வியாழன், 12 டிசம்பர், 2013

டிமேட் கணக்கை எப்படிப் பயன்படுத்துவது? (ப.ஆ - 5)

பங்குச்சந்தை ஆரம்பம் தொடரின் இந்த பாகத்தில் நடைமுறையில் டிமேட் கணக்கை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.


தொடரின் சென்ற பதிவில் பங்குகளை எப்படி வாங்குவது பற்றி எழுதியிருந்தோம். அதில் டிமேட் கணக்கு பற்றிய ஒரு சிறிய அறிமுகம் கொடுத்து இருந்தோம்.

முந்தைய பாகத்தை இங்கு பார்க்கலாம்.
பங்குச்சந்தையில் பங்குகளை எப்படி வாங்குவது? (ப.ஆ - 4)

இந்த பாகத்தில் நடைமுறையில் டிமேட் கணக்கை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.

பொதுவாக பங்குகளை வாங்கும் போது மூன்று விதமான கணக்குகள் தேவை.
1. Demat Account
2. Trading Account
3. Bank Account



Trading account:

இந்த கணக்கு பங்குகளை வாங்குவதற்க்கும், விற்பதற்கும் பங்குச்சந்தைக்கும் உங்களுக்கும் இடையே உள்ள இணைப்பு பாலமாக உள்ளது. சில சமயங்களில் பங்கு தரகர்கள் என்றும் குறிப்பிடுவார்கள்.

பொதுவாக வங்கிகள், சில தனியார் நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன. இதற்க்கென்று வருட கட்டணமாக 400 முதல் 500 வரை வசூலிப்பார்கள்.

அது போல் நீங்கள் ஒவ்வொரு முறை பங்கை வாங்கும், விற்கும் போது ஒரு குறிப்பிட்ட சதவீதம்(~1%) கமிசனாக கொடுக்க வேண்டும்.

Demat Account:

இது பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவருக்கும் வழங்கப்படும் ஒரு தனிப்பட்ட அடையாள எண்.

நாம் வாங்கி, விற்கும் அணைத்து பங்குகளும் இந்த எண்ணுடன் இணைப்பு செய்யப்பட்டிருக்கும். இதன் மூலம் பங்கினால் அடையும் லாபங்களுக்கு வரி கணக்கிடுவது அரசிற்கு எளிதாகிறது. இன்னும் பல பலன்களும் உள்ளன.

இந்த எண் Trading account உடன் இணைப்பு செய்யப்பட்டிருக்கும்.

இந்த கணக்கு Trading accountயை மாற்றினாலும் மாறாதது.

உதாரணத்துக்கு நீங்கள் ICICI Directல் Trading Account வைத்து இருந்து பின்னர் ShareKhan போன்று பிற நிறுவனங்கள் வழங்கும் கணக்குகளுக்கு மாறினாலும். இந்த அடையாள எண் மாறாது.

Bank Account:

நீங்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் போது எப்படி பணம் பரிமாற்றம் செய்யப்படும்? அதற்கு தான் ஏற்கனவே உள்ள உங்கள் வங்கி கணக்கை Trading account உடன் இணைப்பு செய்து இருப்பார்கள்.

இந்த கணக்கில் இருந்து உங்கள் Trading accountக்கு  பணத்தை அனுப்பலாம், எடுத்தும் கொள்ளலாம்.

நிறுவனங்கள் வழங்கும் போனஸ், ஈவுத்தொகை போன்றவை இந்த வங்கிக் கணக்கிற்கு தான் அனுப்பப்படும்.

பொதுவாக Bank Account, Trading account போன்றவற்றை ஒரே வங்கியில் வைத்து இருப்பது பணத்தை கையாள எளிதாக இருக்கும்.

இந்த டிமேட் சேவைகள் வங்கிகள், வங்கிகள் அல்லாத நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. இவற்றுள் ஒன்றை எப்படித் தேர்ந்தெடுப்பது? என்பதைப் பற்றி அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

குறிப்பு:
எமக்கு முதலீடு ஆலோசகர்கள், டிமேட் முகவர்கள், வங்கிக்கடன் முகவகர்கள், நாணய வர்த்தகம்  பற்றிய விவரங்கள் கேட்டு அதிக மின்னஞ்சல்கள் வருகின்றன.

இதில் பணி புரிபவர்கள் தங்களது தொடர்புகளை muthaleedu@gmail.com என்ற முகவரியில் பகிர்ந்து கொள்ளலாம். இந்த விவரங்கள் ஒரு தனிப் பிரிவாக எமது தளத்திலும், எம்மிடம் பதிவு செய்த வாசகர்கள் மின்னஞ்சல் மூலமும் , முகநூலிலும் பகிரப்படும்.

English Summary:
How to use demat accounts? The bankers are coming with the package of Demat Account, Trading Account and Bank account together. Easiest methos for investing in stocks.


பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இந்த இணைப்பில் பார்க்கலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

6 கருத்துகள்:

  1. மிக்க நன்றிகள் இந்தியன் பேங்க் -ல் கூட டீமாட் அக்கௌன்ட் கொடுக்கிறார்கள். அதை உபயோகிக்கலாமா

    பதிலளிநீக்கு
  2. இந்தியன் வங்கி டிமேட் சேவைகளைப் பற்றி அவ்வளவாக தெரியவில்லை!

    பதிலளிநீக்கு
  3. Hdfc vs relaigare?.which one is better for small investor?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறு முதலீட்டாளர்கள் தாங்கள் வங்கி கணக்கு வைத்துள்ள வங்கியில் டிமேட் சேவையைப் பெறுவது எளிதாக இருக்கும். நீங்கள் சொன்னதில் Hdfc OK.

      நீக்கு