ஞாயிறு, 1 ஜூன், 2014

பாதுகாப்புத் துறையில் 100% அந்நிய முதலீடு, மேலே சென்ற ASTRA

புதிய மத்திய அரசு பாதுகாப்புத் துறையில் முழு அந்நிய முதலீட்டை அனுமதித்துள்ளது.


இதற்கு முன் 26% மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. தற்போது 100% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட உள்ளது. ஆனால் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் இந்தியர்களாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது வரை பாதுகாப்பிற்கு தேவையான ஆயுதங்கள், விமானங்கள், கப்பல்கள் போன்றவை முழு அளவில் இறக்குமதி செய்யப்பட்டே வந்தது. தற்போது இவைகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் போது உற்பத்தி செலவும் குறையும். இதனால் அரசிற்கு வரியும் கிடைக்கும்.



ஆற அமர வேலை பார்த்து வரும் HAL, DRDO போன்ற பொதுத் துறை நிறுவனங்களை விட வேலைகள் விரைவாக நடக்கும்.

அதிக அளவு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

புதிய தொழில் நுட்பங்களை இந்தியர்கள் பெறுவதற்கும் வாய்ப்பாக அமையும்.

இவை நேர்மறையான விடயங்கள்.

பொதுவாக கொரியா நாட்டில் இப்படி நடப்பதனை பார்க்கலாம்.

முதலில் 'Partner Collaboration' என்ற பெயரில் தொழிலை ஆரம்பிப்பார்கள். அதன் பிறகு தொழில் நுட்பங்களை கற்ற பிறகு மெதுவாக கழற்றி விடுவார்கள். இப்படித் தான் LG-Philips LCD, Samsung-Toyata என்று நிறைய உதாரணங்கள் உள்ளன,

ஆனால் அதற்கு அவர்களது அரசு முழு அளவில் ஒத்துழைப்பு கொடுக்கும்.

நம் நாட்டில் எப்படி நடக்கப் போகிறது என்று தெரியவில்லை?

முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பில் அந்நிய நிறுவனங்களை அனுமதிப்பது பாதுகாப்பினை கேள்விக்குறியாக மாற்றவும் வாய்ப்புள்ளது.

இது ஒரு குடிமகனாக வரும் குமுறல்கள்.



ஆனால் முதலீட்டாளனாக காலத்திற்கு ஏற்ற வகையில் வாய்ப்புகளை கண்டுபிடிக்க வேண்டி உள்ளது.

இந்த அந்நிய முதலீடு முடிவுகளால், நேற்று பாதுகாப்பு தொடர்பான பங்குகள் புதிய உயரங்களைத் தொட்டது. இதில் நமது போர்ட்போலியோவில் உள்ள ASTRA பங்குவும் ஒன்று. ஒரே நாளில் 20% கூடியது.

L&T இந்த நிறுவனத்தை வாங்கலாம் அல்லது அந்நிய போட்டியை சமாளிக்க L&Tயும், ASTRAவும் இணைந்து செயல்படலாம் என்ற ஊகங்களும், இந்த பங்கினை மேலே இழுத்து சென்றது.

HDFC ம்யூச்சல் பண்ட் கூட ஒரே நாளில் நான்கு கோடி மதிப்பிற்கு ASTRA பங்குகளை வாங்கி குவித்தது.

நாம் பரிந்துரைத்த போது ASTRA பங்கின் விலை 36 ரூபாய். தற்போது 113 ரூபாய். 210% அளவு உயர்வு.

இதில் முதலீடு செய்த நண்பர்கள் தொடரலாம். வாங்கி சராசரியும் செய்து கொள்ளலாம். ஆனால் புதிதாக வாங்க வேண்டாம். பங்கு ஏற்கனவே உயரத்திற்கு சென்று விட்டது.

ஓடுற குதிரையை விட மின் துறையில் சோர்ந்து கிடக்கும் சிறு பங்குகளை கவனியுங்கள். இதே லாபத்தை பெறலாம்.

English Summary:
Foreign direct investment is fully allowed for defense.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக