வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

சிறு முதலீட்டார்களுக்கு பங்கு சந்தையில் சில டிப்ஸ்

நாம் பங்குசந்தையில் நுழைந்த போது நண்பர்கள், பெற்றோர் என்று நிறைய பேர் அது ஒரு சூதாட்டம் என்று தடுத்தனர். பல நேரங்களில் அது உண்மை என்றே தோன்றியது. ஏனென்றால் 2008-09 அமெரிக்க பொருளாதார பின்னடைதல் ஏற்பட்ட போதும் சத்யம் ஊழல் நடைபெற்ற போதும் பல பேர் நம் கண் முன் பங்குச்சந்தை இழப்புகளால் கஷ்டப்படுவதைப் பார்க்க முடிந்தது.

இந்த கடுமையான தருணங்களில் FII போன்ற பெரிய முதலீட்டு நிறுவனங்கள் தப்பி விடுவார்கள். ஆனால் பாதிக்கப்படுவது பங்குச்சந்தை பற்றி சரி வர தெரியாமல் முதலீடு செய்யும் சிறு முதலீட்டார்கள் தான். சிறு முதலீட்டர்களின் நஷ்டமே பெரிய தலைகளுக்கு லாபமாக செல்கிறது.


நமது சில அனுபவங்களையும் கற்றவைகளையும் பகிர்வது எம்மை போன்ற சிறு முதலீட்டர்களுக்கு பலனாக இருக்கும் என்று கருதுவதால் தொகுத்து வழங்குகிறோம்.



  • கடன் வாங்கிய தொகை, கல்யாண, மருத்துவ மற்றும் இதர அவசர செலவுக்கு வாய்த்த பணத்தை பங்குசந்தையில் முதலீடு செய்யாதீர்கள். நாமும் நமது பணமும் மிகுந்த பொறுமையுடன் இருந்தாலே பங்கு வர்த்தகம் நமக்கு லாபமாக அமையும்.

  • பங்குகளை அடிக்கடி வாங்கி விற்காதீர்கள். இதனால் பங்கு தரகர்களுக்கு தான் லாபமே தவிர முதலீடு செய்பவர்களுக்கல்ல. ஒரு வருடத்தில் விற்ற பங்குகளின் லாபத்திற்கு SHORT TERM TAX GAIN என்ற வரி செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

  • ஒரு நிறுவனம் 1 வாரத்தில் அல்லது 1 மாதத்தில் உச்ச நிலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பது சரியல்ல. அவர்களுக்கும் நாம் போதுமான நேரம் கொடுக்க வேண்டும்.


  • இந்த அடிப்படை விதியை நினைவில் கொள்க: "பங்குவிலை குறையும் போது வாங்க வேண்டும். அதிகரிக்கும் போது விற்க வேண்டும்."

  • ஊடகங்களில் பங்கு ஆலோசகர்கள் சொல்லும் ஆலோசனைகளை அப்படியே ஏற்க தேவையில்லை. அதனை சரி பார்த்த பிறகு ஏற்று கொள்ளலாம். ஊடகங்களுக்கும் நிறுவங்களுக்கும் பங்கு தரகர்களுக்கும் இடையே ரகசிய வலைப்பின்னல்கள் உள்ளது உண்மையே.

  • தங்கள் நிதியை SMALL CAP, MID CAP, LARGE CAP என்றும் வங்கி, ஆட்டோ, மென்பொருள், பொறியியல், சுரங்கம் என்று பல துறைகளில் பகிர்ந்து முதலீடு செய்யவும். இது லாப நஷ்டங்களை சம நிலைப்படுத்த உதவும். ஆனால் போர்ட்போலியோவை 10 அல்லது 12 நிறுவனங்களுக்கு உள்ளாக வைத்துக்கொள்வது எளிதில் கண்காணிக்க உதவும்.

  • நாம் முதலீடு செய்த நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள நன்றாக இருக்கும் வரை பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களை பற்றி அதிக கவலைப்பட வேண்டாம். கடவுளால் கூட சென்செக்ஸ் ஏற்ற இறக்கங்களை கணக்கிட்டு சொல்லமுடியாது:).நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை நன்றாக கண்காணித்து வரவும்.

  • நம்மிடம் உள்ள எல்லா பணத்தையும் ஒரே சமயத்தில் முதலீடு செய்வதை விட SIP(Systematic Investment Plan) என்ற முறையில் சிறுக சிறுக முதலீடு செய்யவும், இது பங்கு விலை சராசரியை சரியான முறையில் வைத்துக்கொள்ள உதவும்.

  • அதிர்ஷ்டம், ஜோதிடம், நல்ல நேரம் இதெல்லாம் இங்கு வேலைக்கு ஆகாது. அதனால் இதிலிருந்து தள்ளியே நில்லுங்கள். இப்பொழுது சில ஜோதிடர்களே பங்கு பரிந்துரைகள் வழங்குவதை moneycontrol இணையதளத்தில் பார்த்து வருகிறேன்.

  • எந்த பங்கின் மீதும் காதல் கொள்ள வேண்டாம். சந்தை இறக்கங்களில் உணர்ச்சிவசப்படவும் வேண்டாம்.

English Summary:
Tips for share investor

முடிவாக இந்த குறளை நினைவில் வைத்துக் கொள்க.
"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு."

உங்கள் பங்கு வர்த்தகம் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்!

இந்த பதிவு குறித்து தங்கள் கருத்துக்கள் ஏதேனும் தங்களிடம் இருப்பின் தயக்கமின்றி பதிவு செய்யவும்.

தொடர்புடைய பதிவுகள்:

முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 1








« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்: