திங்கள், 19 மே, 2014

பங்குசந்தையில் பணக்காரனாக ஏற்ற காலம்

நமது தளத்தை படித்துக் கொண்டிருக்கும் நண்பர்களிடமிருந்து வரும் மின் அஞ்சல்கள் நம்மை அதிக அளவிற்கு ஊக்குவிக்கின்றன.

ஏதோ பொழுது போக்கிற்காக ஆரம்பிக்கப்பட்ட தளம் இன்று ஆயிரம் நண்பர்களுக்கு மேல் தொடரும் தளமாக மாறியுள்ளது நிறைவைத் தருகிறது.

நாம் பரிந்துரைத்த பங்குகள் நமது எதிர்பார்ப்பிற்கும் அதிகமாக செயல்பட்டுக் கொண்டிருப்பது மகிழ்வைத் தருகிறது.

நன்றி!

புயலுக்கு பின்னே அமைதி இருக்கும். அந்த அமைதிக்கு பின்னே வசந்த காலமும் இருக்கும்.

அது போல் தான் மோசமான நிர்வாகங்களால் சந்தை ஏழு வருடங்களாக அமைதியாக முடங்கிக் கிடந்தது. தற்போது ஒரு அதீத நம்பிக்கையில் மீண்டும் எழுந்துள்ளது.



இந்தியா போன்றொரு பல கலாச்சாரங்களுடைய நாட்டில் அரசியலில் பெரும்பான்மை இடங்கள் கிடைப்பது என்பது அதிசயமான விஷயம். ஏனென்றால், ஒவ்வொரு பகுதி மக்களும் ஒவ்வொரு துருவமாக இருப்பர்.

அத்தகைய சூழ்நிலையில், ஒரு தனிக்கட்சி மிக பெரும்பான்மையை பெற்றிருப்பது முதலீட்டிற்கு ஏற்ற தருணமே.

தற்போதைய சூழ்நிலையில் பணவீக்கம் என்ற ஒன்றே பிரச்சனை தவிர, வேறு எந்த பிரச்சனைகளும் இருப்பதாக தெரியவில்லை.

கணிசமான கையிருப்பு நிதியும், அதிகமான ஏற்றுமதியும், குறைவான இறக்குமதியும் சந்தையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாராக இருப்பது போல் தெரிகிறது.

90ல் தங்கத்தை அடமானமாக வைத்து கடன் பெற்றோம். அவ்வளவு கடின சூழ்நிலை. ஆனால் 91ல் பொருளாதாரம் திறக்கப்பட்டதன் விளைவு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆயிரத்துக்குள் இருந்த சந்தை ஐந்தே வருடங்களில் 4000 புள்ளிகளைத் தொட்டது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு போக்ரான் குண்டு பொருளாதாரத் தடைகள், இரட்டை கோபுர இடிப்பு என்று மீண்டும் சந்தை அமைதியாக இருந்தது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சி விரிவாகியதன் மூலம் மீண்டும் 14000 புள்ளிகளை அடைந்தது.

சென்செக்ஸ் வரலாறு, அடுத்து? 

இதே போல் தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக தேக்கப்பட்ட வளர்ச்சி வெடிக்கும் காலம் தற்போது கனிந்துள்ளது என்று கருதலாம்.

கடந்த காலங்களில், முதலீடு செய்து இருப்போம். நிறுவனம் நன்றாக இருந்து இருக்கலாம். ஆனால் அரசின் கொள்கை முடிவுகளாலும், ஊழல்களாலும் சந்தை ஒத்துழைக்காமல் இருந்து இருக்கலாம்.

ஆனால் தற்போது எல்லாம் ஒத்துப் போகும் ஒரு சூழ்நிலை உருவாகி உள்ளது.

அடுத்த ஐந்து வருடங்களில் முதலீடுகள் இரட்டையாக மாறுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்த சூழ்நிலையை நமது வாசகர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஊர் கூடும் போது நாமும் தேரை இழுப்போம்!

தேவைப்பட்டால், எமது ஜூன் மாத டைனமிக் போர்ட்போலியோ சேவையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் பெறலாம்.

எமது முந்தைய போர்போலியோ செயல்பாட்டு நிலையை கீழே உள்ள இணைப்புகளில் பெறலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. அணைத்து பதிவுகளும் மிகவும் அருமையாக உள்ளது. உங்களுடைய சேவை தொடர வாழ்த்துகள். மேலும் தமிழக செய்திகள் மற்றும் உலக செய்திகளை அறிய தமிழன்குரல் இணையதளத்தை பார்க்கவும். http://tamizhankural.com

    பதிலளிநீக்கு