வியாழன், 8 ஆகஸ்ட், 2013

EPF Pension உண்மையாகவே பயனுள்ளதா?

தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் மாத சம்பளத்தில் 12% PFக்கு பிடித்தம் செய்யபடுகிறது. அதே போல் நிறுவனங்களும் 12% பங்களிப்பு வழங்குகின்றன.

இதில் பகுதி (12%+3.67%) வருங்கால வைப்பு நிதி(PF)க்கும் பகுதி(8.33%) ஓய்வூதியம்(Pension) என்று செல்கிறது.


EPF Pension


ஒருவர் 7500 ரூபாய் மாதசம்பளம்(திட்டக்கமிஷன் படி இவங்க எல்லாம் பெரிய பணக்காரங்க)  வாங்குவதாக இருந்தால் 1139 ரூபாய் (15.67%) PFக்கும் அதிக பட்ச 541 ரூபாய் பென்ஷன்க்கும்  செல்லும். இறுதியில் 58 வயதுக்கு பிறகு அவர் அதிகபட்சமாக 3250 ரூபாய் பெறுவார். 



இதே 541 ரூபாயை ஒருவர் மாதம் மாதம் RD accountல் 35 வருடங்களுக்கு செலுத்தினால் 58 வயதில் 12,49,263 ரூபாய் கிடைக்கும். (8% வட்டி). இந்த தொகையினை FDல் 9% வட்டிக்கு போட்டால் 9369 ரூபாய் கிடைக்கும். கிட்டத்தட்ட 3250 ரூபாயை மூன்று மடங்கு அதிகம்.

இன்னும் இந்த சூத்திரத்தில் 26% பேர் 500 ரூபாய்க்கும் குறைவாக ஓய்வூதியம் பெறுகிறார்கள்.சிலர் 100 ரூபாய்க்கும் கீழ் பெறுகிறார்கள்.அரசு கட்டாயமாக இந்த திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும்.

English Summary:
Employee Provident Pension is not giving better returns as expected. It keeps big money with Govt. for longer term.



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக