சனி, 10 மே, 2014

போர்ட்போலியோவில் பாய்ந்தோடும் பென்னி ஸ்டாக்குகள் (ப.ஆ - 14)

பொதுவாக பென்னி ஸ்டாக்குகள் என்பது ஆரம்ப நிலையில் உள்ள நிறுவனங்களின் பங்குகள். அதாவது முக மதிப்புடன் ஒத்து வர்த்தகமாகிக் கொண்டிருக்கும் பங்குகள்.

'பங்குச்சந்தை ஆரம்பம்' என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இங்கு காணலாம்.

ஒரு போர்ட்போலியோவை உருவாக்கும் போது 30 முதல் 40 சதவீதம் வரை இந்த மாதிரி வளரும் நிறுவனங்களை வைத்துக் கொள்வது வழக்கம்.

ஏனென்றால், ஏற்கனவே வளர்ந்த மிகப் பெரிய நிறுவனங்களின் வளர்ச்சி ஒரு எல்லையைத் தொட்டிருக்கும். அதன் பிறகு துறையுடன் ஒத்த சராசரி வளர்ச்சியை மட்டுமே அந்த நிறுவனங்கள் தருவது வழக்கம். அதாவது வருடத்திற்கு 15 முதல் 25 சதவீத ரிடர்ன் அளவே வளர்ந்த நிறுவனங்களிடம் எதிர்பார்க்கலாம்.

ஆனால், சிறிய நிறுவனங்களின் வளர்ச்சி என்பது நிறுவனத்தின் ஆரம்ப பத்து வருடங்களில் மிக அதிகமாக இருக்கும். இதனால் பங்குகளும் எதிர்பாராத அளவில் லாபங்கள் கொடுக்கும் வாய்ப்புள்ளது.

சிறு செடிதான் பெரிய மரமாகிறது


நினைத்துப் பாருங்கள், விப்ரோவில் முப்பது வருடங்கள் முன் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து இருந்தால் தற்போது 43.6 கோடிக்கு நாம் அதிபதியாக இருக்கலாம். பணவீக்கம் போன்றவற்றை கழித்துப் பார்த்தாலும் இந்த 43.6 கோடி என்பது கணிசமான லாபமே.

விவரங்களுக்கு எமது முந்தைய பதிவைப் பார்க்க..

ஆனால், அந்த சமயங்களில் விப்ரோ என்பது ஒரு மிகச்சிறிய நிறுவனம். அதாவது ஒரு பென்னி ஸ்டாக். ஒரு புதிய துறையில், புதிய பங்கில் முதலீடு செய்ய அனைவரும் பயப்படுவர். கொஞ்சம் கணித்து ரிஸ்க் எடுத்து இருந்தால், முதலீடு பன்மடங்காயிருக்கும்.

ஆனால் தற்போது விப்ரோவில் முதலீடு செய்தால் அந்த அளவு லாபம் எதிர்பார்க்க முடியாது. காரணம் என்னவென்றால், வருமானத்தின் வெளி சுருங்கி விட்டது.

அதே நேரத்தில், தற்போது புதிதாக வெளிவந்த வொண்டேர்லா IPOவைப் பாருங்கள். பட்டியலில் வெளிவந்த சில நாட்களிலே 40% லாபம் கொடுத்து விட்டது.

காரணம் என்னவென்றால், இந்த மாதிரியான தீம் பார்க் போன்ற பொழுதுபோக்கு விடயங்களில் இந்தியாவில் இன்னும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இதே போல் நிறைய வாய்ப்புகளை நாமும் யோசித்துப் பார்க்கலாம்.

அதனால் போர்ட்போலியோவில் நாற்பது சதவீதத்திற்கும் குறைவாக இந்த மாதிரி வளரும் நிறுவனங்களை வைத்துக் கொண்டால் மொத்த போர்ட்போலியோவின் வருமானமும் உந்தப்படும்.

அதே நேரத்தில், பெரிய நிறுவனங்களை ஒத்து அதிக அளவு தகவல்கள் இல்லாததால் கணிப்பதும் கடினம். இதற்காக அதிக அளவு சிரமம் எடுத்து ஆராய்ந்து முதலீடு செய்ய வேண்டும். இல்லையெனில், முதலீடை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடும்.

இதனால் எச்சரிக்கையாக போர்ட்போலியோவில் ஒவ்வொரு பென்னி பங்குகளையும் பத்து சதவீதத்திற்கும் மிகாமல் வைத்துக் கொள்ள வேண்டும்.

உதாரண விளக்கம்:


'பென்னி பங்குகளை வைத்து போர்ட்போலியோவை உருவாக்குவது எப்படி? ' என்பதற்காக உதாரணத்திற்கு இந்த விளக்கம் தருகிறோம்.

எமது தளத்தில் பரிந்துரை செய்யப்பட்ட போர்ட்போலியோவை கீழே உள்ள படத்தில் பார்க்கலாம். இது ஆறு மாதங்களுக்கு முன் பரிந்துரை செய்யப்பட்டது.

45% லாபத்தில் முதலீடு போர்ட்போலியோ
(பெரிதாக்க கிளிக் செய்யவும்)


இந்த போர்டோப்லியோவில் பரிந்துரை செய்யப்பட்ட பென்னி பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

  • Finolex Cables என்ற பங்கு 52 ரூபாயில் பரிந்துரை செய்யப்பட்டு, இன்று 156 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. அதாவது ஆறு மாதங்களில் 200% லாபம்.
  • Astra Microwave என்ற பங்கு 36 ரூபாயில் பரிந்துரை செய்யப்பட்டு, இன்று 76 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. அதாவது ஆறு மாதங்களில் 116% லாபம்.
  • Ashapura MineChem என்ற பங்கு 40 ரூபாயில் பரிந்துரை செய்யப்பட்டு, இன்று 60 ரூபாய் அளவில் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. அதாவது ஆறு மாதங்களில் 50% லாபம்.

ஆனால் போர்ட்போலியோவில் மற்ற பெரிய நிறுவன பங்குகள் 20~30% என்ற வளர்ச்சியை மட்டும் கொடுத்துள்ளன. இவை சிறிய நிறுவனங்களை விட  கொஞ்சம் நிலையான நம்பிக்கையான பங்குகள். அதனால் இந்த பெரிய நிறுவனங்களையும் போர்ட்போலியோவில் வைத்துக் கொள்வது அவசியமாகிறது.

இதன் மூலம் வருமானமும், ரிஸ்கும் சமநிலைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது மொத்த போர்ட்போலியோவும் 45% லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

'பங்குச்சந்தை ஆரம்பம்' என்ற இந்த தொடரின் அடுத்த  பகுதியை இங்கு காணலாம்.

குறிப்பு:
நமது ஏப்ரல் மாத DYNAMIC போர்ட்போலியோ 15% அளவு லாபம் கொடுத்துள்ளது. அடுத்த போர்ட்போலியோ ஜூன் முதல் வாரத்தில் தேர்தல் மற்றும் நிதி நிலை அறிக்கைகளை அடிப்படையாக வைத்து வெளிவரும். muthaleedu@gmail.com என்ற மின் அஞ்சலில் விவரங்களைப் பெறலாம்.

English Summary:
Penney stocks are the small scale company stocks which may have high potential in multiple times return in stock market. Same time, risk in return also too high. Fundamentals are very important to choose penny stocks. 

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக