செவ்வாய், 13 மே, 2014

பங்குச்சந்தையில் தேர்தல் முடிவுகளை எப்படி அணுகுவது?

இந்த அளவு பரபரப்பாக இந்திய பங்குச்சந்தைகளை என்றும் பார்த்ததில்லை. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக சந்தை காளையின் பிடியில் உள்ளது.


நேற்று கருத்து கணிப்புகள் தொலைக்கட்சிகளில் வெளிவந்த பிறகு ஏதோ தேர்தல் முடிவுகள் வந்தது போல் காட்சிகள் இருந்தன. உட்கார்ந்து சத்தம் போட வைப்பதில் நம்ம மீடியாக்கள் கொஞ்சம் ஓவர் தான்.

நாமும் ஒரு மிகச்சிறிய கருத்துக்கணிப்பு நடத்தினோம்:). அதிகமாக 53% நண்பர்கள் பிஜேபி கூட்டணிக்கு 200 முதல் 250 இடங்கள் கிடைக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். அது தான் எமக்கும் தோன்றுகிறது. வந்தால் நல்லது போல் உள்ளது.
ஆனாலும் ஒரு முதலீட்டாளராக இந்தியாவில் கருத்துக் கணிப்புகள் பற்றிய இது வரை நடந்த உண்மைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுது தான் தேர்தலுக்கு பின் சந்தையை நாம் தைரியமாக எதிர் கொள்ள முடியும்.

  • கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் கருத்துகணிப்புகள் பொய்த்துள்ளன. 
  • நாடாளுமன்ற கருத்துக் கணிப்புகள் எப்பொழுதுமே ஓரளவு பிஜேபிக்கு சாதகமாகவே இருந்துள்ளன. 
  • சட்டமன்ற தேர்தல்களில் கருத்துக் கணிப்புகள் உண்மையானது போன்று நாடாளுமன்ற தேர்தல்களில் இது வரை நடந்து இல்லை.

இருந்தாலும்,
நம்மைத் தயார் செய்வதற்காக சில சாத்தியங்களை எடுத்துக் கொண்டால் வரும் தினங்களில் பங்குச்சந்தையை பதட்டப்படாமல் அணுகலாம்.

  • காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என்று கருதலாம். எல்லா கருத்து கணிப்புகளும், மக்கள் எண்ணங்களும் இதில் ஒத்து வருகின்றன. அதனால் 0% வாய்ப்பு.
  • பிஜேபி கூட்டணி 250 என்ற எல்லையைத் என்பதைத் தாண்டி விட்டால் எளிதில் ஆட்சி அமைத்து விடும். அப்படியான சூழ்நிலையில் குறுகிய காலத்தில் சென்செக்ஸ் 26000 வரை செல்ல வாய்ப்புண்டு. இதற்கு ஒரு 30% வாய்ப்பு என்று எடுத்துக் கொள்வோம்.
  • பிஜேபி கூட்டணி 200 முதல் 250 வரை பெற்றால் அம்மா, அக்கா, அத்தை என்று பலர் தயவோடு ஆட்சி அமைத்து விடுவார்கள். அப்படியான சூழ்நிலையில் இதே 24000 என்ற நிலையில் நிலை பெற வாய்ப்புண்டு. இதற்கு 50% வாய்ப்பு என்று எடுத்துக் கொள்வோம்.
  • பிஜேபி கூட்டணி 200 க்கு கீழ் பெற்றால் ஒரு நிலையில்லாத ஆட்சி தான். அப்படியான சூழ்நிலையில் மீண்டும் 21000 என்ற நிலைக்கு செல்வதற்கு வாய்ப்புள்ளது.. இதற்கு 20% வாய்ப்பு என்று எடுத்துக் கொள்வோம்.


மெய்யாகுமா?


வாய்ப்பே இல்லாத முதலில் உள்ளதை விட்டு விட்டு, கடைசி மூன்று வாய்ப்புகளுக்கும் நம்மைத் தயார்படுத்திக் கொள்ளலாம்.

கடைசி வாய்ப்பில்(200 க்கு கீழ்) பங்குச்சந்தை பாதாளத்தில் விழுந்தால், அப்படியே நல்ல நிறுவனங்களை இரண்டு வருட கால முதலீட்டிற்கு வாங்கிப் போடுங்கள். நீண்ட கால முதலீட்டைப் பொறுத்த அளவில் நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கையே முதன்மை. நல்ல பங்குகளுக்கு அரசியல் அவ்வளவு தெரியாது. ஏற்கனவே பல நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் வெளிவந்துள்ளன. இந்த சூழ்நிலை வாங்குவதற்கான வாய்ப்பு.

மற்ற நேர்மறையான வாய்ப்புகளில் சில நாட்கள் (ஒரு வாரம் வரை) விற்கவும் வேண்டாம், வாங்கவும் வேண்டாம். வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு, அதன் பிறகு ஏதேனும் சிறிய நிகழ்வுகளில் சந்தை கீழிறங்கும் போது SIP முறையில் வாங்கிப் போட்டுக் கொண்டே வாருங்கள். இதுவும் இரண்டு வருட கால முதலீட்டில் நல்ல ரிடர்ன் கொடுக்கும்.

ஆனால், தேர்தல் முடிவுகள் வரும் வரை எந்த முடிவுகளும் எடுக்க வேண்டாம். சென்செக்ஸ் கூட, கூட நமக்கும் ஏதாவது பண்ணனும் என்று தோன்றும். ஆனால் அமைதியாக இருப்பது நல்லது.

தற்போதைக்கு சந்தை தின வர்த்தகர்களுக்கே...இன்னும் இரண்டு வாரம் இவர்கள் தாம் புகுந்து விளையாடுவார்கள். அதில் நாம் சிக்க வேண்டாம்.

ஆக எல்லாம் நன்மைக்கே! எல்லா வாய்ப்புகளுக்கும் தயாராகி விட்டால்

தேர்தலுக்குப் பிறகு தேவை என்றால் எமது DYNAMIC PORTFOLIOவில் இணைந்து கொள்ளுங்கள்!


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக