வியாழன், 8 மே, 2014

ஊசலாடும் சந்தையில் வாங்கும் நிலையில் சில பங்குகள்

சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 22,800 புள்ளிகள் வரை சென்றது. தற்போது 500 புள்ளிகள் வரை குறைந்துள்ளது. ஆனாலும் எதிர்பார்ப்பது போல் கணிசமாக குறையவில்லை.


சென்செக்ஸ் என்று பொத்தாம் பொதுவாக பார்ப்பதற்கு பதிலாக சில துறைகளை மட்டும் பார்த்தால் நீண்ட கால நோக்கில் சில பங்குகள் தற்போது வாங்கும் நிலையிலே உள்ளன.

ரூபாய் மதிப்பு மீண்டும் கூடி விடும் என்ற எதிர்பார்ப்பிலும், இன்போசிஸ் போன்ற சில மென்பொருள் துறை நிறுவனங்களின் ஏமாற்றமடைந்த நிதி நிலை அறிக்கைகளும் மென்பொருள் பங்குகளை கடும் வீழ்ச்சிக்கு தள்ளி உள்ளன.

மென்பொருள் பங்குகள கிட்டத்தட்ட, 5% க்கும் கீழ் சரிந்துள்ளன.

ஆனாலும் இது ஒரு தற்காலிக நிகழ்வே.


ரிசர்வ் வங்கி டாலாருக்கெதிரான ரூபாய் மதிப்பை 58க்கும் குறைவாக செல்ல அனுமதிக்காது என்று யூகிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் நன்றாக செயல்படும் சில மென்பொருள் நிறுவனங்களின் பங்குகளும் நல்ல விலைக்கு சரிந்துள்ளன. இது ஒரு முதலீடு வாய்ப்பாகும்.

TCS, HCL, Mindtree, Tech Mahindra போன்ற பங்குகளைக் கவனித்து வரலாம்.

அடுத்ததாக, FMCG என்று சொல்லப்படும் நுகர்வோர் நிறுவன பங்குகளும் உணவு பணவீக்கம், எதிர்பார்க்கப்படும் வறட்சி போன்ற காரணங்களால் ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ளன.

ஆனால் நுகர்வோர் நிறுவனங்களின் நிதி முடிவுகள் ஒன்றும் அவ்வளவு மோசமான நிலையில் இல்லை.

இதனால் நீண்ட கால முதலீட்டு நோக்கம் கொண்டவர்கள் இந்த பங்குகளில் முதலீடுகளைத் தொடரலாம்.

BRITANNIA மற்றும் ITC போன்றவை விரும்பப்படும் பங்குகளாக இருக்கின்றன.

அடுத்து, எமது DYNAMIC PORTFOLIOவில் இணைந்த நண்பர்கள் கேட்ட ஒரு கேள்வி இந்த சூழ்நிலையில் பொருத்தமானதாகும்.

Fundamental நன்றாக இருந்தால்
சிறு நிகழ்வுகள் எளிதில் பாதிக்காது 

அதாவது, "சந்தை சரியும் என்று எதிர்பார்த்தால் சரிந்த பின்னரே எல்லா பங்குகளையும் வாங்கிக் கொள்ளலாமே?" என்பது ஒரு கேள்வி.

சரியும் என்பது எதிர்பார்ப்பே. தீர்க்கமான நிகழ்வு கிடையாது. எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம்.

அதனால் இத்தகைய வாய்ப்புகளை தவற விடாமல், SIP முறையில் சராசரி செய்து வாருங்கள்.. இதன் மூலம் ரிஸ்கையும், லாபத்தையும் எளிதில் சமநிலைப்படுத்தலாம்..

எமது ஏப்ரல் மாத DYNAMIC போர்ட்போலியோ 15% லாபம் கொடுத்துள்ளது. அடுத்த போர்ட்போலியோ ஜூன் மாதத்தில் வெளிவரும்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக