வியாழன், 1 ஆகஸ்ட், 2013

வெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்த ரமேஷ்

அண்மையில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் ஒரு பேட்டி படித்து அசந்து போனேன்.

வெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்த ரமேஷ் பக் ஷி ஷேர் மார்கெட் பற்றி சொல்லிய பல விஷயங்கள் அவசியம் பகிர தோன்றியது !

டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஆங்கிலத்தில் வந்த கட்டுரை இது. தமிழாக்கம் மட்டும் அடியேன் :)

இனி ரமேஷ் பக் ஷி பேசியது

*********
ரமேஷ் பக் ஷி 

எனக்கு 30 வயதாக இருக்கும்போது நான் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய துவங்கினேன். குடும்பத்துக்கான மாதந்திர செலவுகள், இன்சூரன்ஸ் ப்ரீமியம் போன்ற செலவுகள் போக மீதம் இருக்கும் பணத்தில் 30 % பிக்சட் டெபொசிட் போன்றவற்றிலும், மீதம் இருக்கும் பணம் ஷேர் மார்க்கெட்டிலும் முதலீடு செய்வேன்

என் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளிலும் - நான் முதலீடு செய்த 2 கம்பனிகளின் ஷேர்கள் தான் உதவின அவை - ஹிந்துஸ்தான் யூனி லீவர் மற்றும் மெட்ராஸ் சிமெண்ட் ஆகிய நிறுவன பங்குகள்

ஹிந்துஸ்தான் யூனி லீவர் பங்குகளை முதன்முதலாக 64,000 ரூபாய்க்கு வாங்கினேன். அடுத்த 20 வருடம் அதனை நான் விற்கவே இல்லை. இந்த 20 வருடத்தில் நிறுவனம் பலமுறை இலவச போனஸ் ஷேர்கள் வழங்கியது. அவை எல்லாம் சேர்ந்து நான் 35,000 ஹிந்துஸ்தான் யூனி லீவர் ஷேர்கள் வைத்திருந்தேன். மெட்ராஸ் சிமெண்ட் நிறுவன பங்கும் ஏறக்குறைய இதே கதை தான்

இந்த இரண்டு பங்குகளும் எனக்கு கறவை மாடுகள் போல வேண்டிய போதெல்லாம் பணம் தந்தன. 3 குழந்தைகள் படிப்பு மகள் திருமணம், ஆஸ்பத்திரி செலவுகள் என எல்லாவற்றுக்கும் - இவற்றை கொஞ்சம் கொஞ்சமாய் விற்று தான் சமாளித்தேன்

கடந்த 40 வருடங்களில் வேறு பல பங்குகளும் வாங்கி விற்றுள்ளேன். ஆனால் எந்த ஷேர் வாங்கினாலும் 3 குறைந்தது முதல் 5 வருடங்கள் வைத்திருந்து அதன் பின் தான் விற்பேன்

இந்த 40 வருடங்களில் எத்தனையோ முறை பல பங்கு மார்க்கெட் ஊழல்கள் வந்து போய் விட்டது. இவை வரும் நேரத்தில் பங்குகள் விலை மிக குறைந்து நம் மன நிம்மதி தற்காலிகமாக குலைந்து போகும் !

தற்போதைய ஷேர் மார்க்கெட் முற்றிலும் வேறு விதமாய் இருக்கிறது. இப்போது நான் முற்றிலும் தவிர்ப்பவை பொது துறை நிறுவன பங்குகள் மற்றும் நிறுவனங்கள் வெளியிடும் IPO - க்களை.

ஒரு போதும் நான் ஷேர்களை அன்றே வாங்கி அன்றே விற்கும் வேலையில் இறங்கியதில்லை. அ து சூதாட்டம் போல

பொதுவாக ஷேர் மார்கெட் பற்றி சொல்லும்போது ஒன்று சொல்வார்கள் : உங்களின் எல்லா செலவுகளும் போக - மீதமுள்ள பணத்தில் - உங்கள் வயது என்னவோ - அத்தனை சதவீதம் பிக்சட் டெபாசிட் போன்றவற்றில் முதலீடு செய்யணும் மீதம் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யணும் என்பார்கள். அதாவது வயது அதிகமாக, ஆக ஷேர் மார்கெட் முதலீட்டை குறைத்து கொண்டு பிக்சட் டெப்பாசிட் போன்றவற்றில் அதிகம் முதலீடு செய்யணும் என குறிப்பது இதன் அர்த்தம். ஆனால் என் விஷயத்தில் நான் இதற்கு நேர் மாறாக செய்கிறேன். எனக்கு இப்போது வயது 80. நான் எனது மீதமுள்ள வருமானத்தில் 80 % ஷேர் மார்கெட்டில் சேமிக்கிறேன் மீதம் 20 % தான் பிக்சட் டெபொசிட் அல்லது கடன் பத்திரங்களில் சேமிக்கிறேன்

இந்த வயதிலும் ஷேர் மார்க்கெட்டில் பணம் முதலீடு செய்வதால் என் மனது மிக விழிப்புடன் இருக்கிறது. இது உடல் நிலையை நன்கு வைத்து கொள்ள உதவுகிறது மேலும் எனது சொத்து மதிப்பு ஏறி இறங்குவதில் பாதிக்காமல் இருக்க கற்று கொள்வது வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை ஏற்று கொள்ளும் மன பக்குவத்தை தருகிறது

*********
அவரது பேட்டி இங்கு முடிகிறது.

ஷேர் மார்க்கெட்டின் மிக முக்கியமான நன்மை - அதன் liquidity - தான். உங்களுக்கு வேண்டிய நேரம் வேண்டிய அளவு ஷேர்களை விற்கலாம். ஒரு நிலம் வாங்கி வைத்திருந்தால் அவசரத்திற்கு விற்பதில் சிரமம் இருக்கும். அதே இடத்தில் நிலம் வாங்க விருப்பமுள்ள ஆள் கிடைக்கணும்; விலை படியனும்; எல்லாம் முடிந்து விற்று முடிக்க சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம். ஆனால் ஷேர் மார்க்கீட்டில் நீங்கள் முதலீடு வைத்திருந்தால் அன்றைக்கே கூட விற்று விட முடியும்

ஆனால் ஷேர் மார்க்கெட்டில் தனி நபர்கள் பலரும் பணத்தை இழக்கவே செய்கின்றனர். ஷேர் மார்க்கெட்டில் உண்மையில் நன்கு பணம் செய்பவர்கள் Financial Institution என்று சொல்லப்படுகிற நிறுவனங்கள் தான்.

தனி நபர்கள் செய்யும் மிக பெரிய தவறு உடனே லாபம் பார்க்க நினைப்பது

இந்த பேட்டி மூலம் நாம் எடுத்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் - ரமேஷ் - ஒவ்வொரு பங்கையும் பல வருடங்கள் பொறுமையாக விற்காமல் வைத்திருந்தது தான். நல்ல நிறுவன பங்கை வாங்கி, சில வருடங்கள் அதனை விற்காமல் பொறுமையாக வைத்திருந்தால் நிச்சயம் 3 - 5 வருடங்களில் நல்ல விலைக்கு செல்லும். இது முதலீட்டாளர்கள் அனைவருமே ஒப்பு கொள்ளும் விஷயம் !

English Summary:
6 laksh becomes 5 Crores in stock investment


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

5 கருத்துகள்: