நேற்று மோடி அமைச்சரவை பதவியேற்றம் முடிந்தது.
இனி தான் உண்மையான ஆட்டம்.
குறைந்த அமைச்சர்களுடன் பதவியேற்றது தேவையற்ற செலவுகளைக் குறைக்கலாம். பல மாநிலங்களில் ஒரு மத்திய அமைச்சர் கூட இல்லை. எல்லா மாநிலங்களுக்கும் அமைச்சர்களை பகிர்ந்து இருக்கலாம்.
நேற்றைய தினமலரில் பார்த்தால் ஏற்கனவே தேனாறும், பாலாறும் ஓடத் தொடங்கி விட்டது போல் எழுதி இருக்கிறார்கள்.
இப்படித் தான் மிக அதிகமான எதிர்பார்ப்பு மக்களிடமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த மாதங்களில் பங்குச்சந்தையையும் ஒரு சாதாராண குடிமகன் போலவே நடந்து கொண்டது.
மோடியைப் பற்றிய கருத்துக் கணிப்பு, தேர்தல் முடிவுகள், பதவியேற்பு விழா என்று ஒவ்வொன்றுக்கும் குதித்து குதித்து ஆடியது.
ஒரு கட்டத்தில் எமக்கும் பயம் வந்து விட்டது. நம்ம போர்ட்போலியோவுக்கு இவ்வளவு லாபமா? என்று...:)
ஆனால் நேற்று முதல் சென்செக்ஸ் தன்னை சரிப்படுத்த துவங்கி உள்ளது.
நேற்று காலையில் 400க்கும் மேல் உயர்ந்த சென்செக்ஸ் இறுதியில் 23 புள்ளிகளோடு நிறுத்திக் கொண்டது.
ஆனால் நம்மைப் போன்ற நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு சாதகமான ஒரு வாய்ப்பு நேற்று கிடைத்துள்ளது.
நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்கள் சார்ந்த புள்ளிகள் இரண்டு சதவீதத்திற்கும் மேல் குறைந்தன. (mall Cap/Mid Cap Index)
இதில் பல நல்ல நிறுவனங்கள் 10% வரையும் குறைந்துள்ளன என்பது கூடுதல் செய்தி.
இந்த குறைவு என்பது நிறுவனம் சார்ந்த காரணங்களால் குறைந்ததல்ல என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.
இதற்கு "Profit Booking" என்பதே காரணமாக அமைந்துள்ளது.
சிறிய நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக 100%, 200% என்று உயர்வு கொடுத்த வந்துள்ளன. அவைகள் தாம் லாபத்தை உறுதி செய்வதற்காக விற்கப்படுகின்றன.
மோடி என்ற தனி மனிதனை விட ஒரு நிலையான ஆட்சி அமைந்துள்ளது என்பது நமக்கு மிகப்பெரிய சாதகமான விடயம்.
இந்த சூழ்நிலையை வாங்கும் வாய்ப்புகளாக மாற்றிக் கொள்வோம்!
இதில் நல்ல சிறு நிறுவனங்களை தேர்ந்தெடுத்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நல்ல லாபம் கிட்டும்!
English Summary:
Best time for buying Mid Cap stocks.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக