சனி, 10 ஆகஸ்ட், 2013

பண வீக்கத்தை CRR எப்படி கட்டுப்படுத்துகிறது?

சில செய்திகளில் பார்த்திருப்போம். CRR விகிதம் மாற்றப்பட்டுள்ளது என்று செய்தி வந்த உடனே தொழில் துறையில் இருப்பவர்கள் அலறுவார்கள்.SENSEX ஒரு அடி குறையும்.  அதனால் பங்கு சந்தை சார்ந்த முதலீட்டில் இருப்பவர்கள் இதை அறிந்து கொள்வது  மிக அவசியமானது.பணவீக்கம்
CRRம் பண வீக்கமும் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் பணவீக்கம் பற்றியும் தெரிய வேண்டியுள்ளது. வாழ்க்கை செலவு அதிகரித்து பணத்தின்  மதிப்பு எவ்வளவு குறைகிறது என்பதை குறிப்பிடுவது தான் பண வீக்கம் (inflation). அதாவது போன வருடம் 1 கிலோ பூண்டு 100 ரூபாய்க்கு வாங்கினது  இப்ப 108 ரூபாய்க்கு விற்றால் பணவீக்கம் 8% என்பதாகும்.

விலைவாசி  கூடுவதால் சராசரி மனிதன் அதிகமாக பாதிக்கப்படுவதால் பணவீக்கத்தைக் குறைக்க அரசுக்கு அழுத்தம் அதிகமாகும். அப்ப அவங்க கிட்ட இருக்கிற ஒரு ஆயுதம் தான் CRR. 

பண இருப்பு விகிதம்(CRR)
CRR என்பது பண இருப்பு விகிதம்(Cash Reserve Ratio).
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியும் தம்மிடம் உள்ள பண வைப்பின் ஒரு பகுதியை இந்திய ரிசர்வ் வங்கி(RBI)யிடம் வைத்திருக்க வேண்டும்.இந்த சதவீதத்தை தான்  CRR என்று சொல்றாங்க.


இது எப்படி பண வீக்கத்தை கட்டுப்படுத்தும்?
சரி. இது எப்படி பண வீக்கத்தை கட்டுப்படுத்தும். பணவீக்கம் அதிகமாகும் போது CRR விகிதத்தை RBI கூட்டும். அதனால வங்கிகளிடம் உள்ள பண வைப்பு குறையும். அவங்க இனி லோன் கொடுக்க யோசிப்பாங்க அல்லது கடனுக்கான வட்டி விகித்தை கூட்டி விடுவாங்க. 


இவ்வளவு வட்டி கொடுத்து கடன் வாங்கணுமான்னு மக்களும் யோசிப்பாங்க. மக்களிடம் பணபுழக்கம் குறையும். பொருட்களை வாங்குவதை குறைப்பாங்க. தேவை குறைவதால் விலையும் குறையும். அதாவது இதன் அடிப்படை demanad and supply. தேவையை குறைத்து பொருளின் மதிப்பைக் குறைக்கிறது.

ஏன் அலறுறாங்க?
பொது மக்கள் பொருள் வாங்குவதை குறைத்தால் அதனை உற்பத்தி செய்யும் நிறுவனம் குறைவாக உற்பத்தி செய்யும் அல்லது பொருளோட விலையை குறைப்பாங்க. அதனால அவங்க லாபம் குறையும். அவர்களோட பங்கு விலையும் குறையும். அதனை அடிப்படையாக வைத்து இயங்கும் பங்கு சந்தையும் சரியும்.

மக்கள் வட்டி அதிகம் என்று வீடு வாங்க பயப்படுவாங்க. ரியல் எஸ்டேட் சரியும்.

லோன் எடுத்து கார் வாங்க போக மாட்டாங்க. கார் விற்பனை சரியும்.

மக்கள் லோன் பக்கமே போகாததால் வங்கி லாபம் குறையும் 

அதனால் இந்த மாதிரி சமயங்களில் முக்கியமாக ரியல் எஸ்டேட், ஆட்டோ, வங்கி பங்குகளை வாங்குவதை தவிர்க்கவும்.

யாருக்கு லாபம்?
பொருளாதாரத்தின் ஒரு அடிப்படை ஒருத்தரோட நஷ்டம் மற்றவருக்கு லாபம் .  
வங்கிகள் கையிருப்பு குறையாக இருப்பதால் வைப்பு நிதி (Fixed Deposits) வட்டியை கூட்டி விடுவாங்க. அதனால் காசு அதிகமாக வைத்திருப்பவர்களுக்கு கொண்டாட்டம் தான். நிறைய வட்டி கிடைக்கும்.

English Summary:
How CRR controls the inflation?


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

5 கருத்துகள்:

 1. தெளிவான விளக்கம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 2. தங்கள் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி மாசிலா!

  பதிலளிநீக்கு
 3. பண வீக்கத்தை கட்டுப்படுத்த மாத சம்பளத்தை எந்த வகையில் சேமிக்கலாம் ?

  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கு நன்றி விஜய்! தகவல்களை திரட்டி ஒரு பதிவாக எழுத முயற்சிக்கிறேன்

   நீக்கு