வியாழன், 20 நவம்பர், 2014

கோடக் மகிந்திரா வங்கியுடன் இங்க் வைஸ்யா இணைந்தது

நேற்று இந்திய வங்கித் துறையில் ஒரு பெரிய டீல் நடந்து முடிந்தது. இந்த டீல் மூலம் கோடக் மகிந்திரா வங்கி இந்தியாவின் நான்காவது பெரிய வங்கியாக மாறுகிறது. (KOTAK MAHINDRA BANK)


நெதர்லாந்தை மையமாக வைத்து இயங்கும் இங்க் வைஸ்யா வங்கி (ING VYSYA BANK) அதன் மின் வணிக கட்டமைப்பு முறையில் வலுவான வங்கி. மேற்கு மற்றும் தெற்கு இந்தியாவில் பரவலாக கிளைகளைக் கொண்டிருக்கிறது.



இந்த வங்கியை கோடக் மகிந்திரா வங்கி நேற்று வாங்குவதாக அறிவித்தது. இதன் மூலம் இங்க் வைஸ்யாவின் 1000 பங்குகளுக்கு கோடக் மகிந்திராவின் 720 பங்குகளை பெறலாம். அதாவது இங்க் வைஸ்யாவின் ஒரு பங்கிற்கு தோராயமாக 790 விலை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த முப்பது நாட்கள் சாராசரி விலையை விட 15% அதிகம்.

அதே நேரத்தில் இந்த விலை இங்க் வைஸ்யாவின் புத்தக மதிப்பை விட 2.50 மடங்குகள் மட்டுமே அதிகமானது. இதற்கு முன் HDFC வங்கி CENTURION வங்கியை வாங்கிய போது புத்தக மதிப்பை விட நான்கு மடங்கு மதி[ப்புகள் அதிக விலை கொடுத்தது. (புத்தக மதிப்பை வைத்து நல்ல நிறுவனத்தை எப்படி கண்டுபிடிக்க?)

இதனால்  இங்க் வைஸ்யாவைப் பொறுத்த வரை இது மிகவும் நல்ல டீல் என்று கூற முடியாது. ஆனால் கோடக் மகிந்திராவுக்கு நல்ல டீல். இதனால் தான் சந்தையில் இங்க் வைஸ்யாவை விட கோடக் வங்கி பங்குகள் அதிக வேகத்தில் உயர்ந்து வருகின்றன. கோடக்கின் துணை நிறுவனங்களான KOTAK SECURITIES போன்றவையும் இந்த டீலில் உள்ளடங்கும்.

கோடக் மகிந்திரா வங்கி இந்தியா முழுவதும் பரவலாக விரிவாவதற்கு இந்த டீல் அதிக அளவு பயன்படும். இந்த டீல் மூலம் 1200க்கும் மேற்பட்ட கிளைகளை கோடக் மகிந்திரா வங்கி பெறும். வேகமான வளர்ச்சிக்கும் இந்த டீல் உதவும்.

தற்போதைய சூழ்நிலையில் கோடக் மகிந்திரா வங்கி முதலீட்டிற்கு ஏற்றதாக மாறி உள்ளது. திருத்தங்கள் ஏற்படும் போது வாங்கி போடலாம்.

English Summary:
Ing Vysya merged with Kotak Mahindra Bank.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: