ஒரே அடியாக பங்குச்சந்தை மேலே சென்றாலும் போரடித்து விடுகிறது. தற்போதைய யூக சந்தையில் நீண்ட கால முதலீட்டாளர்கள் வேடிக்கை மட்டும் தான் பார்க்க வேண்டியுள்ளது.
இந்த இடைவெளியில், நாம் ஒரு அதிக அளவில் வளைந்து கொடுக்கும் நிலையான முதலீடைப் பற்றி பார்ப்போம்.
எமது தளத்தின் ஆரம்ப நாட்களில், முதலீடை பிரிப்பது எப்படி? என்று ஒரு சிறு தொடராக எழுதி இருந்தோம். அதில் சொல்லப்பட்ட மையக்கருத்து இது தான்.
அதாவது எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடக் கூடாது. கூடை கீழே விழுந்தால் எல்லா முட்டைகளும் வீணாக்கி விடும்.
அது போல் தான் முதலீடுகளும். அதனை ஓரளவு பிரித்து போட வேண்டும். அப்பொழுது தான் ரிஸ்கை சமநிலைப்படுத்த முடியும்.
அதனால் மொத்தத்தில் குறைந்தபட்சம் 30% முதலீட்டை நிலையான முதலீடுகளில் போடுவதன் மூலம் உறுதியான வருமானம் பெற முடியும்.
அந்த கட்டுரையை படிக்காதவர்கள் இங்கு படிக்கலாம்.
நிலையான வருமானமாக ஓய்விற்கு திட்டமிடுபவர்களுக்கான ஏற்ற ஒரு முதலீட்டு முறை தான் PPF.
PPF என்பதன் விரிவாக்கம் Public Provident Fund. இது மைய அரசினால் நடத்தப்படுகிறது.
அலுவலகத்தில் வேலை பாப்பவர்களுக்கு இருக்கும் EPF போல்,சாமானிய பொது மக்களுக்காகவும் உருவாக்கப்பட்டது தான் PPF.
தனியார் பென்ஷன் திட்டங்களில் இணைய விரும்புவர்களோ அல்லது காப்பீடு திட்டங்களில் இணைய விரும்புவர்களோ ஒரு குறிப்பிட்ட தொகையை ப்ரீமியம் என்று கட்ட வேண்டும். இல்லா விட்டால் அதன் பிறகு அந்த பாலிசியில் தொடர்வது கடினம்.
ஆனால், 20 வருடங்கள் என்ற நீண்ட காலத்தில் பல செலவு ஏற்படும் நிகழ்வுகள் ஏற்படலாம். அந்த சமயங்களில் இரு குறிப்பிட்ட பெரிய தொகையை ப்ரீமியமாக கட்டுவதில் சிரமமாக இருக்கலாம்.
இந்த சூழ்நிலையில் நமக்கு கிடைத்த வாய்ப்பு தான் PPF.
ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 500 முதல் எவ்வளவு நம்மிடம் உள்ளதோ அதனை கட்டிக் கொண்டே வரலாம். ஒரு வருடத்தில் 12 முறை தவணைகளாகவும் கட்டி வரலாம். இவ்வளவு தான் கட்ட வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. கிட்டத்தட்ட சேமிப்பு முறை போல்.
இதற்கான உச்ச வரமாக வருடத்திற்கு ஒரு லட்சம் என்று உள்ளது. இதற்கு வரி விலக்கும் பெறலாம். வருடத்திற்கு 8.7% வட்டி அளிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில், தபால் நிலையங்களில் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருந்த இந்த திட்டம் தற்போது வங்கிகளிலும் விரிவாக்கப்பட்டு உள்ளது. இதனால் இணையம் மூலமும் எளிதில் செலுத்தி விடலாம்.
ஐந்து வருடங்களுக்கு பிறகு அவசர தேவை ஏற்பட்டால் 50% தொகையை லோனாகவும் பெறலாம்.
முழு தொகையை 15 வருடங்களுக்கு பிறகு வட்டியுடன் சேர்த்து பெறலாம். இதற்கு எந்த வித வரியும் கிடையாது.
மைய அரசினால் நடத்தப்படுவதால் மிகவும் பாதுகாப்பான முதலீடாக உள்ளது.
மறைமுக கட்டணங்கள் எதுவும் கிடையாது.
கீழே உள்ள படத்தில் உள்ள உதாரணத்தை பாருங்கள். நன்கு விளங்கும்
சிறுக சேமிக்கும் பழக்கம் அதிகமுள்ள பெண்களுக்கு ஏற்ற முதலீடு இது. ULIP மற்றும் தனியார் பென்ஷன் திட்டங்களை நம்பி ஏமாறுவதற்கு பதில் மாற்றான ஒரு நல்ல முதலீடு.
English Summary:
Review on Public Provident Fund (PPF). PPF gives fixed returns and mode of flexible type investment. We can invest any small money from Rs.500. Can Invest through Banks and Post offices in India.
