புதன், 21 மே, 2014

அடுத்த பத்து வருடத்தில் ஐடியில் யார் ஜாம்பவான்?

எமது ஒரு முந்தைய பதிவில் விப்ரோவில் முப்பது வருடங்களுக்கு முன் 1000 ரூபாய் முதலீடு செய்து இருந்தால் தற்போது அதன் மதிப்பு 43 கோடி என்று குறிப்பிட்டு இருந்தோம். (விப்ரோவில் 1000 முதலீடு செய்திருந்தால் இப்ப 43.6 கோடி)


அதன் பின் நிறைய நண்பர்கள் அந்த மாதிரி நிறுவனங்களை சொல்லுங்கள். முதலீடு செய்கிறோம் என்று கூறி இருந்தார்கள். ஆனால் அந்த அளவு எதிர்காலத்தை கணிப்பதில் நான் புத்திசாலி என்று சொல்ல முடியாது.

ஆனால் சில செய்திகளை அடிப்படையாக வைத்து அவ்வப்போது குறிப்புகளைத் தருகிறோம். அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

2014ம் ஆண்டு மென்பொருள் நிறுவனங்களை பொறுத்த அளவு மிக முக்கியமான ஆண்டு.

ஏனென்றால்,

புது பட்டியல் மாறலாம்?


மென்பொருள் நிறுவனங்களை பொறுத்த அளவில் புது ஒப்பந்தங்கள் என்பது நீண்ட காலத்திற்கு இருக்கும்.

மென்பொருள் உருவாக்குதல், அதனை பராமரித்தல் என்று பத்து வருடங்களுக்காவது ஒப்பந்தங்கள் நீடிக்கும். அதனால் இந்த ஒப்பந்தங்களின் மதிப்பும் மிக அதிகமாக இருக்கும்.

அப்படிப் போடப்பட்ட பல ஒப்பந்தங்கள் இந்த வருடம் காலாவதியாகிறது என்பது தான் தற்போதைய முக்கிய குறிப்பு.

இதன் மதிப்பு பல லட்சங்களின்  கோடிகளில் உள்ளது.

இனி வரும் வருடங்களில் புதிதான ஒப்பந்தங்களை யார் அதிகம் பிடிக்கிறார்களோ அவர்களுக்கு அடுத்த பத்து வருடம் என்பது பொற்காலம் தான்.

அதனால் புதிதாக வரும் மென்பொருள் நிறுவன ஒப்பந்தங்களை கண்காணித்து வாருங்கள்.

நிறைய தகவல்கள் முதலீட்டிற்கு கிடைக்கும்.

போகிற போக்கில் நாமும் நமக்கு தெரிந்த சில குறிப்புகளை தருகிறோம்.

தற்போது ஹெச்சில் நிறுவனத்திற்கு 3000 கோடி மதிப்புள்ள பெப்சி டீல் கிடைத்துள்ளது. இது போக நோவரிடிஸ் என்ற சுவிஸ் மருந்து நிறுவனத்தின் பெரிய ஆர்டர் கிடைத்துள்ளது.

3000 கோடி டீல் 

Persistent systems என்ற நிறுவனத்திற்கு மேகக் கணினி (Cloud computing) சார்ந்த சில நல்ல ப்ராஜெக்ட்கள் கிடைத்துள்ளன.

இதே போன்று அடுத்த தலைமுறை கணினியுகத்தில் பிரபலமாக இருக்கும் Distributed computing, மேகக் கணினி போன்ற இணையம் சார்ந்த நிறுவனங்களை பட்டியலில் வைத்துக் கொள்ளுங்கள்.

நல்ல ரிடர்ன் கிடைக்கலாம். கிடைக்க வாழ்த்துக்கள்!

ஹெச்சில் நிறுவனமும் நமது போர்ட்போலியோவில் உள்ள ஒரு பங்கு.

1080 ரூபாய்க்கு பரிந்துரை செய்யப்பட்டு 20% அளவு லாபம் கொடுத்துள்ளது. முதலீடு செய்தவர்கள் இன்னும் தொடரலாம் என்று நினைக்கிறேன்.

தற்போது 1300 என்ற அளவில் வர்த்தகமாகும் ஹெச்சில்  பங்கு 1600 என்ற அடுத்த இலக்கை அடைய அதிக வாய்ப்புகள் உள்ளது.

போர்ட்போலியோவை இங்கு பார்க்கலாம்.


  • 40% லாபத்தில் 'முதலீடு' இலவச பங்கு பரிந்துரைகள்

  • தொடர்புடைய பதிவுகள்:    « முந்தைய கட்டுரை
    Email: muthaleedu@gmail.com

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக