புதன், 26 நவம்பர், 2014

தனது வியாபர எல்லையை சுருக்கும் சாம்சங்

சாம்சங் என்பது ஒரு எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனமாக நமக்கு அறியப்பட்டு இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி இன்ஜினியரிங், மருத்துவம், சில்லறை வர்த்தகம், பாதுகாப்பு ஆயுதங்கள், கப்பல் கட்டுதல், கெமிக்கல் என்று பல பரிமாணங்கள் சாம்சங் குழுமத்திற்கு உள்ளது.

  • மலேசியாவில் உள்ள வானைத் தொடும் உயர்ந்த கட்டிடத்தைக் கட்டியது சாம்சங் இன்ஜினியரிங் நிறுவனம். 
  • உலகில் மிகப்பெரிய கப்பலை வடிவமைத்துள்ளது சாம்சங் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம். 
  • மொபைல் போன் வியாபாரத்தில் முதல் இடம்.
இப்படி, அவர்களது சாதனைகள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

சாம்சங் முதல் அலுவலகம் 

இந்திய அரசின் வருட பட்ஜெட் தொகை 270 பில்லியன் டாலர். அதே நேரத்தில் சாம்சங் குழுமத்தின் ஒரு வருட வருமானம் 327 பில்லியன் டாலர். ஒரு பெரிய நாடான இந்திய அரசின் வருமானத்தை விட அதிக வருமானத்தை ஒரு தனியார் நிறுவனம் பெற்று வருகிறது.

இது கிட்டத்தட்ட கொரியா நாட்டின் ஜிடிபியில் 20% என்பதாகும். அதனால் சாம்சங் நிறுவனத்திற்கு ஏற்படும் ஒரு பிரச்சினை கொரியா நாட்டின் பொருளாதரத்தில் கணிசமான அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் சாம்சங் கீழே வீழ்வதை கொரிய அரசும் விரும்புவதில்லை.

ஆனால் இந்த வருடத்தை பொறுத்த வரை சாம்சங் நிறுவனத்திற்கு அவ்வளவு நல்ல வருடமாக அமையவில்லை. மலிவு விலை மொபைல்கள் வந்ததன் காரணமாக மொபைல் போன் விற்பனையில் 40% அளவு வீழ்ச்சி அடைந்தது. முக்கியமான செர்வர்கள் கொண்டிருந்த ஒரு கட்டிடம் தீ விபத்தில் சிக்கியது. இப்படி சில பிரச்சினைகள் சூழ்ந்தே காணப்பட்டது.

இது போக சாம்சங் நிறுவனத்தின் தலைவர் மாரடைப்பு வந்து கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதனால் அடுத்த தலைமுறைக்கு திட்டமிட வேண்டியதும் அவசியமானது.

ஆனால் கொரியாவை பொறுத்தவரை தந்தை மகனுக்கு 100 ரூபாய் சொத்தைக் கொடுத்தால் 40 ரூபாயை வரியாக கட்டி விட வேண்டும். இதனை Inheritence Tax என்று சொல்கிறார்கள்.

இதனால் 11 ட்ரில்லியன் டாலர் அளவு நிறுவன பங்குகள் அவரது ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களுக்கு செல்லும் போது அவர்கள் 5 ட்ரில்லியன் டாலர் தொகையை அரசுக்கு வரியாக கட்ட வேண்டும்.

இவ்வளவு பெரிய தொகையை திரட்டுவது என்பது சாதராண விசயமல்ல. அதனால் தமக்கு சம்பந்தமில்லாத வியாபர தொடர்புடைய நிறுவனங்களை விற்க முனைந்துள்ளார்கள்.




இதன்படி இன்று பாதுகாப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் டெக்வின், சாம்சங் கெமிக்கல், Samsung Thales, சாம்சங் பெட்ரோகெமிக்கல் போன்ற நிறுவனங்களை கொரியாவின் ஹன்வா குழுமத்திற்கு விற்று உள்ளார்கள். இதன் மூலம் 1.7 பில்லியன் டாலர் நிறுவனத்திற்கு கிடைக்கும்.

இதனால் வேதிப் பொருட்கள் மற்றும் பாதுகாப்புத் துறையை விட்டு முற்றிலும் விலகுகிறார்கள். இந்த டீல்கள் மூலம் சாம்சங் தன்னுடைய வலுவான எலெக்ட்ரானிக்ஸ், ஐடி, இன்ஜினியரிங் போன்ற துறைகளில் மட்டும் கவனம் செலுத்துவதாக முடிவு செய்துள்ளது.

ஆமாம். சில சமயங்களில் சம்பந்தமில்லாத தொழில்களை நிர்வகிப்பது என்பது மிகக் கடினமே.. சாம்சங் அடுத்த தலைமுறையை நோக்கி வேகமாக செல்கிறது. ஏகப்பட்ட மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

English Summary:
Samsung group sold their core companies from Chemical and defence fields. Samsung is trying further to focus on only Mobile, Engineering and IT sectors. The inheritence tax makes big restructuring among samsung companies

தொடர்புடைய கட்டுரைகள்:

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக