வியாழன், 27 நவம்பர், 2014

அதிக காசு உள்ளவர்கள் MRF டயரோடு பங்குகளையும் வாங்கலாம்.

இன்று ஒரு புதிய பங்கை இலவசமாக பரிந்துரை செய்கிறோம். MRF Tyres என்ற நிறுவனத்தை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். நமது சென்னையை தளமாக கொண்டு இயங்கும் நிறுவனம் தான். இதன் முழு விரிவாக்கம் Madras Rubber Factory.

தமிழகத்தில் இருந்தாலும் மலையாளிகளின் ஆதிக்கம் இந்த நிறுவனத்தில் கொஞ்சம் அதிகம் தான். :)இந்த பங்கை நீண்ட காலத்திற்கு முன்னரே கட்டண போர்ட்போலியோவில் பரிந்துரை செய்யலாம் என்று தான் நினைத்து இருந்தோம். பிரச்சினை என்னவென்றால் MRFன் ஒரு பங்கு மட்டும் 33,000 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.

நமது வாசகர்கள் மொத்த போர்ட்போலியோவை ஒரு லட்சத்திற்குள் அடக்கும் சூழ்நிலையில் இந்த பங்கை பரிந்துரை செய்தால் மற்ற பங்குகளுடன் சமநிலை இருக்காது என்று கருதி தவிர்த்து வந்தோம்.

ஆனால் அதிக அளவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் நண்பர்கள் MRF பங்கில் முதலீடு செய்யலாம். எம்மிடம் கேட்டால் FDயில் போட்டு வைப்பவர்கள் கூட இந்த பங்கில் முதலீடு செய்யலாம்.

அந்த அளவு ரிஸ்க் குறைவானது. ஒரு மூன்று வருடங்களுக்கு போட்டு வைத்தால் 70~80% ரிடர்ன் கொடுக்க வாய்ப்புகள் உள்ளது.

நிறுவனத்தை பற்றி சொல்ல வேண்டும் என்ற அவசியமே இருக்காது என்று நினைக்கிறோம். அந்த அளவிற்கு பிராண்ட் பிரபலமானது. ஆட்டோ மொபைல் நிறுவனங்களுக்கு தேவையான டயர்களை உற்பத்தி செய்கிறது.

நேற்று முன்தினம் வெளியான நிதி நிலை முடிவுகள் மிக நன்றாக அமைந்தது ஒரே நாளில் பங்கு விலையை 2000 ரூபாய் அளவிற்கு ஏற்றி விட்டது. விற்பனை 9% அதிகரித்தும், லாபம் உயர்ந்ததும் இதற்கு முக்கிய காரணம்.

டயர் நிறுவனங்களுக்கு முக்கியமான சந்தை Replacement Market என்பது. அதாவது கார்களின் டயர்கள் பழுதடைதல் அல்லது உத்தரவாதம் முடியும் போது நுகர்வோர்கள் தாங்களாகவே டயர்களை மாற்றுவது. இந்த சந்தையில் MRF இன்னும் தனித்தன்மையோடு உள்ளது.

கார் வைத்து இருப்பவர்கள் டயர்களின் தரங்களுக்கு அதி முக்கியத்துவம் கொடுப்பதால் நல்ல பிராண்ட் நிறுவனங்களை நாடி செல்வது MRF நிறுவனத்திற்கு சாதகமான விடயமாக உள்ளது.

இது போக, கடின மோட்டார் வாகனங்கள், கார், பைக் என்று நிறுவனத்தின் தயாரிப்புகள் நன்கு பிரிக்கப்பட்டு சமநிலையைக் கொடுக்கிறது.

தற்போது ரப்பர் மூலப் பொருட்கள் விலைகளும் கணிசமாக குறைந்த நிலையில் தயாரிப்பு செலவுகள் கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது.

ஒற்றைப் பங்கில் மட்டும் முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்கள் அல்லது FDயில் போட்டு வைப்பதற்கு பதிலாக பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்கள் அல்லது ஆக்டிவ் பங்கு வர்த்தகம் செய்யாதவர்கள்  இந்த பங்கை வாங்கி விட்டு கொஞ்ச நாள் கழித்து பார்த்தால் நல்ல தொகை ரிடர்னாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தபோதைய ஒரு பங்கு விலை 33,000.

பங்கு விலை அதிகமாக உள்ளதால் Liquidity குறைவாக உள்ளது தான் ஒரு எதிர்மறைக் காரணி..

எமது அடுத்த கட்டண போர்ட்போலியோ டிசம்பரில் வெளிவருகிறது. சரியான தேதியை அடுத்த வாரம் அறிவிக்கிறோம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்:

English Summary:
MRF stock is recommended for long term. It is having high potential in growth. But liquidity is low due to high priced stock.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக