பங்குச்சந்தை ஆரம்பம் தொடரின் நான்காம் பகுதி இது.
இந்த பதிவை 'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் சரியான தொடர்ச்சிக்காக அடுத்த சில பதிவுகளில் தான் எழுதுவதாக இருந்தோம்.
ஆனால் பல நண்பர்கள் ஒரே மாதிரியான கேள்வியுடன் மின் அஞ்சல் அனுப்பி இருந்தனர். அவர்களுக்காக இந்த பதிவை கொஞ்சம் முன்னதாக எழுதுகிறோம்.
தொடரின் முந்தைய பகுதி இங்கே உள்ளது.
அதாவது கேள்வி இது தான்.. பங்குச்சந்தையில் பங்குகளை எப்படி வாங்குவது?
90களின் முன் நோக்கினால் பங்குகளை வாங்கினால் காகிதத்தில் சர்டிபிகேட் வடிவில் தான் அத்தாட்சியைக் கொடுத்து வந்தார்கள்.
ஆனால் அதில் பல பிரச்சனைகள் இருந்து வந்தன. இதற்கென்று தனியாக ஸ்டாம்ப் டுட்டி வாங்கப்பட்டது. இது போக பல போலி சான்றிதள்களும் வெளியாக ஆரம்பித்தன. பங்குகளை வாங்க, விற்க தாமதம் ஏற்பட்டது.
இப்படிப் பல விதமான இடைஞ்சல்களால் பங்கு வர்த்தகம் முழுவதுமாக மின் வடிவத்தில் மாற்றப்பட்டது.
ஒவ்வொரு பங்கு வர்ததகருக்கும் Demat Account என்ற பெயரில் கணக்கு ஆரம்பிக்கப்பட்டது. இந்த Demat Account பயன்படுத்துவதற்கு தற்போதுள்ள மின்னணு வங்கி முறை போன்று ஒவ்வொருவருக்கும் ரகசியமான Username மற்றும் Password வழங்கப்பட்டது.
இந்த கணக்கினை அவர்களது வங்கி கணக்குடன் இணைப்பு செய்வதன் மூலம் எளிதில் முதலீடு செய்யும் பணத்தை வங்கியில் இருந்து எடுத்து கொள்ளலாம். அது போல் பங்குகளை விற்றுக் கிடைக்கும் வருமானத்தையும் எளிதில் தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றி கொள்ளளலாம். இந்த Demat Account எண் எல்லா பங்கு வர்த்தகங்களின் போதும் குறிக்கப்பட்டிருக்கும்.
நிறுவனங்கள் தங்கள் ஈவுத் தொகையை(DIVIDEND) வழங்கும் போதும் Demat Account பயன்படுத்தி வழங்கும் இந்த ஈவுத் தொகை Demat கணக்குடன் இணைந்துள்ள வங்கி கணக்கிற்கு தானாகவே மாறி விடும்.
இந்த Demat கணக்கினால் நிறுவனம், முதலீட்டாளர், முதலீடு தரகர் என்று மூவரும் முப்பரிமான முறையில் பயன் பெற்று வந்தனர்.
நிறுவனங்களுக்கு எளிதில் கணக்குகளை கண்காணிக்க முடிந்தது. தேவையில்லாத காகிதச் செலவுகள் குறைந்தது.
முதலீட்டார்களுக்கு தாமதங்கள், தேவையல்லாத பதிவுக் கட்டணங்கள் போன்றவற்றை தவிர்த்தது. எங்கிருந்து எப்பொழுது வேண்டுமானாலும் பங்கு வர்த்தகம் செய்ய முடிந்தது.
தரகர்களுக்கு தாமதமான settlementகளால் ஏற்பட்ட நஷ்டத்தை குறைத்தது. இது போக போலிப்பங்குகளின் எண்ணிக்கையும் குறைந்தது.
இந்த Demat சேவைகளுக்கு கணக்கு திறப்பு கட்டணம், வருடாந்திரக் கட்டணம், பங்குகள வாங்கும் போதும் விற்கும் போதும் தரகுக் கட்டணம் என்று மூன்று விதங்களில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. இவை ஆங்கிலத்தில் Account Opening Fee, Annual Maintenance Fee மற்றும் Brokerage Fee என்று குறிப்பிடப்பட்டது.
இந்த சேவைகள் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள், மற்றும் சில நிறுவனங்களால் வழங்கப்பட்டன. தற்பொழுது Demat சேவை வழங்கும் நிறுவனங்கள் மிக அதிகமாக உள்ளன.
அவற்றுள் ஒன்றை தேர்ந்தெடுப்பது எப்படி என்பதில் சில குழப்பங்கள் வர வாய்ப்பு உள்ளது. அதனைப் பற்றி அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.
பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இந்த இணைப்பில் பார்க்கலாம்.
