Ashapura MineChem என்ற நிறுவனத்தை எமது போர்ட்போலியோவில் பரிந்துரை செய்து இருந்தோம். இந்த பங்கும் ஆறு மாதத்தில் 50% அளவு லாபம் கொடுத்து உள்ளது. ஆனால் தற்போது அந்த நிறுவனத்தை விற்குமாறு பரிந்துரை செய்கிறோம்.
பரிந்துரை செய்யப்பட விலை: 40 ரூபாய்.
தற்போதைய விலை: 60 ரூபாய்.
லாப சதவீதம்: 50%
இந்த நிறுவனம் தொடர்பான எமது முந்தைய பதிவை இங்கு பார்க்கலாம்.
229% அதிக லாபம் ஈட்டிய ASHAPURA MINE
ஆனால் விற்க சொல்வதன் காரணம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
ஆஷாபுரா நிறுவனத்தை வளர்த்த நிறுவனருக்கும்(Shah) அவரது மகனுக்கும்( Fizzah) உள்ள குடும்ப சண்டை தான் காரணமாக உள்ளது.
இந்த குடும்ப சண்டை 500 கோடி மதிப்புள்ள ஆஷாபுரா நிறுவனத்தினைப் பிரிக்கும் சொத்து சண்டையாக மாறியுள்ளது.
87 வயது அப்பா இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டு இருக்கையில், அவரது இரண்டாவது மனைவி தமது அப்பாவை பார்க்க விடாமல் தவிர்ப்பதாகவும், 50 கோடி அளவு நிறுவனத்தின் பணத்தை மோசடி பண்ணி விட்டதாகவும் அவரது மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கார்பரேட்டில் குடும்ப சண்டை என்பதை தனிப்பட்ட வாழ்க்கை என்று விட்டுக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் சண்டையை நிறுவன நிர்வாகம் வரை இழுத்து வந்துள்ளார்கள்.
ஆஷாபுரா நிறுவனத்தின் மனித வள மேலாண்மை உழியர்கள் கூட இந்த சண்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
இதனால் நீண்ட காலத்திற்கு பிறகு, லாபத்தில் மீண்ட ஆஷாபுரா நிறுவனம் மீண்டும் தொய்விற்கு செல்லும் என்ற ஐயம் அதிகமாக உள்ளது. நிறுவன ஒழுக்கம் இல்லாத இந்த நிறுவனம் எந்த அளவு சிறப்பாக செயல்படும் என்பதும் ஒரு கேள்வியாக தான் உள்ளது.
இதனால் நமது வாசகர்களும் இந்த பங்கில் இருந்து தமது முதலீட்டை விலக்கிக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்குப் பதிலாக இன்னொரு பங்கு இலவசமாக ஒரு வாரத்தில் பரிந்துரை செய்யப்படும்.
மற்ற பங்குகளில் நமது நிலைகளில் ஏதும் மாற்றம் இல்லை.
முழுமையான போர்ட்போலியோவை இங்கு பார்க்கலாம்.
40% லாபத்தில் 'முதலீடு' இலவச பங்கு பரிந்துரைகள்

அப்பா, இரண்டாவது மனைவி, முதல் மகன் |
கார்பரேட்டில் குடும்ப சண்டை என்பதை தனிப்பட்ட வாழ்க்கை என்று விட்டுக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் சண்டையை நிறுவன நிர்வாகம் வரை இழுத்து வந்துள்ளார்கள்.
ஆஷாபுரா நிறுவனத்தின் மனித வள மேலாண்மை உழியர்கள் கூட இந்த சண்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
இதனால் நீண்ட காலத்திற்கு பிறகு, லாபத்தில் மீண்ட ஆஷாபுரா நிறுவனம் மீண்டும் தொய்விற்கு செல்லும் என்ற ஐயம் அதிகமாக உள்ளது. நிறுவன ஒழுக்கம் இல்லாத இந்த நிறுவனம் எந்த அளவு சிறப்பாக செயல்படும் என்பதும் ஒரு கேள்வியாக தான் உள்ளது.
இதனால் நமது வாசகர்களும் இந்த பங்கில் இருந்து தமது முதலீட்டை விலக்கிக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்குப் பதிலாக இன்னொரு பங்கு இலவசமாக ஒரு வாரத்தில் பரிந்துரை செய்யப்படும்.
மற்ற பங்குகளில் நமது நிலைகளில் ஏதும் மாற்றம் இல்லை.
முழுமையான போர்ட்போலியோவை இங்கு பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக