Friday, August 23, 2013

பங்கு ஒரு பார்வை: HDFC வங்கி

நமது கடந்த பதிவில் (இந்த பங்கை கண்டு பிடியுங்கள்!) ஒரு சிறிய வினாவைக் கேட்டிருந்தோம்.

இது தான் வினா
இந்த பங்கு வங்கி துறையை சார்ந்தது. கடந்த 40 காலாண்டுகளாக அதாவது 10 வருடங்களாக குறைந்தபட்சம் 30% லாபம் ஈட்டி வந்துள்ளது. நிகர NPA 0.5% க்கும் குறைவாக உள்ளது."


செங்கோவிகணேசன் வீரமணி போன்ற நண்பர்கள் பதிலினை அளித்திருந்தனர். நண்பர்களுக்கு எமது நன்றி!

அதில் செங்கோவி அவர்கள் எழுதிய HDFC Bank சரியானது. அவருக்கு எமது வாழ்த்துக்கள்! மற்ற விடைகளான GRUH finance, Ing Vysya, Sundaram Finance போன்றவையும் வினாவுக்கு மிக அருகில் வந்திருந்தன. ஆனாலும் சில வருடங்களில் 30% கீழே லாபத்தை கொடுத்திருந்தன.


இனி HDFC பற்றி பார்ப்போம். இது தனியார் வங்கிகளில் ஒரு பிரபலமான வங்கி. இந்தியா முழுவதும் 3119 கிளைகளைக் கொண்டு இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது .


கடந்த 40 காலண்டுகளாக குறைந்த பட்சம் 30% லாபம் கொடுத்துள்ளது. இந்த வங்கியின் பெரும்பாலான வருமானம் வட்டியில் இருந்தும் இதர வருமானம் சேவை, முதலீடு, நாணய பரிமாற்றம் போன்றவற்றில் இருந்து வருகிறது.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட காலாண்டு அறிக்கையில் (ஜூன் '13) மற்ற வங்கிகளை காட்டிலும் நல்ல முடிவுகளை கொடுத்துள்ளது.


அதில் நிகர வருமானம் 30.1% அதிகரித்துள்ளது. வட்டியில் இருந்து கிடைக்கும் வருமானம் 18% அதிகரித்துள்ளது. மற்ற வருமானங்கள் 16.7% அதிகரித்துள்ளது.

அது போல் வங்கியின் வைப்பு தொகை (deposits) 17.8% அதிகரித்துள்ளது. கடன்களின் விகிதம் 21% வளர்ந்துள்ளது.

முக்கியமாக இன்றைய சூழ்நிலையில் பங்கிகளின் மிகப் பெரிய பிரச்சனையாக கருதப்படும் வாராக்கடன்(Net NPA) 0.3% என்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே உள்ளது. இது மற்ற வங்கிகளைக் காட்டிலும் மிக நல்ல நிலையில் உள்ளது.

உதாரணத்துக்கு SBIன் வாராக் கடன் 2.2%, அதாவது HDFCயை விட கிட்டத்தட்ட 10% அதிகம். இதற்கு பொருளாதார தேக்கத்தின் காரணமாக பல நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளதே முக்கிய காரணம்.

விவரங்களுக்கு இந்த பதிவை காண்க.
SBIன் லாபம் சரிந்தது ஏன்?

இவ்வாறு HDFCயின் பொருளாதார நிலை மிக நன்றாக உள்ளது. வரலாற்று தரவுகளும் சாதமாக உள்ளன.

இது போக இந்த வருடம் 57 கிளைகளை திறக்க உள்ளது. அடுத்த வருடம் 250~350 கிளைகளை பரப்ப உள்ளது.

பங்கு மதிப்பீடல் அடிப்படையிலும் ஒரு பங்கினை 600~650 ரூபாய்க்கு வாங்குவது சரியான விலையாக உள்ளது. (பங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி?)

இந்திய பொருளாதார தேக்கமும், பாரத ரிசர்வ் வங்கியின் கொள்கைகளும் இந்த நிறுவனத்தை பாதிக்கும் காரணிகளாகும்.

தங்கள் போர்ட் போலியோவில் இந்த வங்கி பங்கை சேர்க்கலாம். குறைந்தது 2 அல்லது 3 வருட முதலீட்டில் வைத்திருந்தால் 50% மேல் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தற்போதைய பங்கு விலை 607 ரூபாய்.

வங்கி பங்கு என்பதால் ஏற்ற, இறக்கங்களுக்கு வாய்ப்பு உள்ளது. அதனால் MEDIUM RISK மேல் இருப்பவர்கள் முதலீடு செய்யலாம்.


நண்பர்கள் தங்கள் RISK நிலை மற்றும் முதலீட்டு காலம் உணர்ந்து முதலீடு செய்யவும். தங்கள் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயக்கமின்றி பதிவு செய்யவும்.

English Summary:
The stock recommendation for HDFC Bank

தொடர்பான பதிவுகள்:
டிராக்டர் விற்பனையால் மேலே வந்த மகிந்திரா

LOW RISK முதலீட்டர்களுக்கு ஏற்ற BRITANNIA நிறுவனம்

APURA MINECHEM பங்கு: முதலீடு மடங்குகளில் பெருக வாய்ப்பு


« முந்தைய கட்டுரைAdvt.

Email: muthaleedu@gmail.com


12 comments:

 1. //http://muthaleedu.blogspot.kr/2013/08/ashapura-minechem.html//

  அங்கே ஒரு டவுட் கேட்டுள்ளேன்!

  ReplyDelete
  Replies
  1. Answered for the query. Let me know if still more explaination needed

   Delete
 2. Sorry for the wrong presumption. Thanks for the article. -Ganesan.

  ReplyDelete
 3. Its ok. Participation is more important. Thanks!

  ReplyDelete
 4. Hi Rama
  Is it a good practice to invest in HDFC's mutual fund products such as Balanced fund,Top 200 Fund on a 10 year basis, monthly by monthly SIP Scheme...

  Need your suggestions.

  Thanks,

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கு நன்றி விஜய்!
   mutual fund கண்காணித்து பல நாட்கள் ஆகிறது. அதனால் உடனடி பதில் தர முடியவில்லை .தற்போது வேலைப் பளு சிறிது இருப்பதால் இந்த வாரக் கடைசியில் எமது கருத்துகளைப் பகிர்கிறேன்.

   Delete
  2. Dear Vijay,
   For mutual fund, look into the following points.
   a) past history
   b) crisil rating
   c) division of shares.

   pls, don't decide by the banks which are issuing. I am not much favor to the funds mentioned by you. because their past performance and crisil rating are just average.

   http://www.moneycontrol.com/mutualfundindia/
   still you can find the better funds in the above link.

   Thanks,
   Rama

   Delete
 5. நன்றி ராமா ....Thanks,

  சிறந்த ஒன்று இரண்டு mutual funduகளை நீங்களே பரிந்துரை செய்யவும் ...

  நான் ஒரு வருடங்களுக்கு. மாதம் மாதம் SIP முறையில் செய்ய இருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. Mutual Fund பற்றி எழுதவில்லை என்ற ஒரு குறை உள்ளது. பங்குசந்தையில் Mutual Fund மூலம் ஆரம்பிப்பதே சரியானது. கொஞ்ச நேரம் கொடுங்கள். ஒரு 2 வார இடைவெளியில் விரிவான பதிவினை இடுகிறேன். நன்றி!

   Delete