ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

செய்தி பகிர்வு: விவசாய நிலங்களில் "பிளாட்" வாங்க ஆளின்றி வீண்

"கரும்பு, வாழை, நெல் என, ஆண்டு முழுவதும், சாகுபடி செய்யக்கூடிய விளை நிலங்களை, ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றி, பல ஆண்டுகளாகியும், வாங்க ஆளில்லாமல் வீணாகி வருகின்றன. பெரு நகரங்களில் சிறப்பாக இயங்கி வந்த, ரியல் எஸ்டேட் தொழில், 2008 முதல், சிறிய நகரங்கள், கிராமங்களில் ஊடுருவின. மேடான, விவசாயத்திற்கு, அதிகம் பயன்படாத நிலங்கள் மட்டுமே, Real Estateக்கு பயன்படுத்தப்பட்டன.



சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிப்போர், கிராமங்களில், குறைந்த விலையில் பிளாட் கிடைத்தால், வாங்கும் நிலைக்கு வந்தனர். குக்கிராமங்களில் கூட, ரியல் எஸ்டேட் தொழில் ஜோராக துவங்கப்பட்டது. விவசாயிகள் பலர், நிலங்களை ரியல் எஸ்டேட்டிற்கு, விற்று, மாற்றுத் தொழிலுக்குச் சென்றனர்.

கடந்த, இரண்டு ஆண்டுகளாக, ரியல் எஸ்டேட் தொழில், படிப்படியாக வீழ்ச்சியடைந்துள்ளன. வழிகாட்டி மதிப்பு உயர்வு, தங்கத்தில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால், வீட்டு மனைகள் வாங்குவோர் எண்ணிக்கை, கணிசமான அளவு குறைந்தது. கிராமங்களில் மனைகளுக்குப் பொதுமக்கள்இடையே போதிய வரவேற்பு இல்லை. புதிதாக ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கிய பலர், புஞ்சை நிலங்கள் மட்டுமின்றி, நஞ்சை நிலங்களையும் ரியல் எஸ்டேட்டிற்கு வாங்கி குவித்துள்ளனர். பல இடங்கள் கரும்பு, வாழை, கொய்யா, நெல் உள்ளிட்ட, பல பயிர்களும் விளையும் இடமாக உள்ளது. இந்த இடங்களில், ஏரி பாசன வசதியும் அதிகம் உள்ளது. எந்தப் பயிர் செய்தாலும் கூடுதல் மகசூல் கிடைக்கும் இடங்களில், பிளாட்டுகள் பிரித்து, பல ஆண்டுகளாக வாங்க ஆளில்லாமல், வீணாக தற்போது கிடக்கின்றன."

நன்றி : தினமலர், மூலம்: http://adf.ly/VbxDy


இது எதிர் பார்த்தது தான். கிராமங்களில் பிளாட் வாங்கும் போது கவனமாக இருப்பது நல்லது.

தேவையை  விட வரத்து(Supply) அதிகரித்துள்ளதை கவனத்தில் கொள்ளவும். அதே நேரத்தில் விவசாய நிலமாக வாங்கி போடுவது நீண்ட கால நோக்கில் பலன் தருவதாக இருக்கலாம்.

English Summary:
Is real estate in struggle?



தொடர்புடைய பதிவுகள்:
« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

6 கருத்துகள்:

  1. ரியல் எஸ்டேட் விவசாயத்தை பாழ்படுத்திவிட்டது!

    பதிலளிநீக்கு
  2. Brief intro. about you in my blog:


    http://sengovi.blogspot.com/2013/08/blog-post_27.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தலை! உங்கள் பதிவைப் பார்த்தவுடன் எதிர்பாராத மகிழ்ச்சி!

      நீக்கு
  3. ///நஞ்சை நிலங்களையும் ரியல் எஸ்டேட்டிற்கு வாங்கி குவித்துள்ளனர். பல இடங்கள் கரும்பு, வாழை, கொய்யா, நெல் உள்ளிட்ட, பல பயிர்களும் விளையும் இடமாக உள்ளது.///

    இம்மாதிரி நிலங்கள் இருக்கும் இடங்கள் ஊர்கள் பெயர் சில சொல்லமுடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே! கிட்டத்தட்ட தமிழ் நாட்டின் எல்லா இடத்திலும் இப்படி தான் நடந்து வருகிறது..நீங்கள் இட அனுமதி சான்றிதல்களை பார்ப்பது தான் சரியாக இருக்கும்..

      நீக்கு