English Summary:
How to buy stocks in share market? Electronic Demat account easies the way to trade in stocks. ICICI, HDFC, Sharekhan, Kotak Bank, etc are providing demat services in India.
இந்த பதிவை 'பங்குச்சந்தை ஆரம்பம்' தொடரின் சரியான தொடர்ச்சிக்காக அடுத்த சில பதிவுகளில் தான் எழுதுவதாக இருந்தோம்.
ஆனால் பல நண்பர்கள் ஒரே மாதிரியான கேள்வியுடன் மின் அஞ்சல் அனுப்பி இருந்தனர். அவர்களுக்காக இந்த பதிவை கொஞ்சம் முன்னதாக எழுதுகிறோம்.
தொடரின் முந்தைய பகுதி இங்கே உள்ளது.
ஏன் ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிட விரும்புகிறது? (ப.ஆ - 3)
அதாவது கேள்வி இது தான்.. பங்குச்சந்தையில் பங்குகளை எப்படி வாங்குவது?
90களின் முன் நோக்கினால் பங்குகளை வாங்கினால் காகிதத்தில் சர்டிபிகேட் வடிவில் தான் அத்தாட்சியைக் கொடுத்து வந்தார்கள்.
ஆனால் அதில் பல பிரச்சனைகள் இருந்து வந்தன. இதற்கென்று தனியாக ஸ்டாம்ப் டுட்டி வாங்கப்பட்டது. இது போக பல போலி சான்றிதள்களும் வெளியாக ஆரம்பித்தன. பங்குகளை வாங்க, விற்க தாமதம் ஏற்பட்டது.
இப்படிப் பல விதமான இடைஞ்சல்களால் பங்கு வர்த்தகம் முழுவதுமாக மின் வடிவத்தில் மாற்றப்பட்டது.
ஒவ்வொரு பங்கு வர்ததகருக்கும் Demat Account என்ற பெயரில் கணக்கு ஆரம்பிக்கப்பட்டது. இந்த Demat Account பயன்படுத்துவதற்கு தற்போதுள்ள மின்னணு வங்கி முறை போன்று ஒவ்வொருவருக்கும் ரகசியமான Username மற்றும் Password வழங்கப்பட்டது.
இந்த கணக்கினை அவர்களது வங்கி கணக்குடன் இணைப்பு செய்வதன் மூலம் எளிதில் முதலீடு செய்யும் பணத்தை வங்கியில் இருந்து எடுத்து கொள்ளலாம். அது போல் பங்குகளை விற்றுக் கிடைக்கும் வருமானத்தையும் எளிதில் தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றி கொள்ளளலாம். இந்த Demat Account எண் எல்லா பங்கு வர்த்தகங்களின் போதும் குறிக்கப்பட்டிருக்கும்.
நிறுவனங்கள் தங்கள் ஈவுத் தொகையை(DIVIDEND) வழங்கும் போதும் Demat Account பயன்படுத்தி வழங்கும் இந்த ஈவுத் தொகை Demat கணக்குடன் இணைந்துள்ள வங்கி கணக்கிற்கு தானாகவே மாறி விடும்.
இந்த Demat கணக்கினால் நிறுவனம், முதலீட்டாளர், முதலீடு தரகர் என்று மூவரும் முப்பரிமான முறையில் பயன் பெற்று வந்தனர்.
நிறுவனங்களுக்கு எளிதில் கணக்குகளை கண்காணிக்க முடிந்தது. தேவையில்லாத காகிதச் செலவுகள் குறைந்தது.
முதலீட்டார்களுக்கு தாமதங்கள், தேவையல்லாத பதிவுக் கட்டணங்கள் போன்றவற்றை தவிர்த்தது. எங்கிருந்து எப்பொழுது வேண்டுமானாலும் பங்கு வர்த்தகம் செய்ய முடிந்தது.
தரகர்களுக்கு தாமதமான settlementகளால் ஏற்பட்ட நஷ்டத்தை குறைத்தது. இது போக போலிப்பங்குகளின் எண்ணிக்கையும் குறைந்தது.
இந்த சேவைகள் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள், மற்றும் சில நிறுவனங்களால் வழங்கப்பட்டன. தற்பொழுது Demat சேவை வழங்கும் நிறுவனங்கள் மிக அதிகமாக உள்ளன.
அவற்றுள் ஒன்றை தேர்ந்தெடுப்பது எப்படி என்பதில் சில குழப்பங்கள் வர வாய்ப்பு உள்ளது. அதனைப் பற்றி அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.
பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இந்த இணைப்பில் பார்க்கலாம்.
English Summary:
How to buy stocks in share market? Electronic Demat account easies the way to trade in stocks. ICICI, HDFC, Sharekhan, Kotak Bank, etc are providing demat services in India.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக