ஞாயிறு, 25 மே, 2014

LIBERTY SHOES - வாங்கி போடலாம்!

கடந்த வாரம் நமது போர்ட்போலியோவில் உள்ள ASHAPURA MINECHEM என்ற பங்கை விற்குமாறு பரிந்துரை செய்து இருந்தோம்.


அதற்கான காரணங்களை இந்த பதிவில் காணலாம்.

அடுத்த கட்டமாக அந்த பங்கிற்கு பதிலாக ஒரு புதிய பங்கை பரிந்துரை செய்கிறோம்.

இந்த பங்கின் பெயர் "LIBERTY SHOES"

இது ஓரளவு பிரபலமான பிராண்ட் தான். BATA நிறுவனத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவில் ஷீக்கள் தயாரிக்கும் நிறுவனம்.
150 டீலர்கள், 400 ஷோரூம் என்று நாடு முழுவதும் நன்கு பரவி உள்ளது.

கடந்த சில வருடங்களாக நிறுவனம் வெகு வேகமாக (500 கோடி அளவிற்கு) சந்தையை விரிவாக்கி வருகிறது. மேலும் நிறுவனம் பல புதிய மாடல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

எதிர்காலத்தில், ஒவ்வொரு வருடமும் 100 புதிய ஷோரூம்கள் என்று விரிவாக்க உள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 50% அளவு விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த பங்கில் முதலீடு செய்யலாம்.



இதனை ஒத்த  BATA போன்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் பங்கு மலிவாக கிடைக்கிறது.

தற்போதைய விலை 165 ரூபாய். 250 ரூபாய் என்பதனை முதல் இலக்காகக் கொண்டு முதலீடு செய்யலாம்.

இரண்டு வருட காலத்திற்கு முதலீடு செய்யும் போது அதிக பலன் கிடைக்கும்.

இந்த துறையில் போட்டி அதிகமாக இருப்பது ஒரு சிறிய பாதகமான விடயம்.

ஜூன் மாத போர்ட்போலியோவில் எட்டு பங்குகள் போர்ட்போலியோவாக பரிந்துரை செயப்படுகிறது. விரும்பும் நண்பர்கள் இணைந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களை கீழே உள்ள இணைப்புகளில் பார்க்க..

English Summary:
Liberty shoes is recommended for long term investment.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக