கீழே உள்ள அட்டவணை 1996லிருந்து இந்திய ரூபாயின் மதிப்பினை சொல்கிறது.
Currency | code | 1996 | 2000 | 2004 | 2006 | 2007 | 2008 | 2009 | 2010 | 2013 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
USD | USD | 35.444 | 44.952 | 45.340 | 43.954 | 39.5 | 48.76112 | 45.3354 | 58 | 59.878 |
இந்தியா வல்லரசாகி விடும் என்று அரசியல்வாதிகள் நம்மை வாயால் ஏமாற்றி வருகிறார்கள். ஆனால் வெளிவரும் புள்ளி விவரங்கள் உண்மையை வெளிக்கொண்டு வந்து வருகின்றன. உண்மையில் சொன்னால் நாம் நம்முடைய சொந்த தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையிலே இன்றும் இருக்கிறோம்.
சிதம்பரம் சொல்வது போல் தங்கம் இறக்குமதி, எண்ணெய் இறக்குமதி மட்டும் ரூபாயின் மதிப்பை குறைக்கவில்லை. இது போக நிறைய காரணங்கள் உள்ளன.
நிலக்கரி ஊழல்,2G ஊழல், உணவு ஊழல் என்று தினமும் தெரிய வருகிற ஊழல்களால் பொருளாதாரம் புரட்டி போடப்பட்டு விட்டது. நிலக்கரி சுரங்க ஊழலால் பணம் மட்டும் வீணாக போகவில்லை. அதற்கு பிறகு நிறைய சுரங்கங்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டன.
அதனால் சுரங்க தொழிலும், தாதுக்கள் உற்பத்தியும், அது சார்ந்த மின் உற்பத்தியும் கணிசமாக பாதிக்கப்பட்டது நம்மிடம் நிலக்கரி இருந்தும் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யும் நிலையிலேயே உள்ளோம்.
அதனால் சுரங்க தொழிலும், தாதுக்கள் உற்பத்தியும், அது சார்ந்த மின் உற்பத்தியும் கணிசமாக பாதிக்கப்பட்டது நம்மிடம் நிலக்கரி இருந்தும் இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யும் நிலையிலேயே உள்ளோம்.
முன்னால் ஊழல் என்றால் 1 கோடி, 10 கோடி என்று நடந்தை கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் இப்போது லட்சம் கோடியில் ஊழல் பண்ணி விட்டு 500 கோடி, 1000 கோடிக்கு பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுகின்றன.
உணவு தானியங்களை பதப்படுத்த வசதி இல்லாமலும் ஒழுங்காக விநியோக்க முடியாமலும் அவை வீணாக்கப்பட்டன. அதனால் கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாம் இந்த வருடம் கோதுமையை இறக்குமதி செய்யவிருக்கிறோம்.
இப்படி ஒவ்வொரு துறையிலும் உற்பத்தி குறைந்து இறக்குமதியின் அளவு மிக அதிகமாக அதிகரித்து விட்டது. இறக்குமதி அதிகமானதால் வெளியே செல்லும் காசு (OUT FLOW) உள்ளே வருவதை(IN FLOW) விட அதிகமாக சென்று விட்டது.
இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை(current account deficit) வரலாற்று அதிகமாக 4.8% என்ற அளவு அதிகரித்துள்ளது. CAD போன வருடம் 4.2% என்ற அளவே இருந்தது. இப்பொழுது 15% அதிகரித்துள்ளது.
இது போக அமெரிக்காவில் இனி பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுவதால் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்(FII) இங்கிருந்து செல்ல ஆரம்பித்து விட்டார்கள். இதற்கு நாம் அவர்களை குறை சொல்ல முடியாது. எங்கு லாபம் கிடைக்குமோ அங்கு தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். நம்முடைய ஒவ்வொரு வருட பற்றாக்குறைக்கும் அடுத்தவரிடம் கையேந்துவது முட்டாள் தனமே.
இப்போது RBI எடுக்கும் நடவடிக்கைகளை நாம் பாராட்டியே ஆக வேண்டும். அவர்களால் முடிந்ததை அதிகபட்சமாகவே செய்கிறார்கள். ஆனால் இந்த நடவடிக்கைகள் 61 ரூபாய் என்று சென்றதை 59 ரூபாய் என்று வேண்டுமென்றால் குறைக்க முடியும். இதற்கு மேல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களிடம் உள்ள அந்நிய செலாவணி நிதி(Foreign Reserved Currency) இன்னும் 7 மாதங்களுக்கு இறக்குமதி செய்யுமளவே உள்ளது.
