திங்கள், 17 நவம்பர், 2014

பொருளாதார வீழ்ச்சிக்குள் நுழையும் ஜப்பான்

ஒரு நாட்டின் தொழில் உற்பத்தி (GDP) தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக எதிர்மறையில் சென்றால் அந்த பொருளாதாரம் தேக்க நிலைக்கு (RECESSION) செல்கிறது என்று குறிப்பிடப்படுகிறது. அந்த வரையறையின் படி, ஜப்பான் தற்போது பொருளாதார தேக்க நிலைக்கு சென்றுள்ளது.


ஏற்கனவே ஐரோப்பா பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் போது ஜப்பானின் இந்த நிலை உலக அளவில் அதிகமாக உற்று நோக்கப்படுகிறது. ஐரோப்பா தொடர்பான கட்டுரையை இங்கு பார்க்க..



ஜப்பானைப் பொறுத்த வரை சபிக்கப்பட்ட பூமி என்றே சொல்லலாம். வருடந்தோறும் பூகம்பங்களும், சுனாமிகளும், எரிமலை வெடிப்புகளும் தொடர்ந்து பதம் பார்த்து வந்து கொண்டே இருக்கும். இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுகள் வீசப்பட்ட பிறகு நாடு முற்றிலும் சிதைந்து இருந்தது. இது தவிர தங்கம், கச்சா எண்ணெய், நிலக்கரி என்று இயற்கை வளங்களும் கிடையாது.

இதனால் 'மக்களே அந்த நாட்டின் செல்வங்கள்' என்று கருதி ஏற்றுமதி சார்ந்த பொருளாதார மாடலை தேர்ந்து எடுத்தார்கள். அதாவது மூலப்பொருளை இறக்குமதி செய்து அதனை தங்கள் திறனை பயன்படுத்தி பயன்படும் பொருளாக மாற்றி மீண்டும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து விடுவார்கள். அப்படி வளர்ந்து தான் ஜப்பான் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறி உள்ளது. உலக வங்கிக்கு அதிக அளவு கடன் கொடுக்கும் நாடும் ஜப்பான் தான்.ஆனால் நம்மை விட பத்து மடங்கு குட்டி நாடு.

இதே ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை தான் பின்னர் சீனா, கொரியா போன்ற நாடுகள் பின்பற்றின. கொரியாவின் சாம்சங், எல்ஜி, ஹயுண்டாய் போன்ற நிறுவனங்கள் ஜப்பானின் சோனி, பானசோனிக், டொயோட்டா நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிய போது ஜப்பானின் பொருளாதாரம் சரியத் துவங்கியது. இந்த நிலை கிட்டத்தட்ட இருபது வருடங்களாக தொடர்கிறது.

அபேயுடன் மோடி 


ஆனால் இன்னும் தரம் என்று பார்க்கும் போது ஜப்பானிய பொருட்களின் பக்கத்தில் சீனா, கொரியா போன்றவை பக்கத்தில் வருவது கஷ்டமே. தற்போது மக்கள் "USE and THROW" கலாச்சாரத்தில் இருப்பதால் சீனா, கொரியா போன்றவை தற்காலிகமாக வெற்றி பெறலாம். மீண்டும் மக்கள்  தரத்தை நோக்கி திரும்பும் போது இவர்கள் பாடு திண்டாட்டம் தான்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஜப்பானிய பிரதமராக அபே என்பவர் பொறுப்பேற்றார். மோடி மூலம் நமக்கு இந்த பெயர் பிரபலமாகி இருக்கலாம். அபேயை மக்கள் மலை போல் நம்பி இருந்தார்கள். அவர்கள் நம்பிக்கைக்கேற்ப முதல் வருடத்தில் ஜப்பான் சிறிது மீட்சியை சந்தித்தது. ஆனால் அவரது இன்னொரு நடவடிக்கை மூலமாக மீண்டும் எதிர்மறைக்கு சென்றது.

ஆறு மாதங்களுக்கு முன்பு விற்பனை வரியை 5% என்பதிலிருந்து 8% என்று கூட்டினார். அது கடுமையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விட்டது. திடீரென்று வரி இரண்டு மடங்கு அளவு அதிகரிக்கப்பட்டதில் பொருட்கள் விலை கணிசமாக அதிகரித்து விட்டது. இதனால் பணவீக்கம் 32 ஆண்டுகள் இல்லாத அளவு உயர்ந்து விட்டது. பொருட்கள் விலை அதிகரித்ததால் மக்கள் செலவை கணிசமாக குறைத்து விட்டார்கள். இதனால்  தேவை குறைந்து தொழில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

எதிர்மறையில் GDP


கடந்த காலாண்டில் 7.1% அளவு GDP சரிந்தது. இந்த காலாண்டில் நேர்மறையாக 2.1% அதிகரிக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் எதிர்பார்ப்பிற்கு மாறாக 1.6% எதிர்மறையில் சென்று விட்டது. தொடர்ந்து இரண்டு காலாண்டுகள் எதிர்மறையில் சென்றதால் தற்போது தேக்க நிலைக்கு சென்று விட்டார்கள்.

இதனால் இன்னொரு முறையும் வரி விதிப்பை கூட்ட நினைத்து இருந்த அபே கொஞ்சம் பின் வாங்கி உள்ளார். அடுத்த வரி உயர்வை தள்ளிப் போட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் அபேயின் வேலை மக்களை வாங்க வைப்பதே. வரியைப் போடுவதல்ல..இது இந்திய ஆட்சியாளர்களுக்கும் ஜப்பான் மூலம் கிடைத்து இருக்கும் அருமையான பாடம்.

தொடர்புடைய கட்டுரைகள்:


English Summary:
Japan enters into recession. Two consecutive quarters are showing negative financial performance. Consumption reduced more by high taxes.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. Dear Mr Rama, what do you think, will these Japan Index make any huge impact on our market.. is japan is having any dominance of our share market like other US and Europeans have... even then it is understand we got somuch positive things of Curde oil fall, downfall inflation, interest reduction expectation... with these it is my presumption our market is in healthy conditions,, if it could be minor correction expected not like recession... looking for your thought accordingly I may have to make my strategy for holding/accumulating..for the coming months....

    பதிலளிநீக்கு
  2. Dear Prabhu,

    Thanks for your comments!

    Since Europe and Japan are our closest partner, there might be some stress on Indian share markets. Anyway due to strong Indian market conditions, the down fall may limited up to 10% from now. I recommend to go for slow pace of stock accommodation for next 3 months. Try to avoid the companies which is exporting to Japan and Europe. After next Qtr data of these countries, we can get more clarities. You can HOLD the stocks for long term.

    பதிலளிநீக்கு