சனி, 17 ஆகஸ்ட், 2013

அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய இந்திய விவசாயம்

இந்த பதிவு மற்ற பதிவுகளில் இருந்து சிறிது மாறுபட்டது. இன்றைய நாகரிகமான இளைய தலைமுறை செய்ய மதிப்பில்லாது கூச்சமாக கருதும் விவசாயத்தைப் பற்றிய பதிவு இது. இதனை இன்றைய தொழில் நுட்பங்கள் மூலம் நாகரிகமான தொழிலாகவும் மாற்றலாம்.


நாமும் ஒரு விவசாயக் குடும்பத்தில் வளர்ந்தவன். விவசாய சுழற்சி முறைகளில் தேவையான அளவு பழகியதுண்டு. அதனால் சில நேரங்களில் விவசாயதின் இன்றைய சரிவு  உணர்ச்சிபூர்வமாகவும் எதிர்காலத்தையும் நினைக்கையில் மிகுந்த மன வருத்தத்தை உண்டாகிறது. அதுவே இந்த பதிவையும் எழுத தூண்டியது.

படிமம்:Maler der Grabkammer des Sennudem 001.jpg
வேளாண்மைக்கு கால்நடைகளைப்
பயன்படுத்தும்  எகிப்திய ஓவியம்

எதிர் காலத்தில் விவசாயத்தில் ஈடுபடும் நோக்கில் இருப்பதால் அதற்கான சாத்திய முறைகளை சேகரித்து வருகிறேன். அதனை இங்கு பகிர்வதில் நிறைய பேருக்கு சென்று அடையும் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதில் உள்ள சாத்தியங்கள் , குறைகள், மேம்படுத்தல் போன்றவற்றை தாரளாமாக சுட்டிக்காட்டவும்.


"உழவன் சேற்றில் இறங்கினால் தான் நமக்கு சாப்பாடு" என்பார்கள். ஆனால் சேற்றில் இறங்காமலே விவசாயம் பண்ணலாம் என்பதும் சாத்தியமே. நிறைய நாடுகளில் இதனின் பெரும்பகுதியை செயல்படுத்தி உள்ளார்கள். இன்றைய தொழில் நுட்பம் அந்த அளவு வளர்ந்து விட்டது.

படிமம்:Pieter Bruegel the Elder- The Corn Harvest (August).JPG
அறுவடையாளர்கள். பீட்டர் புரூகல். 1565
பொதுவாக விவசாயம் என்பது உணவு மற்றும் பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். திருக்குறளில் இருந்து ஏர் எழுபது வரை இதற்கென்று அதிகாரம் ஒதுக்கி எழுதி இருக்கிறார்கள் என்றால் அந்த அளவுக்கு முக்கியத்துவம் இருந்து இருக்கிறது. நாகரிங்களின் வளர்ச்சியும் விவசாயத்துடன் சேர்ந்தே வளர்ந்து வந்துள்ளது.
இதனால் இதுவரை இதனை  யாரும் முதலீடாக கருதவில்லை. ஒரு முதனிலை தொழிலாக, ஒரு அடிப்படை தேவையாக கருதப்பட்டிருக்கிறது. அதனால் வீட்டுக்கு வீடு ஏதேனும் ஒரு விவசாயம் பண்ணுவார்கள். அதில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். 


ஆனால் இன்றைய  உலகமயமாக்கல் சூழ்நிலையில் நாம் உலகின் மற்ற நாடுகளின் மிகப்பெரிய நிறுவனங்களிடம் போட்டி போட வேண்டியுள்ளது. அப்படி என்றால் அவர்களின் வேகமான தொழில் நுட்பத்துக்கு நாமும் மாறியே ஆக வேண்டும். குறைந்த உடலுழைப்பில் இயந்திரங்களின் துணை கொண்டு குறைந்த செலவில் உற்பத்தி செய்ய வேண்டும்.

மேலே உள்ள இரண்டு படங்களையும் கவனியுங்கள். இரண்டும் பல நூற்றாண்டுக்கு முன் எகிப்திலும் பீட்டர் புரூகலிலும் தீட்டப்பட்டது. இன்றைய நூற்றாண்டிலும் நாம் இதே விவாசாய முறைகளையே பயன்படுத்தி வருகிறோம். அப்படி என்றால் நமது வளர்ச்சி பூஜ்ஜியத்தின் அருகில் தானே உள்ளது.

ஓட்டுனர் இல்லாமல் வண்டி ஓடுகிறது, காற்றை மட்டும் வைத்து உலகின் எந்த மூலைக்கும் பேச முடிகிறது, ஆள் இல்லாத ராக்கெட்'எதிரியை சென்று தாக்குகிறது என்றால் விவசாயி நிலத்தில் இல்லாமல் விவசாயமும் பண்ண முடியும் தானே. 

இதனை உடனே நாம் புதியதாக கண்டுபிடித்தது என்றோ அல்லது இல்லாத ஒன்றை சொல்வதாக நினைத்து விடாதீர்கள். பல நாடுகளில் "e-agriculture" என்ற பெயரில் மென்பொருள், தகவல் பரிமாற்றம், செயற்கை கோள் போன்றவற்றை இணைத்து ஆராய்ச்சிகள் செய்து வருகிறார்கள். அதில் சிலவற்றை செயல்படுத்தியும் வருகிறார்கள். அதனை எம்முடைய வருகிற பதிவுகளில் தரவுகளுடன் விளக்குகிறேன்.


கீழ் உள்ள இந்த வீடியோவை காணுங்கள். தென்கொரியர்கள் எவ்வாறு நாற்று நடுகிறார்கள் என்பதை பார்க்கலாம். இது குறைந்த பட்சம் நூறில் ஒரு பங்காவது நேரம், உழைப்பை மிச்சமாக்கும்.


நிலத்தைத் தயார்செய்தல், சமன்படுத்தல், உரமிடல், விதைத்தல், நாற்று நட்டல், நீர் மேலாண்மை, களை  பிடுங்கல், அறுவடை செய்தல், சந்தையிடல் என்று விவசாய சுழற்சியின் ஒவ்வொரு நிலைகளிலும் நாம் தொழில் நுட்பத்தை புகுத்த முடியும். 


இந்த பதிவுகளில் நாம் நெல் விவசாயத்தைப் பற்றியே குறிப்பிட விரும்பிகிறோம். ஏனென்றால் அதைப் பற்றி தான் நமக்கு அதிகம் தெரியும். அது போல் கலப்பு  விதை, செயற்கை உரம் போன்றவற்றை பற்றி நாம் எழுத போவதில்லை. இயற்கை விவசாயத்தையே நாமும்  விரும்புகிறோம். வரும் பதிவுகளின் நோக்கம் தொழில் நுட்பத்தை விவசாயத்தில் எவ்வாறெல்லாம் பயன்படுத்துவது என்பது மட்டுமே.

வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக தொடர்கிறேன். தங்கள் கருத்துகளை தயக்கமின்றி பகிருங்கள்.

English Summary:
Agriculture to go for next stage?
« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: