வெள்ளி, 30 மே, 2014

அமைதியில்லாமல் அகன்ற பாரதம் கிடைக்காது

காங்கிரஸ் மீதுள்ள கடுமையான கோபமும், மோடியின் குஜராத் வளர்ச்சி மாதிரியும் தான் பிஜேபிக்கு இவ்வளவு தனி பெரும்பான்மையை கடந்த தேர்தலில் கொடுத்துள்ளது.


கண்டிப்பாக அவர்களது இந்துத்துவா கொள்கைகளின் படி மட்டும் பிரச்சாரம் நடந்து இருந்தால் இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்காது.

ஆனால் வெற்றிக்கு பிறகு அதன் தலைவர்கள் மற்றும் புதிய அமைச்சர்களது தேவையில்லாத கருத்துக்கள் மக்களிடயே ஒரு பிளவை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன.

பதவியேற்ற உடனே ஒரு அமைச்சர் காஷ்மீரின் 370வது பிரிவை ரத்து செய்யப்படும். என்று கூறுகிறார்.

முதலில் தற்போதைய சூழ்நிலையில் இது ஒரு முக்கியமான நாட்டின் பிரச்சினை இல்லை. வளர்ச்சி, பொருளாதாரம் என்று எவ்வளவோ பிரச்சனைகளில் தான் நாம் உள்ளோம்.

அறுபது ஆண்டுகள் தீர்க்க முடியாத இந்த பிரச்சினையை பதவியேற்ற உடனே நீக்கி விடுவோம் என்பது ஆராயாமல் காலை விடுவதே.

கொஞ்சம் சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த காஷ்மீர் தொடர்பான நிகழ்வுகளை பார்த்தாலே அங்கு இந்தியாவிற்கு எவ்வளவு உரிமை உள்ளது என்று தெரியும்.

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையே இந்து, முஸ்லீம் என்ற மதத்தின் அடிப்படையில் நடந்தது. அதில் காஷ்மீர் மன்னர் இந்து. ஆனால் பெரும்பாலான மக்கள் முஸ்லீம்கள். ஆனால் இந்து மன்னரின் விருப்பத்தின் படி மட்டுமே இந்தியாவில் இணைக்கப்பட்டது.

ஆனால் காஷ்மீர் மக்களுக்கு விருப்பமிக்கிறதா என்பதை கடைசி வரை இந்தியா நிரூபிக்கவே இல்லை.

காஷ்மீர் பிரச்சினை ஐக்கிய நாட்டு சபைக்கு சென்ற போது இந்தியா அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தி மக்களின் விருப்பத்தை கேட்டு அறிவதாக உறுதியளித்தது. ஆனால் இன்று வரை அந்த பொது வாக்கெடுப்பு நடதப்படுவே இல்லை.

இதே சூழ்நிலை ஹைதராபாத் பிரதேசத்திற்கு ஏற்பட்ட போது இந்தியா நேர் எதிர்மாறான நிலைப்பாட்டை எடுத்தது.

ஹைதராபாத் மன்னர் முஸ்லீம், ஆனால் பெரும்பாலான மக்கள் இந்துக்கள். அந்த சூழ்நிலையில் மன்னர் பாகிஸ்தானுடன் இணைய விருப்ப தெரிவித்தார். ஆனால் மக்களின் விருப்பத்திற்கே செயல்படுவதாகக் கூறி வலுக்கட்டாயமாக இணைத்துக் கொண்டது.

ஆக, இதில் எந்த முடிவு சரியாக இருந்தாலும் மற்றொன்று தவறாகி விடுகிறது. இதனால் ஏதேனும் ஒரு பிரதேசம் இந்தியாவிற்கு கிடைத்து இருக்காது.

பொதுவாக ஹைதராபாத் இணைத்தது சரி என்று கருதப்படுவதால், காஷ்மீர் இணைக்கப்பட்டது தவறு என்றே ஆகிறது.

இதனை இந்தியன் என்று உணர்வு பூர்வமாக நினைப்பதை விட அதற்கு வெளியில் நின்று சிந்திக்கும் போதே தெரிய வருகிறது.

இந்தியா என்பது ஐரோப்பியன் யூனியன் போலவே. இங்கு அனைவரும் மதத்தினால் மட்டுமே இணைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மற்ற படி, ஏகப்பட்ட காலாச்சாரங்கள், மொழிகள் இருக்கும் சூழ்நிலையில் எதையும் மற்றவர்கள் மீது திணிக்க முடியாது என்பதை ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அமைதியில்லாமல் அடிதடியில் மட்டும் அவர்கள் விரும்பும் அகன்ற பாரதம் கிடைப்பது கடினம்.

மீண்டும் கலவரம் என்று உள்நாட்டு பிரச்சனைகள் தூக்கினால் வளர்ச்சி கடுமையாக பாதிக்கபப்டும்.

மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் மோடியை அரியணையில் வைத்து உள்ளார்கள். ஆனால் அவர் அடுத்த கேஜ்ரிவால் போன்று வாய்ப்பை வீணாக்காமல் இருப்பது நல்லது.

இதே போல், முசாபூர் கலவரத்தில் நேரடியாக குற்றம் சாட்டபட்டவருக்கு மந்திரி பதவி கொடுத்துள்ளதும் எந்த அளவு சரி என்று தெரியவில்லை.

மத்திய அரசின் அளவுக்கதிகமாக குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் அந்தந்த பிரதேசங்கள் அவர்கள் சூழ்நிலைக்கேற்ப திட்டமிட முடியும்.

எங்கள் ஊரில் ஒரு சிறிய ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு டெல்லியின் வருடத்திற்கு ஒரு முறை வரும் ரயில்வே பட்ஜெட்டை எதிர்பார்த்து காத்து இருக்க வேண்டியுள்ளது.

இப்படி தலைக்கு மேல் வேலையை இந்திய அரசு சுமப்பதன் அர்த்தம் தெரியவில்லை. அமெரிக்கா போன்று மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டாலே வளர்ச்சி வேகமாகும்.

English Summary:
India can not be united without peace.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக