Monday, August 26, 2013

இது முதல்வன் ஸ்டைல்: 60 நாளில் 1.9 லட்சம் கோடி மதிப்பு திட்டங்களுக்கு அனுமதி

நமது தற்போதைய அரசின் நிலக்கரி சுரங்க ஊழல்களினால் சுரங்க அனுமதிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஏராளாமான நிலக்கரி சார்ந்த மின் திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.


இதனைச் சார்ந்த நிறைய மின்சாரம் மற்றும் நிலக்கரி சார்ந்த நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய வங்கி கடனை செலுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டன.

இதனால் இந்த நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த வங்கிகளின் வாராக்கடன்(Non Performing Asset) கடுமையாக உயர்ந்து பங்கு சந்தை வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தது.


இது போக அதிகரித்து வரும் மின் தேவைக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய போய் அந்நிய செலாவணி(Foreign Reserve) குறைந்து ரூபாய் மதிப்பு குறைவுக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

இப்படி ஒரு ஊழல் கடந்த ஒரு வருடமாக இந்திய பொருளாதார நிலையை புரட்டி போட்டு விட்டது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு மதிய அரசு தள்ளப்பட்டது. எல்லா ஒட்டு வேலைகளையும் பார்த்த பிறகும் 
ரூபாய் கீழே வர மறுத்தது.  நாம் முந்தைய பதிவுகளில் கூறியது போல் உற்பத்தியை அதிகரிக்காத வரை மற்ற முயற்சிகள் மிகுந்த பலனைத் தராது .

இப்ப(மாவது) நமக்கு கொஞ்சம் நம்பிக்கை தரும் முயற்சிகளில் அரசு ஈடுபட ஆரம்பித்துள்ளது. இன்றைக்கு கூடும் அமைச்சரவை 60 நாளில் 1.9 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அனுமதி கொடுக்க முடிவு செய்துள்ளது. 

இதில் 36 பெரிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான திட்டங்கள் மின் துறையை சார்ந்தவை. மற்ற திட்டங்கள் கட்டமைப்பு, நெடுஞ்சாலை மற்றும் எரிபொருள் துறைகளை சார்ந்தவை. இதில் இந்தியாவின் மிகப்பெரிய நெடுஞ்சாலை திட்டமான 7000 கோடி மதிப்புள்ள 555km அகமதாபாத்-கிஷான்கர் திட்டமும் உள்ளடக்கம்.

இந்த திட்டங்கள் இவ்வளவு நாள் ஊழல், சுற்றுசூழல் அனுமதி, லைசென்ஸ் போன்ற பிரச்சனைகளால் முடங்கி போய் கிடைந்தன.


இந்த எல்லாத் திட்டங்களுக்கும் இன்னும் 60 நாளில் அனுமதி வழங்கப்படுமாம்.கிட்டத்தட்ட முதல்வன் ஸ்டைலில் அர்ஜுனாக ப.சிதம்பரம் தெரியப் போகிறார்:).

இதுக்குத் தான் எல்லா வருடமும் தேர்தல் வந்தால் நம்ம அரசு ஒவ்வொரு வருடமும் 60 நாளாவது வேலை செய்யும்.

சரி நம்ம தேவைக்கு வருவோம். பங்குச்சந்தையில் மின்துறை(Power), நிலக்கரி, நிலக்கரி எடுக்கும் நிறுவனங்கள் சார்ந்த பங்குகள் யாரும் சீண்டாமல் அடிமாட்டு விலைக்கு கிடைக்கின்றன. இதுக்கு மேல் பங்கு விலைகள் குறைவதற்கான முகாந்திரம் குறைவாகவே உள்ளது. இது போக இந்த துறை சம்பந்தப்பட்ட அரசின் வேகமான அனுமதி முடிவுகள் இந்த நிறுவனங்களுக்கு சாதமாக அமைகின்றன.

அதில் ஒன்றை வாங்கி போட்டால் இரண்டு வருடங்களில் இரண்டு, மூன்று மடங்காக திருப்பி எதிர் பார்க்கலாம். கொஞ்சம் ரிஸ்கும் இருப்பதால் உங்கள் போர்ட் போலியோவில் 5%க்கு உள்ளாக வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பதிவு பயனுள்ளதாக இருப்பின் உங்கள் ஓட்டினைப் பதிவு செய்யவும்.
தங்கள் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயக்கமின்றி பதிவு செய்யவும்.

English Summary:
Fastest approval for new projects to improve Growth

தொடர்புடைய பதிவுகள்:

ரூபாயின் மதிப்பு ஏன் சரிகிறது?« முந்தைய கட்டுரைAdvt.

Email: muthaleedu@gmail.com


4 comments:

 1. //இதுக்குத் தான் எல்லா வருடமும் தேர்தல் வந்தால் நம்ம அரசு ஒவ்வொரு வருடமும் 60 நாளாவது வேலை செய்யும்.//

  Super!

  ReplyDelete
 2. கண் கேட்ட பிறகு சூரிய நமஸ்காரமா..

  செய்ய வேண்டியதை செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமல் விடுவதும், தவிர்க்க வேண்டியதை முந்திரிக்கொட்டையாய் செய்து முடிப்பதும் தீராத தலைவலியை தான் தரும்.

  பார்ப்போம்

  ReplyDelete
  Replies
  1. சரி தான் உங்கள் கருத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன்!

   Delete