செவ்வாய், 25 நவம்பர், 2014

சந்தையில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி போடலாம்

நேற்று இந்திய சந்தையில் இருநூறு புள்ளிகளுக்கும்  மேல் சரிவு காணப்பட்டது. இறுதியாக 160 புள்ளிகளில் சரிவடைந்து முடிவடைந்தது.


ஆனால் மத்திய தர மற்றும் சிறிய நிறுவன பங்குகளைப் பார்த்தால் சரிவு மிக அதிகமாகவே இருந்தது. கிட்டத்தட்ட 3% அளவு சரிந்தன. இந்த சிறு நிறுவன பங்குகள் கடந்த மூன்று வர்த்தக நாட்களாகவே இறங்கு முகத்தில் இருப்பதைக் கவனிக்கவும்.சென்செக்ஸ் புள்ளிகள் என்பது பெரிய நிறுவனங்களை மட்டுமே அடிப்படையாக வைத்தே இயங்குகின்றது. தற்போதைய காளையின் பிடியில் இருக்கும் சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகளை மட்டும் கண்கானித்தால் போதாது.

நமது போர்ட்போலியோவில் உள்ள நிறுவன பங்குகளின் நிலைமைகளை தனித்தனியாக கண்காணிப்பது தற்போது அவசியம்.

போர்ட்போலியோவில் சிறு நிறுவனங்கள் வைத்து இருந்தால் அந்த பங்குகளின் நிலைமைகளை உற்றுக் கவனித்து வாருங்கள். நிறைய சிறு பங்குகள் 52 வார உயர்வு நிலையிலிருந்து 10% க்கும் கீழே வந்துள்ளதையும் கவனிக்கிறோம். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த பங்குகளை அதிகரித்து வாருங்கள். சராசரி நிலையை எட்ட பெரிதும் உதவும்!

சந்தையைப் பொறுத்த வரை இன்னும் இறக்கங்களுக்கு அதிக வாய்ப்புகள்  உள்ளதாகவும் கணிக்கப்படுகிறது. ஆனால் போதிய அளவு எதிர்மறை காரணிகள் இல்லாததால் குறையும் பங்குகள் உடனே மீண்டும் எழுந்து விடுகின்றன. இதனால் கொஞ்சம் விரைவாக செயல்படுவது அவசியமாக உள்ளது.

அடுத்த வாரம் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளது. சந்தை வட்டி விகிதங்கள் குறையும் என்ற பெரிய எதிர்பார்ப்பில் சந்தை உள்ளது. ஆனால் வட்டி விகிதங்கள் குறையாமல் இருக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

அந்த சூழ்நிலையில் அதிக அளவு இறக்கங்களை எதிர்பார்க்கலாம். ஆனால் குறைவான கால அளவே இந்த இறக்கங்கள் இருக்கும் வாய்ப்பு இருப்பதால் உடனே வாங்கிப் போடுவது தான் சரியாக இருக்கும்!

English Summary:
Buy on DIPS helps to average stock price.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக