செவ்வாய், 9 செப்டம்பர், 2014

பங்குச்சந்தையில் ஒரு கருப்பு சந்தை

எமது முந்தைய பதிவில் SNOWMAN IPOவை 47 ரூபாய்க்கு வாங்குமாறு பரிந்துரை செய்து இருந்தோம். தற்போது இந்த பங்கின் மதிப்பு வெளிச் சந்தையில் 65~70 ரூபாய்.

அதாவது IPO விலையிலிருந்து 38% அதிக மதிப்பு கிடைக்கிறது.  பங்குச்சந்தையில் வரும் போது 65 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாக வாய்ப்பு அதிகம் உள்ளது.

இன்னும் பங்குச்சந்தையிலே பட்டியலிடப்படவில்லை. எப்படி வெளிச் சந்தையில் விலை நிர்ணயம் செய்யப்படும்? என்ற கேள்வி நமக்கு எழலாம்.

அதனைத் தான் "GREY MARKET" என்று பங்குச்சந்தையில் குறிப்பிடுகிறார்கள்.



இது கிட்டத்தட்ட தியேட்டரில் ப்ளாக்கில் விற்கப்படும் டிக்கெட் போல் போல் தான். ஆனால் சிறிய வேறுபாடுகளுடன் இருக்கும்.

கிரே சந்தை முறையைக் கண்காணிக்க செபி போன்ற ஒழுங்கு முறை அமைப்புகள் கிடையாது. கிட்டத்தட்ட வாங்குபவருக்கும், விற்பவருக்கும் இடையே உள்ள ஒரு ஒப்பந்தம். அதில் ஒருவர் டீலர் போன்று செயல்படுவார். இந்த டீலர்கள் பெரும்பாலும் மும்பை, குஜராத் போன்ற இடங்களில் மட்டும்  அதிக அளவு காணப்படுவர். இதனை முழுவதுமாக லீகல் என்றும் சொல்லி விட முடியாது.

உதாரணத்திற்கு நாம் IPOவில் சில பங்குகளுக்கு விண்ணப்பித்து இருக்கிறோம். ஆனால் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு அந்த பங்குகள் விலை IPO விலையை விட கூடவும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் குறையவும் வாய்ப்புள்ளது. அதாவது கொஞ்ச ரிஸ்க் வாய்ப்பு உள்ளது. அதனை தவிர்ப்பதற்கு கிரே மார்கெட்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கிரே சந்தையில் IPO பங்கை வாங்க விரும்புவர் ஒரு டீலர் மூலமாக நம்மை அணுகுவர். ஒரு குறிப்பிட்ட அதிகப்படியான விலையைக் குறிப்பிட்டு நமக்கு அலாட் செய்யப்படும் பங்குகளை வாங்குவதற்கு விரும்புவார். நாம் விருப்பம் இருந்தால் அவரிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்.

நமக்கு IPO மூலம் பங்குகள் கிடைத்தால் அந்த பங்குகளை அவரது டிமேட் கணக்கிற்கு அனுப்பி விட வேண்டும். அதிகப்படியான Oversubscription நடந்து இருந்தால் நமக்கு பங்குகள் கிடைக்க போகாமல் இருக்கவும் வாய்ப்புண்டு. அந்த சமயத்தில் கிரே ஒப்பந்தம் தானாகவே காலாவதியாகி விடும்.

இது தான் "Grey Market" என்று அழைக்கப்படுகிறது.

இங்கு, விற்கும் நமக்கு அதிக விலையில் ரிஸ்க் இல்லாமல் பங்குகளை விற்க முடிகிறது.

பொதுவாக IPOவில் வரும் பங்குகள் 100%, 200% லாபங்களை மிகக் குறைந்த காலத்தில் கொடுத்து விடும். அதனால் வாங்குபவருக்கும் இந்த அதிக லாபங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் சில பங்குகள் குறைந்த விலைக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது. அந்த ரிஸ்கையும் வாங்குபவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

--

எமக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் குறைவு தான் போல. 900 snowman பங்குகளுக்கு வின்னப்பித்ததில் ஒன்று கூட கிடைக்கவில்லை.

பல வாசகர்களுக்கும் கிடைக்கவில்லை என்பது மெயில்களில் இருந்து தெரிகிறது. நாளை "Allotment Procedure"யை கொஞ்சம் ஆய்வு செய்த பிறகு அது தொடர்பாக பதிவை எழுதுகிறோம்.

பங்குகள் கிடைத்த அதிர்ஷ்டகார நண்பர்கள் கருத்துக்களாக பகிரவும்!

செப்டெம்பர் 15 போர்ட்போலியோவிற்கு தேதி நெருங்கி வருவதால் விரும்பும் நண்பர்கள் முன்னதாகவே பதிவு செய்து கொள்ளவும்.

 
« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

6 கருத்துகள்:

  1. I have applied for 3000 Shares, I am also unlucky, I have not got a single stock. Now what strategy we can do whether shall we purchase the same listing day price or shall wait for some days.

    Being First IPO experience, Not having much idea of share movement after listing. But I guess since oversubscribed 60 times buyers would bull, I guess we may purchase on listing date.

    Your suggestion in this will be appreciated...

    பதிலளிநீக்கு
  2. Me also didn't get even a single share :(. As Prabhu asked, shall we go for it on the listing day.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Prabhu and Venkatesh!, Thanks for your comments! Today's article is based on your comments only. Please read http://www.revmuthal.com/2014/09/snowman.html

      நீக்கு
  3. Applied for 4 lots and got 1 lot. Planning to sell 200 and keep 100 for long term. Any suggestions Rama?

    பதிலளிநீக்கு