வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

இவர் தான் இந்தியாவின் வாரன் பஃப்பேட்

இந்த வாரம் பங்குசந்தையில் ஒரு செய்தி பார்க்க நேரிட்டது. VIP Industries பங்குகள் ஒரே நாளில் 7% கூடி விட்டது. அதற்கு காரணம் யாரென்றால் ஒரு தனி மனிதன். அவர் பெயர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.


அவர் தன்னுடைய முதலீட்டை அதிகரிக்கிறார் என்றவுடன் இந்த பங்குகள் ஒரு தனி உயரம் தொட்டன. அந்த அளவுக்கு பங்கு சந்தையில் பரிச்சயமான ஒரு நபர்.




சுருங்க கூறினால் 5000 ரூபாயில் முதலீட்டை ஆரம்பித்து இன்று 8250 கோடி ரூபாய்க்கு அதிபதியாக உள்ளார். இந்திய பங்குச்சந்தை முதலீட்டார்களுக்கு ஒரு மிகப் பெரிய நம்பிக்கையை கொடுத்தவர். அதனால் அவரை இந்தியாவின் வாரன் பஃப்பேட் என்று தலைப்பில் குறிப்பிட்டோம்.


அவரது பங்கு சந்தை வரலாறு நம்மில் பலருக்கு அனுபவ பாடமாக, ஊக்கமாக இருக்கும் என்பதால் இந்த பதிவினை இடுகிறோம்.

ஜுன்ஜுன்வாலா மும்பையில் வருமான வரி அதிகாரிக்கு மகனாக பிறந்தவர். அவர் தந்தை நிதித்துறையில் இருந்ததால் பங்குச்சந்தையில் ஆர்வமாக இருந்தார். தந்தை நண்பர்களுடன் பங்குகள் பற்றி பேசும் போது இவரும் ஆர்வமாக கேட்பார். ஒரு நாள் தந்தையிடம் ஏன் பங்குகள் விலை மாறிக் கொண்டே இருக்கிறது என்று கேட்டார்.

அவர் தந்தை செய்தித்தாளை கொடுத்து "Gwalior Rayon" என்ற நிறுவனத்தைப் பற்றி ஏதாவது செய்தி இருக்கிறதா என்று கேட்டார். செய்தியும் இருந்தது. அடுத்த நாள் அதன் பங்கு விலையிலும் மாற்றம் ஏற்பட்டது. இது ஒரு வித ஆர்வத்தை ஏற்படுத்தியதால் சொந்தமாக பங்குச்சந்தை பற்றி பயில ஆரம்பித்தார்.

1985ல் "Chartered Account" படிப்பினை முடித்தார்.அதன் பிறகு அதாவது தமது 25வது வயதில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் சென்செக்ஸ் 150 புள்ளியில் இருந்தது. முதல் பெரிய லாபத்தினை '86ல் "TATA TEA" நிறுவனம் மூலம் பெற்றார். ஒரு பங்கினை 43 ரூபாய்க்கு வாங்கி 3 மாதத்தில் 143 ரூபாய்க்கு விற்றார். இவ்வாறு 5000 பங்குகள் வாங்கி இருந்தார். அதனால் 5 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது. அடுத்த 3 ஆண்டுகளில் பங்கு வர்த்தகம் மூலம் 20~25 லட்சம் ரூபாய் கிடைத்தது.

அதன் பிறகு அடுத்த பெரிய லாபம் "SESA GOA" என்ற நிறுவனம் மூலம் கிடைத்தது. இந்த நிறுவனம் அந்த சமயத்தில் இரும்புத் தாது உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்து 20~25 ரூபாய்க்கு குறைந்த விலையில் விற்கப்பட்டது. ஆனால் இவர் நிறைய தரவுகளை வைத்து பார்த்து அடுத்த வருடம் நல்ல லாபம் வரும் என்று எதிர் பார்த்தார்.

