திங்கள், 16 டிசம்பர், 2013

டிமேட் கணக்கு எவ்வாறு ஆரம்பிக்க?(ப.ஆ- 6)

கடந்தப் பதிவில் டிமேட் கணக்கை எப்படிப் பயன்படுத்துவது? (ப.ஆ - 5) என்பது பற்றி எழுதி இருந்தோம்.

சில நண்பர்கள் டிமேட் கணக்கு ஆரம்பிப்பது எப்படி என்று கேட்டு இருந்தார்கள்.இது ஒன்றும் கடினமான செயல் அல்ல..தற்பொழுது நிறைய வங்கிகள், நிறுவனங்கள் இந்த வசதியினை வழங்குகின்றன.

இதற்கான வழிமுறைகளை இங்கு தொகுத்து உள்ளோம்.

- முதலில் உங்களது DP என்று அழைக்கப்படும் Depositary Participant யாரென்று தேர்ந்தேடுக்கவும்.  பார்க்கத் தான் இந்த வார்த்தை கடினமாக இருக்கிறது.
DP என்பது டிமேட் சேவையை வழங்கும் அமைப்பு. இது ICICI Direct, Sharekhan, SBI என்று எதுவாகவும் இருக்கலாம். இவற்றில் ஒன்றை எப்படி தேர்தெடுக்க என்பதை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.


- ஒரு DPயை தேர்தெடுத்த பிறகு அவர்களது இணைய தளத்தில் பதிவு செய்தாலே முகவர்கள் நம்மைத் தேடி வந்து விடுவார்கள். அல்லது வங்கியையும் அணுகலாம்.

- PAN card, ID proof, Resident prrof, photo போன்றவற்றை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களது வங்கிக் கணக்கு எண்ணையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த வங்கிக் கணக்கு எண் Trading Account உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

- இப்பொழுது டிமேட் கணக்கு ஆரம்பிக்க கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியது இல்லை என்றே நினைக்கிறோம்.

- உங்களது கையெழுத்து நிறைய இடங்களில் போட வேண்டி இருக்கும். அதனால் அணைத்தையும் படிக்க நேரம் இருக்காது. இணையத்திலே எல்லா விதிமுறைகளையும் படித்து விடுங்கள்.

- முகவரிடம் பதிவு செய்த 15 நாட்களுக்குள் உங்களுக்கு ஒரு அடையாள எண், user name, password போன்றவை அஞ்சலில் கிடைக்கும்.

- அதன் பிறகு அந்த தகவல்களை வைத்து login செய்து உங்களது பங்கு வர்த்தகத்தை ஆரம்பிக்கலாம்.

- இந்த டிமேட் கணக்கினை Mutual Fund, Insurance, ULIP போன்ற பண்ட்களை வாங்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- வங்கி கணக்கு போல் குறைந்தபட்சம் இத்தனை பங்குகள் வைத்து இருக்க வேண்டும் என்று விதிமுறைகள் ஏதும் இல்லை. பங்குகளை வாங்காமால் கூட வைத்துக் கொள்ளலாம். ஆனால் வருடக் கட்டணம் பிடித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

'பங்குச்சந்தை ஆரம்பம்' என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

English Summary:
How to open demat accounts? The bankers are coming with the package of Demat Account, Trading Account and Bank account together. Easiest method for investing in stocks. ICICI, HDFC, SBI, Sharekhan are offering demat for both NRI and local Indians.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

 1. வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கான (NRE) Demat account பற்றி பதிவிடவும்
  மிக்க நன்றி தோழரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே! கண்டிப்பாக நீங்கள் சொல்லியவாறு ஒரு பதிவினை எழுதுகிறோம்.

   நீக்கு