புதன், 7 ஆகஸ்ட், 2013

பங்கு ஒரு பார்வை: மகிந்திரா & மகிந்திரா

நிறைய பேருக்கு பரிச்சயமான ஒரு நிறுவனம். இந்தியாவின் பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று. கார், கனரக வாகனங்கள், மற்றும் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்கிறது. 

தற்போதைய இந்திய பொருளாதர தேக்கம் காரணமாக கார் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொருளாதர தேக்கம் மற்றும் தற்போதைய பங்குசத்தை சரிவுகளால் குறைந்த விலையில் (850 ரூபாய்க்கு) கிடைக்கிறது. 



File:Mahindra tractor model2.jpg


ஆனால் இந்த வருட பருவ மழை நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. விவசாய வளர்ச்சியும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் டிராக்டர் மற்றும் இதர கனரக வாகனங்கள் விற்பனையும் அதிகரிக்கும். இந்த பிரிவில் மகிந்திரா நிறுவனம் குறிப்பிட்டதக்க சந்தையை கொண்டிருப்பதால் லாபம் உயரலாம்.


நிறுவனத்தின் பகுதி வருமானம் ஏற்றுமதியிலும் வருவதால் டாலர் மதிப்புயர்வும் பலனை அளிக்கலாம். 

தற்போதைய பொருளாதார தேக்கம் போன்ற பிரச்சனைகளை இந்நிறுவனம் கடந்த காலங்களில் எதிர் கொண்டிருப்பதால் எளிதில் வெளிவர வாய்ப்பு உள்ளது.

52 வார உயர்வு நிலையை விட 20% குறைவான விலையில் கிடைக்கிறது. பங்கு மதிப்பீடு அடிப்படையிலும் நன்றாக உள்ளது.

நீண்ட கால முதலீடு விரும்பவர்கள் (குறைந்தது 2 வருடம்) இந்த பங்கில் முதலீடு செய்யலாம். பங்கு 1300 ரூபாய் வரை உயர வாய்ப்பு உள்ளதால் 50% வரை லாபம் எதிர் பார்க்கலாம். தற்போதைய பங்கு விலை 850 ரூபாய்.

நண்பர்கள் தங்கள் RISK நிலை மற்றும் முதலீட்டு காலம் உணர்ந்து முதலீடு செய்யவும். தங்கள் கருத்துக்கள் ஏதேனும் இருப்பின் தயக்கமின்றி பதிவு செய்யவும்.

English Summary:
Mahindra is recommended for long term investment

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. எனக்கு பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் உள்ளது எப்படி எவ்வளவு தொகையில் ஆரம்பிக்கலாம்
    குறைந்த பட்சம் 5000₹ தொடங்கலாமா
    ஆன்லைனில் பாதுகாப்பாக இருக்குமா
    புரோக்கர் ஊதியம் எவ்வளவு செலவாகும் வருமான வரி செலுத்த வேண்டுமா ஏன்சல்புரோக்கிங் என்ற வலைத்தளத்தில் கணக்கு துவங்குவது உள் நுழைந்த போது 699₹சேவிங் அமோன்ட் என்று வருகிறது எதற்காக விக்கவும்
    இப்படிக்கு உங்கள் சகோ

    பதிலளிநீக்கு