மற்றவர்கள் நம்ப மறுத்த நிலையில் இவர் துணிச்சலுடன் முதலீடு செய்தார். 4 லட்சம் பங்குகளை ஒரு கோடி மதிப்பிற்கு வாங்கினார்.  பங்குகள் 60~65 ரூபாய்க்கு சென்ற போது 2 லட்சம் பங்குகளை விற்றார். 1 லட்சம் பங்குகளை 150-175 ரூபாய்க்கு விற்றார். மற்ற பங்குகளை 2200 ரூபாய்க்கு விற்றார். இதன் மூலம் தனது மூலதனத்தை கோடிகளின் மடங்காக்கினார்.

இப்படி முதலீட்டை மடங்குகளாக பெருக்கி தற்போது 8250 கோடிக்கு சொந்தமாக உள்ளார்.  

தற்பொழுது A2Z Maintenance, Titan Industries, CRISIL, Geometric, Lupin Ltd. மற்றும் Karur Vysya Bank போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இது தவிர பல நிறுவனங்களில் "Board of director" பதவியில் இருந்துள்ளார்.

கண்காணிப்பதில் சிக்கல் இருப்பதால் தமது பங்கு எண்ணிக்கையை 20லிருந்து பத்துக்கும் குறைவாக குறைக்க திட்டமிட்டுள்ளார்.

2011 பங்குச்சந்தை சரிவுகளில் இவரது பங்குகள் 30% சரிந்தன. ஆனால் 2 வருடங்களில் தமது நஷ்டத்தை ஈடு கட்டினார்.

வாரன் பஃப்பேட் போல் இவரும் நீண்ட கால முதலீட்டை விரும்புவர். இவரது பங்கு முதலீடுகள் நிறுவன வளர்ச்சி, செயல் திறன், போட்டித் திறன், மேலாண்மை போன்றவற்றை மையப்படுத்தி இருக்கும்.

தற்போதைய 2013 பொருளாதார தேக்கத்தைப் பற்றி குறிப்பிடுகையில் இது நீண்ட கால முதலீட்டார்களுக்கு ஏற்ற தருணம் என்று குறிப்பிடுகிறார்.

பங்குசந்தை ஏற்ற, இறக்கங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவர். நிறுவனம் நன்றாக போகும் வரை கவலைப் பட அவசியமில்லை என்று கூறுகிறார்.

ரியல் எஸ்டேட் முதலீட்டை விரும்பாதவர்.  ரியல் எஸ்டேட் பங்குச்சந்தை போல் தொடர்ச்சியான வருமானம் ஏற்படுத்தாத ஒன்று என்றும் இந்தியாவில் ரியல் எஸ்டேட் மதிப்பீடல் குறைபாடு உடையதாக கருதுகிறார்.

பங்குகளை சரியான நேரத்தில் சரியான விலைக்கு வாங்குவது இவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக குறிப்பிடுகிறார்.

இவரைப் போல் ஒரு தமிழனும் பங்குச்சந்தையில் மேல் வர வேண்டும் என்று நாமும் வாழ்த்துகிறோம்!

தொடர்புள்ள பதிவு:
ஒரு பயனுள்ள பதிவு
முதலீடை எப்படி பிரிக்கலாம் ?



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

7 கருத்துகள்:

  1. நம் மரியாதைக்கு உரியவர் அவர்..அறிமுகத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே! உங்களது பேட்டியை ஒரு தளத்தில் படித்தேன். நல்ல முதிர்ச்சியான பேச்சு. வருகைக்கு நன்றி!

      நீக்கு
  2. நன்றி. தங்களது சனிக்கிழமை ஸ்பெஷலுக்காக
    காத்துக்கொண்டு இருக்கிறோம். ஐயப்பன் ஜெயராமன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயப்பன்! சனிக்கிழமை ஸ்பெஷல் ஏற்றம் செய்யப்பட்டது. உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.

      நீக்கு
  3. My dear friend, Please don't compare with him Buffet, he is owing his own organization and doing all manipulations for the stock to move up/down.

    பதிலளிநீக்கு