வெள்ளி, 23 மே, 2014

பெரிய மீன்களால் ஆக்கிரமிக்கப்படும் சிறு இகாமர்ஸ் நிறுவனங்கள்

கடந்த ஒரு பதிவில் இந்திய இகாமர்ஸ் வணிகத்தைப் பற்றி விரிவாக எழுதி இருந்தோம்.


சுயதொழில் புரிவதற்கு ஏற்ற துறையாக இகாமர்ஸ் என்று குறிப்பிட்டு இருந்தோம்.

பதிவை இங்கு பார்க்க..

தற்போது சிறு மீன்களை 'மஹா பெரிய நிறுவனங்கள்' விரட்டி விரட்டி வாங்குகிறார்கள்.

சிறிய நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை விரிவாக்குவதற்கு அதிகப்படியான முதலீட்டுப் பணம் தேவைப்படுகிறது. ஆனால் அந்த காபிடல் தொகை கிடைப்பதற்கு மிகவும் கடினமாக உள்ளது.

பிளிப்கார்ட் - மிந்த்ரா டீல் 

அதே போல் பெரிய நிறுவனங்களால் தரப்படும் கணிசமான விலை குறைப்பும் சிறு நிறுவனங்கள் போட்டியிடுவதற்கு பாதகமாக உள்ளது.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு வளர்ந்த இகாமர்ஸ் நிறுவனங்கள் சிறு நிறுவனங்களை தற்போது வாங்கத் தொடங்கியுள்ளார்கள்.

கடந்த சில மாதங்களில் மட்டும் இவ்வளவு பெரிய டீல்கள் நடந்துள்ளன.

பிளிப்கார்ட் நிறுவனம் மிந்த்ராவை 2000 கோடிக்கு வாங்கியுள்ளது.

Quikr நிறுவனத்தில் சில வெளிநாட்டு நிறுவனங்கள் 600 கோடி அளவு முதலீடு செய்துள்ளன.

Snapdeal நிறுவனத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் 800 கோடி முதலீடு செய்துள்ளன.

இது போக, அமேசான் மற்றும் இபே நிறுவனங்கள் இந்தியாவில் மிக வேகமாக விரிவாக்கம் செய்து வருகின்றன.

இந்திய சிறு இகாமர்ஸ் நிறுவனங்கள்


இந்த வெளிநாட்டுக் குருவிகள் ஒன்றும் சும்மா முதலீடு செய்யாது.

எல்லாம் காரணமாகத்தான்,

தற்போது 12000 கோடி மதிப்பு கொண்டுள்ள இந்திய இகாமர்ஸ் சந்தை 2016ல் 50000 கோடி மதிப்பு உயருமாம். அதாவது நான்கு மடங்கு அதிக மதிப்புயர்வு.

அதனை அப்படியே அள்ளுவதற்கு தான் இந்த பெரிய நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

இந்த சமயத்தில் புதுமையான எண்ணங்கள் இருந்தால் வித்தியாசமான மின் வணிகத்தை ஆரம்பியுங்கள். எதிர்காலத்தில் பல ஆயிரம் கோடிகளில் நமது நிறுவனத்தின் மதிப்பும் உயரலாம்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக