புதன், 14 ஆகஸ்ட், 2013

பங்கு ஒரு பார்வை: BRITANNIA

BRITANNIA:
பிஸ்கட், கேக், ரஸ்க், என்று பொதிக்கப்பட்ட உணவு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. சமீப காலமாக தயிர், நெய்  என்று பால் சார்ந்த உணவு பொருட்களையும் தயாரித்து தமது சந்தையை வேகத்துடன் விரிவாக்கி வருகிறது . Good day, Marie, Tiger என்று இதனுடைய பிராண்ட்கள் மிக பிரபலமாக இருப்பது இதற்கு மிகப்பெரிய பலம்.


இந்தியாவில் வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் கணிசமாகஅதிகரித்து வருகிறது.இதனால் இவர்களது அதிகரித்து வரும் வாங்கும் திறன்(Buying Abilitiy) BRITANNIAவின் சந்தை விரிவாக்கத்திற்கு  உதவும். மக்களுக்கும் இந்த வகையான பாக்கெட் உணவு பொருட்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

இது தவிர ஆராய்ச்சிக்கு(R&D) அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதால் எதிர்காலத்தில் புதிய பொருட்கள் வரும் வாய்ப்பும்  அதிகமாக உள்ளது.

மக்களின் தினசரி தேவைகளுடன் ஒன்றி போய் உள்ளதால் பொருளாதார தேக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பில்லாத ஒரு நிறுவனம். அதனால் LOW RISK முதலீட்டர்களுக்கு ஏற்றது.

இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் இந்த வாரம் அறிவிக்கப்பட்டது.ஜூன்'12 காலாண்டை விட 92% அதிக லாபம் சம்பாதித்துள்ளது.   இதே போல் சென்ற காலாண்டு செயல்பாடும்  நன்றாகவே உள்ளது . பங்கு விலை மதிப்பிடலும் நன்றாக உள்ளது.

தற்போது பங்கு 735 விலைக்கு விற்கப்படுகிறது. 2 வருடங்களில் 1100 வரை உயர வாய்ப்பு உள்ளது. 50% அளவு லாபம் எதிர் பார்க்கலாம்.


நண்பர்கள் தங்கள் RISK நிலை மற்றும் முதலீட்டு காலம் உணர்ந்து முதலீடு செய்யவும். தங்கள் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயக்கமின்றி பதிவு செய்யவும்.

English Summary:
Britannia is recommended for long term investment

தொடர்புடைய பதிவுகள்:
ASHAPURA MINECHEM பங்கு: முதலீடு மடங்குகளில் பெருக வாய்ப்பு


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

4 கருத்துகள்:

  1. தங்கள் வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  2. தங்கள் பதிவுகள் மிகவும் உபயோகமாக இருக்கிறது.தற்போது எந்தெந்த(10)பங்குகளை வாங்கலாம் என ஆலோசனை தரவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. தங்கள் வருகைக்கு நன்றி க்ரிஷா அவர்களே! இப்பொழுது சரிந்து வரும் சந்தையில் பங்குகளில் பரிந்துரை செய்யும் போது அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. விரைவில் ஒரு போர்ட்போலியோவிற்கு தேவையான பங்குகளை ஒவ்வொன்றாக விளக்கங்குளுடன் பட்டியலிடுகிறேன்.

    பதிலளிநீக்கு