வியாழன், 22 மே, 2014

இனி தங்கக் கடத்தல் குறையும்

கடந்த வருடத்தில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் காரணமாக தங்க இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. ஏனென்றால், அந்நிய நிதி பற்றாக்குறைக்கு பெரிதும் காரணமாக பெட்ரோலும், தங்கமும் இருந்தன.


இன்று மீண்டும் தங்க இறக்குமதிக்கான தடை விலக்கப்பட்டது.

80:20 என்ற நிபந்தனை விதியின் படி, அதாவது இருக்குமதியாகும் தங்கத்தில் 20 சதவீதத்தை ஆபரணங்கள் தயாரிக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றது உள்நாட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனால் இன்று தங்க நகைக்கடை மற்றும் ஆபரண தயாரிப்பு பங்குகள் பத்து சதவீதம் மேல் உயர்ந்தன.

பார்த்தாலே பயமாக இருக்கிறது 

மேலும் இதனால் தங்க கடத்தல்கள் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தங்கம் விலையும் நேற்று மட்டும்  நான்கு சதவீத அளவு குறைந்தது.

இந்த தகவலை வீட்டுக்காரம்மாகிட்ட சொன்னா என்னவாகும் என்று நினைத்தாலே பயமாகத் தான் இருக்கிறது.

தனிப்பட்ட முறையில், தங்க நகை பங்குகளில் ஈடுபாடு இல்லாததால்  அது சம்பந்தப்பட்ட பங்குகளை பரிந்துரைக்க முடியவில்லை. SORRY!

ரிசர்வ் வங்கி இவ்வாறு  தடையை விலக்கிக் கொண்டிருப்பதால் பொருளாதாரம் நன்றாக செல்ல ஆரம்பித்து இருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம்.



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக