வெள்ளி, 2 மே, 2014

ரிசர்வ் வங்கி கவர்னருக்கு உதவிய 5ம் வகுப்பு சிறுமி

சில சமயங்களில் குழந்தைகளுக்குள் இவ்வளவு அறிவா? என்று நினைக்கும் அளவு நிகழ்வுகள் நடக்கும். அது போன்ற சம்பவம் கடந்த சில மாதங்கள் முன் நடந்துள்ளது.


டெல்லியில் உள்ள சான்ஸ்கிருதி என்ற பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் லைலா இந்திரா ஆல்வா என்ற சிறுமி ரிசர்வ் வங்கி கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.


அந்த கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு,

"நான் தற்போதைய பொருளாதாரத்தின் கடினமான காலக்கட்டத்தைப் பற்றியும், ரூபாய் மதிப்பு சரிந்து வருவதையும் எமது பள்ளி இதழ் மூலம் கேள்விபட்டுள்ளேன். நாட்டிற்கு அதிகம் தேவைப்பட்டாலும், எனது சுற்றுலா பயணத்தில் சேமித்த இருபது டாலர்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறேன்."

என்று கடிதத்துடன் தாம் சேமித்த 20$யும் அனுப்பி இருந்தாள்.


அதற்கு பதிலளித்து ரிசர்வ் வங்கி கவர்னர் அந்த பெண்ணின் செய்கையை பாராட்டியும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கியிடம் தேவையான அளவு பணம் உள்ளதாகவும் கூறி, அந்த பெண்ணின் பணத்தை மீண்டும் திருப்பி அனுப்பி இருந்தார்.

தற்போது அந்நிய செலாவணி கையிருப்பு 275 பில்லியனில் இருந்து 310 பில்லியனாக உயர்ந்து விட்டது. ரூபாய் மதிப்பும் 68 என்பதிலிருந்து 60 என்று குறைந்து விட்டது. ஆனாலும்  இந்த சிறுமி இன்னும் நீண்ட காலம் நினைவில் நிற்கப்படுவாள்.

வெளிநாட்டில் உள்ளவர்கள் எப்பொழுது ரூபாய் மதிப்பு குறையும் என்று காத்திருந்து ஊருக்கு அனுப்புவோம்.

அரசியல்வாதிகள் கருப்பு பணத்தை கணக்கில்லாமல் ஒளித்து வைத்து பொருளாதாரத்தை சீர்குலைவு பண்ணுவார்கள்.

அவர்களுக்கிடையே இந்த பெண்ணைப் போன்ற மனிதர்களும் இருப்பதால் தான் இந்தியா இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

நமக்கெல்லாம் பணவீக்கம், ரிசர்வ் வங்கி, நாணய மதிப்பு போன்ற சொற்பதங்களை அறிந்து கொள்ளவே குறைந்தது இருபது வயது ஆகி இருக்கும்.

குழந்தைகள் இதழிலே இது தொடர்பாக கட்டுரை வெளியிட்ட அந்த பள்ளிக்கும், அதனை படித்து 'உதவ வேண்டும்' என்று எண்ணம் கொண்ட அந்த சிறுமிக்கும் வாழ்த்துக்கள்!


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

10 கருத்துகள்:

 1. Great! Hats off to the li'l girl, her parents and the school!! It reminds us that one day India will become Super Power due to richness in thinking and social & cultural quotient!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்பரே!

   நீக்கு
 2. Good job, but why she was saving in dollars instead of INR?

  பதிலளிநீக்கு
 3. Good job, but why she was saving in dollars instead of INR?

  பதிலளிநீக்கு
 4. Good job, but why she was saving in dollars instead of Indian currency?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி நண்பரே! எமக்கும் இதே சந்தேகம் உள்ளது..

   நீக்கு
 5. when you see the girls picture with her parents some other country's Flag also there, there is a chance she might be NRI before recently joined in Indian School in New delhi

  பதிலளிநீக்கு