திங்கள், 12 ஆகஸ்ட், 2013

பங்கு ஒரு பார்வை: ASHAPURA MINECHEM

ASHAPURA நிறுவனம் Bentonite, Bauxite, Kaolin போன்ற பல தாதுக்கள்  உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.  இவை சிமெண்ட், காகிதம், கிளீனிங் பொருட்கள், ஒய்ன் போன்றவை தயாரிப்பதில் பயன்பட்டு வருகின்றன. உலக சந்தையில் 10% கொண்டுள்ளது. SENSEXல் MIDCAP பிரிவில் உள்ளது.


2008ல் குஜராத் அரசு Bauxite ஏற்றுமதிக்கு தடை விதித்தது. இதன் காரணமாக இந்த நிறுவனம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் 400~500 ரூபாய்க்கு விற்ற பங்கு 30 ரூபாய்க்கு சரிந்தது. இந்த தடை 2012ல் விலக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் லாபம் நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது.

மார்ச்,12 காலாண்டை விட மார்ச், 13 காலாண்டில் 882% அதிக லாபம் சம்பாதித்துள்ளது. ஜூன்,12 காலாண்டை விட ஜூன், 13 காலாண்டில் 500% அதிக லாபம் சம்பாதித்துள்ளது. இதை பார்க்கையில் இதனுடைய கடின காலம் முடிந்து விட்டது என்றே தோன்றுகிறது.


இந்திய அரசு ரூபாய் வீழ்ச்சி காரணமாக தற்போது உள்நாட்டு ஏற்றுமதியை அதிகரிப்பதில் முனைப்புடன் செயல்படுகிறது. சில கொள்கைகளை எளிதாக்கி வருகிறது. இது இந்த நிறுவனத்துக்கு சாதகமாக அமையலாம். ஏற்றுமதியில் இருப்பதால் டாலர் மதிப்புயர்வும் சாதகமாகிறது.

கொஞ்சம் ரிஸ்க் எடுக்கலாம் என்று நினைப்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம். உங்கள் முதலீடை 2 வருடங்களில் 2~3 மடங்காக அதிகரிக்க உதவும். தற்போதைய  பங்கு விலை 40 ரூபாய். இன்னும் ஓரிரு வருடங்களில் பங்கு விலை 100 ரூபாய் தொடும் வாய்ப்பு உள்ளது.

நண்பர்கள் தங்கள் RISK நிலை மற்றும் முதலீட்டு காலம் உணர்ந்து முதலீடு செய்யவும். தங்கள் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயக்கமின்றி பதிவு செய்யவும்.

English Summary:
Ashapura is recommended for long term investment

முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 1


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்:

 1. வாத்யாரே,

  //http://www.moneycontrol.com/india/stockpricequote/miningminerals/ashapuraminechem/AM07//

  இந்த நிறுவனத்தின் புத்தக மதிப்பு, இன்னும் நெகடிவ்வாக உள்ளதே..அதைப் பற்றிக் கொஞ்சம் விளக்குங்களேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கேள்விக்கு நன்றி செங்கோவி அவர்களே!
   இந்த நிறுவனம் பங்கு மதிப்பீடு அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டதல்ல. ஆனால் வளர்ச்சி (Future Growth) அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டது.
   Book Value: -37('13), -43('12), -38('11), 37('10), 34('09) என்று கடந்த 5 வருடங்களாக உள்ளது.
   அவர்கள் புத்தக மதிப்பு 2013ல் 2012யை விட அதிகரிக்க ஆரம்பித்துள்ளதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்
   குஜராத் அரசின் கொள்கை முடிவுகளால் 2010ல் தொடங்கிய நஷ்டம் 2012 கடைசியில் இருந்தே மாற ஆரம்பித்துள்ளது. அதனை அவர்களது கடைசி 2 காலாண்டு முடிவுகளின் லாப கணக்கில்(882%, 500%) அறிந்து கொள்ளலாம். இது இன்னும் நீடிக்கும் என்றும் நம்பலாம். அதிலும் தற்போது அரசு சுரங்கம் சார்ந்த தாது உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதும் இதற்கு சாதகமே.

   நாம் இந்த பதிவில் ஒன்றை குறிப்பிட மறந்து விட்டோம். VERY HIGH RISK முதலீட்டார்கள் இந்த முயற்சியில் இறங்கலாம். ஆதலால் உங்கள் போர்ட் போலியோவில் 5% க்கு உள் இந்த பங்கினை வைத்துக் கொள்ளுங்கள்!
   நல்ல கேள்வி!

   நீக்கு
 2. The Indian stock market has opened on a cautious, albeit positive note this morning, with investors indulging in selective buying in early trades.

  பதிலளிநீக்கு