அதனால் அடிப்படை பொருளாதார உற்பத்தி அதிகரிக்காத வரை இந்த மாதிரி சிறிய பழுது பார்க்கும் வேலைகளால் பெரிய அளவில் பலனிருக்க போவதில்லை. இந்த பொருளாதார தேக்கம் தற்செயலாக வந்தது இல்லை. இது அரசால் நம்மிடம் திணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்பு விலைவாசி உயர்வு, அதிக வரிகள் திணிப்பு என்று மக்கள் தலையிலே விழும். அதனால் சுதந்திர தினத்தில் குடி நெறி தவறிய அரசை திட்டுவதை தவிர எமக்கும் வழி இல்லை.
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு. (குறள் )
மு.வ உரை: ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.
English Summary:
Why rupee is falling?
EPF Pension உண்மையாகவே பயனுள்ளதா?
நல்ல பதிவு!
பதிலளிநீக்குநம் நாட்டை நாசம் பண்ணியவர்கள் அரசியல்வாதிகள் தான் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.
உங்களை போல் பொருளாதாரம் அறிந்தவர்கள் தான் பிரச்சினையின் உட்புகுந்து பேச முடியும்.
பகிர்வுக்கு நன்றி !
தங்கள் வருகைக்கு நன்றி சகோதரரே!
பதிலளிநீக்குநல்ல அலசல் ராமா.
பதிலளிநீக்குதானிய வகைகள், பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சி போன்ற வகைகளை சரியான முறையில் பதனிடும் திறன் இல்லாததால் நிறையவே பண்டங்கள் வீணாகப் போகின்றன. உள் நாட்டில் நிலக்கரி இருக்க அண்டையரிடம் விலைக்கு வாங்குவதும் வீண் செலவே. இதுபோல் இன்னும் எத்தனை குளறுபடிகள் நடக்கின்றதோ தெரியவில்லை. உள் நாட்டில் உற்பத்தி ஆகும் பொருள் பண்டங்களை சரியான முறையில் நிர்வகித்து பதனிட்டு பாதுகாத்து விநியோகம் செய்தாலே பல கோடி அன்னிய செலாவணி மிச்சமாகும்.
பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.
நன்றி மாசிலா! உங்கள் கருத்து 100% சரியே..நாம் முடிந்த வரை சொந்த காலில் நிற்பதே புத்திசாலித்தனம். இல்லாவிட்டால் எங்கே இடி இடித்தாலும் நமக்கு மழை பொழியும் ..
நீக்கு//அடிப்படை பொருளாதார உற்பத்தி அதிகரிக்காத வரை இந்த மாதிரி சிறிய பழுது பார்க்கும் வேலைகளால் பெரிய அளவில் பலனிருக்க போவதில்லை.// No one seems to understand these three lines! you are spot on! What did the government do to increase our exports in the last 10 years when more money was coming in? Manmohan, Chidambaram, Montek Singh Alhuwalia are the curse for the country!
பதிலளிநீக்குThanks for visiting bandhu! The 2nd term of UPA is really bad with all these 3 finance puligal..Their economics is only on papers, not on action.
நீக்குOne more factor is that India needs to make a large payment on its outstanding loan interest in its coming months. This will deplete its foreign reserve and the demand for US Dollar.
பதிலளிநீக்குYes. You are correct sago! India needs to pay large payment loan in couple of months
நீக்கு//அரசன் குடிகளைப் பொருள் கேட்டல்//
பதிலளிநீக்குகேட்டதெல்லாம்(மன்னராட்சி) அந்தக்காலம். இப்போதெல்லாம்(மக்களாட்சி) எடுத்துக்கொண்டு மிச்சத்தை தானே நமக்கு கொடுக்கிறார்கள்.
தங்கள் கருத்துக்கு நன்றி சகோ!
பதிலளிநீக்குgood comment
பதிலளிநீக்குமாற்றம் பெற அரசுகள் மீது மட்டும் குறை கூறுவது தவறே! நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து, இந்தியத் தயாரிப்புகளையே பயன்படுத்தி இந்தியருக்கு லாபம் ஈட்டத் தர வேண்டும்!
பதிலளிநீக்குஇந்த விடயத்தில் நான் உணர்ந்து செயல்படுகிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்! :-)
"மரணத்தின் வாயிலை நோக்கி" அவர்களுக்கு,நன்றி தங்கள் கருத்துகளுக்கு..அரசும் ஒரு வித காரணமே என்பது எம் கருத்து. எமது மற்ற சில பதிவுகளில் மக்களின் சுதேசி கடமைகளை பற்றியும் சொல்லி உள்ளோம்
பதிலளிநீக்குநல்ல பதிவு!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி!
பதிலளிநீக்குஅருமையான அலசல். சரியான பொருளாதார கண்ணோட்டம் கொண்ட பகிர்வு. நன்றி சகோதரரே!
பதிலளிநீக்குநன்றி ஷாஜஹான் அவர்களே!
பதிலளிநீக்குhttp://www.ep62.com
பதிலளிநீக்குGreat :)
பதிலளிநீக்கு