி சாதகமான காரணிகளின் தாக்கம் அதிகமாகவே உள்ளதால் சந்தை திருத்தத்தைக் காணவும் மறுக்கிறது.
இன்று சந்தையில் சிறிய எதிர்மறை தாக்கம் இருக்கலாம். கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதார நிலை அவ்வளவு நன்றாக இல்லை.
ஜப்பானின் சந்தை 2% அளவு இன்று குறைந்துள்ளது. கொரியாவிலும் இறக்கங்கள் அதிகமாகவே உள்ளது. சாம்சுங் நிறுவனத்தின் லாபம் 49% லாபம் குறைந்துள்ளது. ஹயுண்டாய் நிறுவன லாபம் 29% குறைந்துள்ளது. இதனால் இந்த நாடுகளின் நாணய மாற்று விகிதங்களில் அதிக மாறுபாடுகள் தெரிகின்றன.
மேலும் ஒன்றாக டிசம்பரில் வட்டி விகிதங்கள் மாற்றப்படாமல் இருந்தால் அதுவும் 300 புள்ளிகள் வரை கீழே இழுத்து விடலாம்.
தற்போதைக்கு இந்த காரணிகள் தான் நமது சந்தையில் திருத்தத்திற்கு காரணமாக அமையலாம். ஆனால் நீண்ட கால நோக்கில் இந்திய சந்தை வலுவாகவே உள்ளது.
இதனால் இந்த வாரத்தில் கொஞ்சம் வேடிக்கை பார்த்து அதன் பிறகு முதலீடை பெருக்குவது நன்றாக இருக்கும்.
நமது போர்ட்போலியோவில் உள்ள HDFC வங்கியில் அந்நிய முதலீடு வரம்பு உயர்வு HDFC வங்கியில் 74% என்று அதிகரிக்கப்பட்டுள்ளது. தாய் நிறுவனமான HDFC யை அந்நிய நிறுவனமாக கருதி உள்ளதால் மேலும் 0.7 சதவீதத்திற்கே வெளி முதலீடு வாய்ப்புள்ளது.
இது தொடர்பான நமது முந்தைய கட்டுரையை இங்கு பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக