செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

விப்ரோவில் 1000 முதலீடு செய்திருந்தால் இப்ப 43.6 கோடி



தலைப்பை பார்த்தவுடன் நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். ஆனால் உண்மை. அதனால் நீங்களும் ஒரு தடவை இணையத்தில் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

1980ல் விப்ரோவின்(Wipro) 10 பங்குகளை 100 ரூபாய்க்கு வாங்கி, அதாவது ஆயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்பொழுது அதனுடைய மதிப்பு 43.6 கோடியாக மாறி இருக்கும்.



இதில் DIVIDEND வருமானம் என்பது தனி. அது கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.


இந்த ஆயிரம் ரூபாய் என்பது எப்படி 43.6 கோடியாக மாறியது என்று கீழே பாருங்கள்.

In 1981 company declared 1:1 bonus = 10 shares turn 20 shares

In 1985 company declared 1:1 bonus = 20 shares to 40 shares

In 1986 company split FV from 100 to 10 = 40 transformed to 400 shares

In 1987 company declared 1:1 bonus = 400 to 800 shares

In 1989 company declared 1:1 bonus = 800 to 1600 shares

In 1992 company declared 1:1 bonus = 1600 doubles to 3200 shares

In 1995 company declared 1:1 bonus = 3200 to 6400 shares

In 1997 company declared 1:2 bonus = 6400 triples to 19200 shares

In 1999 company split FV from 10 to 2 = Shares increased 5 times to 96000 shares

In 2004 company declared 1:2 bonus = It increases to 288000 shares

In 2005 company declared 1:1 bonus =Doubles to 576000 shares

In 2010 company declared 3:2 bonus = Shares increases to 960000 shares


இன்றைய பங்கு(Share) விலை 455 ரூபாய்.

இப்பொழுது உங்கள் கையில் 43.6 கோடி !!

இன்னும் நிறைய பங்குகள் இதைப் போன்று நல்ல வருமானத்தை கொடுத்துள்ளன.

நமக்கு கிடைக்கும் உண்மைகள்:
  • மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும்.
  • நிறுவனம் வளர போதுமான நேரம் கொடுத்து பார்க்க வேண்டும்.
  • இடைப்பட்ட ஆண்டுகளில் எத்தனையோ பொருளாரதார தேக்கங்கள், சரிவுகள் வந்து சென்றுள்ளன. ஆனால் நல்ல பங்குகள் தப்பி பிழைக்கின்றன.
  • நல்ல பங்குகளால்  தங்கம், நிலங்களை விட அதிக வருமானம் தர முடியும்.

இதே அளவு வருமானம் தற்போதும் சந்தையில் கிடைக்குமா? என்று உறுதியாக கூற முடியாது.

கணினி என்றால் என்னவென்றே தெரியாத 1980ல் ஐடி துறை இவ்வளவு வளர்ச்சி காணும் என்பதே மிகவும் கடினமான காரியம். அந்த அளவிற்கு தொலை நோக்கு பார்வை இருந்திருந்தவர்கள் நல்ல லாபம் அடைந்திருப்பார்கள். 

ஆனால் ரீடைல் முதலீட்டாளர்கள் இவ்வளவு நாள் பங்கினை வைத்து இருப்பார்களா? என்பது சந்தேகம் என்ற சூழ்நிலையில் Institutional Investors தான் அதிக பலன் அடைந்து இருப்பார்கள்.

தற்போதைய நிலையிலும் ஐடி துறை அடுத்த இருபது வருடங்களில் என்றும் எடுத்துக் கொள்ள முடியாது. அதற்கு பதிலாக புதிதாக ஒரு துறையை இனங்கானுவதும் நன்றாக இருக்கும். 

பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க முடியும் என்பதற்காக கொடுக்கப்பட்ட கட்டுரை தான் இது. அதே நேரத்தில் பத்து சதவீதத்திற்கும் குறைவான பங்குகளே இந்த லாபத்தையும் கொடுக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி? என்ற ஒரு கட்டுரையும் எழுதியுள்ளோம். அதனையும் பங்குகளில் முதலீடு செய்யுமுன் படித்து வாருங்கள்.



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

28 கருத்துகள்:

  1. நன்றி
    நானும் மியுச்ச்சுவல் பண்டில் லாங் டெர்ம் ஆஹ இன்வெஸ்ட் செய்து வருகிறேன், ஆனால் அதற்க்கான பலன் இன்னும் வர வில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கு நன்றி விஜய்! இவ்வளவு நாள் பொறுத்தீர்கள்! இனியும் கொஞ்ச காலம் பொறுத்துக்குங்க ..! ப்ளூ சிப் பண்ட்ல முயற்சி பண்ணுங்க..கொஞ்ச காலம் பிறகு நல்ல வருமானம் கொடுக்க வாய்ப்பு உள்ளது.

      நீக்கு
  2. சமீபத்தில் தான் உங்கள் பதிவுகளைக் கண்டேன். மிகவும் உபயோகமான வலைப்பூ. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. கமெண்ட்டில் வரும் வேர்டு வெரிபிகேசனை எடுத்து விடவும்.

    பதிலளிநீக்கு
  4. விப்ரோ போன்று ஆரம்பகட்டத்தில் இருக்கும் சில பங்குகளை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Key is for every one to do their own research; if he knows that silver bullet why should he/she reveal it to you?

      Only hard work pays!

      நீக்கு
    2. இந்த வலைப்பூ / பதிவரின் நோக்கம், தனக்குத் தெரிந்ததை வாசகருக்கும் பகிரும் நல்ல எண்ணம் - என்று நம்பியதாலேயே அப்படிக் கேட்டேன் அன்பரே!

      நீக்கு
    3. செங்கோவி அவர்களே! தாமதமான பதிலுக்கு வருத்தம். தங்கள் வருகையும் கருத்துக்களும் எம்மை உற்சாகப்படுத்துகிறது. வெறும் பங்குகளை மட்டும் பரிந்துரைக்காமல் அதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். அதற்கு சிறிது நேரம் தேவைப்படுகிறது.

      இதுவரை 3 பங்குகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. "பங்கு ஒரு பார்வை" குறியீட்டில் பார்க்கவும். எமது இந்த பதிவின் நோக்கமே தெரிந்தவற்றை பகிர்வது. அதனால் தான் பங்குசத்தை அடிப்படை குறித்து அதிகம் எழுத விரும்புகிறேன். பெயரில்லாமல் வரும் பின்னுட்டங்கள் குறித்து கவலைப்பட வேண்டாம்.

      நீக்கு
    4. எப்போது பதிவர் ஆனோமோ, அப்போதே சூடுசுரணை குறைந்து போய்விட்டது.எனவே கவலை ஏதும் இல்லை..ஹி..ஹி!

      நீக்கு
  5. கேட்க நன்றாக உள்ளது.. இது வரை இழந்ததை தவிர ஒன்றும் இல்லை.
    இப்போது அது போல் எதாவது உண்டா ... 20 வருடம் காத்திருக்க தயார் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பிக்கையை விடாதீர்கள்! இழப்பிலிருந்து பாடம் கற்று விடுவோம்..பிரபலனவர்கள் கூட (Warren Buffet, Rakesh jhunjhunwala) இழப்பிலிருந்து பாடம் கற்றவர்கள் தான்...ஒரே பங்கில் முதலீடு செய்யமால் சிறிது பிரித்து முதலீடு செய்யுங்கள்...நானும் முடிந்த வரை தகவல்களை பகிர்கிறேன்..

      நீக்கு
  6. பிரச்சனை என்னவென்றால் விப்ரோ வாங்கியிருக்கக்கூடிய அதே நேரத்தில் அதே போல் வெரி நூறு ஷேர் வாங்கியிருந்தால் அந்த பணம் அப்படியே போயிருக்கும். In the hindsight, every body's eye sight is 20/20!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் விப்ரோ மாதிரி நல்ல நிறுவனங்களை தொடக்க நிலையில் கண்டு பிடிப்பது கஷ்டமே. ஆனாலும் சில ஆய்வுகள், தரவுகள் வைத்து முதலீடு செய்தால் இந்த அளவு இலாபம் வர விட்டாலும் சராசரியை விட சிறிது அதிகமாக கிடப்பது சாத்தியமே. தங்கள் வருகைக்கு நன்றி பந்து!

      நீக்கு
  7. Oh.God!
    I invested Rs 10,000 during 1999 in my own outfit:today,the worth of my company stands@ Rs 1 crore only!
    r.k.seethapathi naidu
    pathiplans@sify.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. You are owning a company. share holders of some company will not come till that point. Money can not satisfy like dedication towards our own work..my best wishes for your great success

      நீக்கு
  8. விப்ரோ போன்று ஆரம்பகட்டத்தில் இருக்கும் சில பங்குகளை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்களேன்.

    பதிலளிநீக்கு
  9. விப்ரோ போன்று ஆரம்பகட்டத்தில் இருக்கும் சில பங்குகளை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்களேன்.

    பதிலளிநீக்கு
  10. விப்ரோ போன்று ஆரம்பகட்டத்தில் இருக்கும் சில பங்குகளை எங்களுக்கு அறிமுகம் செய்யுங்களேன்.

    பதிலளிநீக்கு
  11. தங்கள் வருகைக்கு நன்றி ஷர்மிலி! நாம் ஏற்கனவே சில பங்குகளை பரிந்துரை செய்துள்ளோம். "பங்கு ஒரு பார்வை" என்ற குறியில் உள்ள பதிவுகளை பார்க்கவும். அல்லது பிற பதிவுகளை படிக்கவும்.

    பதிலளிநீக்கு
  12. Respecter RAMA K,

    Am Raja... Your Informations r very worthful... Now am Trading in Commodity... Any Idea to get profit..

    பதிலளிநீக்கு
  13. Good info.. But the problem is how many people really benefited by investing Rs.1000 in 1981.
    1000Rs was a huge amount in 1981 and who has the patience for 34 years?

    பதிலளிநீக்கு