இன்றைய தினசரியில் ஒரு செய்தி பார்க்க நேர்ந்தது. இதற்கான தொடர்பு இங்கே: "டிசம்பருக்குள் தங்கம் விலை புதிய உச்சத்தை தொடும் என எதிர்பார்ப்பு. "
"அன்னிய செலாவணி கையிருப்பும் குறைந்தது.அதனால், தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்தது. "பொதுமக்கள், தங்கத்தில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டது. இதன் பயனாக, ஜூன் மாதம், தங்கத்தின் விலை வெகுவாகக் குறைந்தது."" (தினமலர்)
."பண்டிகை காலம், கல்யாண சீசன் காரணமாக, விலை உயர்வு தொடரும்; 10 கிராம் தங்கத்தின் விலை, டிசம்பருக்குள், 31 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விடும்' என, தங்க நகை வியாபாரி ஒருவர் கூறியுள்ளார்." (தினமலர்)
அதில் கூறப்பட்ட செய்தியைப் பார்த்தால் ஏதோ இந்திய அரசின் நடவடிக்கையால் தான் தங்க விலை குறைவானது என்ற வகையில் செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்திய அரசின் நடவடிக்கைகள் ஒன்றில் ஒன்றான காரணியே.
ஆனால் இதை விட பல காரணிகள் சர்வதேச அளவில் உள்ளன. மேலும் சில தகவல்களை பகிர்வது இதனை தெளிய வைக்க உதவும்.
உங்கள் குறிப்பிற்காக கடந்த இரண்டு வருட தங்க விலைகளை கீழ உள்ள படத்தில் தந்துள்ளோம். ஒரு கிராமிற்கு இந்திய ரூபாயில் விலையை குறிப்பிடுகிறது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி ஜூன் 19ல் ஒரு அறிவித்தது. அதன்படி அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்ந்து முன்னேறும் என்று எதிர் பார்க்கப்படுவதால் 85 பில்லியன் டாலரை அவர்கள் நாட்டை நோக்கி ஈர்க்கும் பணியினை ஆரம்பித்தது.
இவ்வாறு நிகழுமாயின் மற்ற நாடுகளில் டாலரின் தேவையை மிகுந்த அளவில் அதிகரிக்கும். அது மற்ற நாடுகளின் சொந்த நாணயத்தின் மதிப்பை பெருமளவில் குறைத்து விடும்.
கீழே உள்ள வரலாற்று தரவு படத்தை பார்த்தால் தெரியும். இதுவரை தங்கமும் டாலரும் தங்கள் விலையில் எதிரெதிர் விகிதத்திலே சென்று கொண்டிருக்கின்றன. அதாவது டாலர் உயர்ந்தால் தங்கம் விலை குறைகிறது,
இது போக ஐரோப்பாவில் உள்ள நாடுகள் பொருளாதார பிரச்சனைகளில் உழன்று வருகின்றன. இதிலிருந்து காப்பதற்கு தங்களிடம் உள்ள தங்கத்தை உலக மத்திய வங்கியிடம் விற்று வருகின்றன. இந்தியாவும் கூட 2009ல் வாங்கிய 200 டண் தங்கத்தை விற்கும் என்று எதிர் பார்க்கலாம்.
உலக வங்கியின் அறிக்கைப்படி 2012ல் தங்கத்தின் தேவை 12% குறைந்துள்ளது. இவ்வாறு தங்கத்தை வாங்குவதை விட விற்பதிலே அதிகம் கவனம் செலுத்துகிறார்கள்.
இதை எல்லாம் ஒப்பிட்டால் நாம் தீபாவளியில், அட்சய திருதியில் வாங்கும் தங்கம் மிகக் குறைவே. அதை இல்லாம் விட நம்முடைய தற்போதைய பொருளாதார தேக்கத்தில் தங்கத்தை வாங்க முற்படும் மக்களும் குறைவாகவே இருப்பார்கள்.
நாம் தங்கத்தின் விலை இன்னும் கீழே விழும் என்று ஒரே அடியாக அறுதியிட்டு கூற முடியாது. ஆனால் இதே விலை நிலவரத்துக்குள் சுழலவே வாய்ப்புள்ளன. மேலே உள்ள செய்தியில் குறிப்பிட்டவாறு குறைந்தது ஒரு வருடத்திற்குள் உச்சத்துக்குள் செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவே. பத்து வருட முதலீட்டு காலம் நோக்கி உள்ளவர்கள் SIP முறையில் மாதம் தோறும் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம்.
செய்தியைப் பார்க்கையில் நகைக்கடை காரரின் விளம்பரமே செய்தியாக வந்துள்ளது போல் தோன்றுகிறது. ஊடகங்கள் தங்கள் கருத்துகளை முன் வைக்கையில் அதற்கான தரவுகளையும் தெளிவாக வைக்க முன் வர வேண்டும்.
இந்த பதிவு குறித்து தங்கள் கருத்துக்கள் ஏதேனும் தங்களிடம் இருப்பின் தயக்கமின்றி பதிவு செய்யவும்.
English Summary:
Shall we buy Gold now?
ரூபாயின் மதிப்பு ஏன் சரிகிறது?
Dinamalar could have put more details..
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி!
நீக்குமிகச்சரியான அலசல்! ஆனால் வாங்கலாமா கூடாதா என்று தெளிவான பதில் இல்லையே?
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி கவிப்பிரியன்! எமது பதில் "பத்து வருட முதலீட்டு காலம் நோக்கி உள்ளவர்கள் SIP முறையில் மாதம் தோறும் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கலாம்." SIP என்பது Systematic Investment Plan.
பதிலளிநீக்கு