இந்த இடைவெளியில், நாம் ஒரு அதிக அளவில் வளைந்து கொடுக்கும் நிலையான முதலீடைப் பற்றி பார்ப்போம்.
எமது தளத்தின் ஆரம்ப நாட்களில், முதலீடை பிரிப்பது எப்படி? என்று ஒரு சிறு தொடராக எழுதி இருந்தோம். அதில் சொல்லப்பட்ட மையக்கருத்து இது தான்.
அதாவது எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடக் கூடாது. கூடை கீழே விழுந்தால் எல்லா முட்டைகளும் வீணாக்கி விடும்.
அது போல் தான் முதலீடுகளும். அதனை ஓரளவு பிரித்து போட வேண்டும். அப்பொழுது தான் ரிஸ்கை சமநிலைப்படுத்த முடியும்.
அதனால் மொத்தத்தில் குறைந்தபட்சம் 30% முதலீட்டை நிலையான முதலீடுகளில் போடுவதன் மூலம் உறுதியான வருமானம் பெற முடியும்.
அந்த கட்டுரையை படிக்காதவர்கள் இங்கு படிக்கலாம்.
பல வகையில் பயனுள்ள திட்டம் |
அலுவலகத்தில் வேலை பாப்பவர்களுக்கு இருக்கும் EPF போல்,சாமானிய பொது மக்களுக்காகவும் உருவாக்கப்பட்டது தான் PPF.
தனியார் பென்ஷன் திட்டங்களில் இணைய விரும்புவர்களோ அல்லது காப்பீடு திட்டங்களில் இணைய விரும்புவர்களோ ஒரு குறிப்பிட்ட தொகையை ப்ரீமியம் என்று கட்ட வேண்டும். இல்லா விட்டால் அதன் பிறகு அந்த பாலிசியில் தொடர்வது கடினம்.
ஆனால், 20 வருடங்கள் என்ற நீண்ட காலத்தில் பல செலவு ஏற்படும் நிகழ்வுகள் ஏற்படலாம். அந்த சமயங்களில் இரு குறிப்பிட்ட பெரிய தொகையை ப்ரீமியமாக கட்டுவதில் சிரமமாக இருக்கலாம்.
இந்த சூழ்நிலையில் நமக்கு கிடைத்த வாய்ப்பு தான் PPF.
ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் 500 முதல் எவ்வளவு நம்மிடம் உள்ளதோ அதனை கட்டிக் கொண்டே வரலாம். ஒரு வருடத்தில் 12 முறை தவணைகளாகவும் கட்டி வரலாம். இவ்வளவு தான் கட்ட வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. கிட்டத்தட்ட சேமிப்பு முறை போல்.
இதற்கான உச்ச வரமாக வருடத்திற்கு ஒரு லட்சம் என்று உள்ளது. இதற்கு வரி விலக்கும் பெறலாம். வருடத்திற்கு 8.7% வட்டி அளிக்கப்படுகிறது.
ஆரம்பத்தில், தபால் நிலையங்களில் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருந்த இந்த திட்டம் தற்போது வங்கிகளிலும் விரிவாக்கப்பட்டு உள்ளது. இதனால் இணையம் மூலமும் எளிதில் செலுத்தி விடலாம்.
ஐந்து வருடங்களுக்கு பிறகு அவசர தேவை ஏற்பட்டால் 50% தொகையை லோனாகவும் பெறலாம்.
முழு தொகையை 15 வருடங்களுக்கு பிறகு வட்டியுடன் சேர்த்து பெறலாம். இதற்கு எந்த வித வரியும் கிடையாது.
மைய அரசினால் நடத்தப்படுவதால் மிகவும் பாதுகாப்பான முதலீடாக உள்ளது.
மறைமுக கட்டணங்கள் எதுவும் கிடையாது.
கீழே உள்ள படத்தில் உள்ள உதாரணத்தை பாருங்கள். நன்கு விளங்கும்
ஒவ்வொரு வருடமும் சிறுதொகையை செலுத்திவந்தால் இறுதியில் பெரிய தொகையாக கிடைக்கிறது. |
சிறுக சேமிக்கும் பழக்கம் அதிகமுள்ள பெண்களுக்கு ஏற்ற முதலீடு இது. ULIP மற்றும் தனியார் பென்ஷன் திட்டங்களை நம்பி ஏமாறுவதற்கு பதில் மாற்றான ஒரு நல்ல முதலீடு.
English Summary:
Review on Public Provident Fund (PPF). PPF gives fixed returns and mode of flexible type investment. We can invest any small money from Rs.500. Can Invest through Banks and Post offices in India.
Dear Rama
பதிலளிநீக்குit is possible to open a ppf account thru online?
Yes. you can open ppf account through online itself..
நீக்குYes..its there in icici and sbi
பதிலளிநீக்குThanks Sridhar for your comments!
நீக்குYes, its there in SBI and ICICI
பதிலளிநீக்குwhat about kvb
பதிலளிநீக்குI am not sure KVP Bala Murugan! I hope it'a available in all banks
நீக்குvery useful information thanks
பதிலளிநீக்கு