செவ்வாய், 24 ஜூன், 2014

இப்படியும் ஏமாற்றுவோம் BY AstraZeneca

ஒரு பங்குச்சந்தை முதலீட்டாளனாக இருப்பதற்கு முதலீடு தொடர்பான விவரங்களை விட எப்படி எல்லாம் ஏமாற்றுவார்கள்? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.


'பங்குச்சந்தை ஊழல்கள்' என்று தனிப்பகுதியாக நமது தளத்தில் தொடராக எழுதலாம் போல..ஹர்ஷத் மேத்தா, சத்யம் வரிசையில் AstraZeneca என்ற நிறுவனமும் இணைகிறது.

AstraZeneca என்பது ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனம். அதன் இந்திய பிரிவு பங்குச்சந்தையில் பட்டியலிடப்ப்டுள்ளது.

கடந்த வாரம், AstraZeneca நிறுவனம் பங்குச்சந்தையிலிருந்து விலகுவததாக அறிவித்தது. இதில் தான் செபி தவறு நடந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறது.

பொதுவாக இந்த மாதிரி வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதன் முக்கிய நோக்கமே நமது வெளிநாட்டு முதலீடு தொடர்பான உச்ச எல்லை வரம்பு பிரிவு தான் காரணம். மற்றபடி, விருப்பப்பட்டு பங்குச்சந்தைக்குள் வருவதில்லை.

பங்கு யார் கையில்?

இதனால், பங்குகளை தங்கள் கட்டுப்ப்பாட்டில் வைத்துக் கொள்ளவே விரும்புவார்கள். உச்ச வரம்புகள் மாற்றப்படும் போது பங்குச்சந்தையிலிருந்து 'DELISTING' முறையில் விலகி விட விரும்புவார்கள்.

அவர்களைப் பொறுத்த வரை தேவையான அளவு பணம் கையில் இருந்து கொண்டே இருப்பதால், நம்மைப் போல் ஒரு பங்கை வைத்துக் கொண்டு கேள்வி கேட்பதை விரும்புவதில்லை..

AstraZeneca நிறுவனமும் இது போல் தான் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருந்தது.

2013 வரை 90% பங்குகள் நிறுவனத்தார் (PROMOTERS) கையில் மட்டுமே இருந்தது, அதன் பிறகு செபி 75% மட்டுமே நிறுவனத்தார் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்தது.

இதனால் தன்னிடமுள்ள 15% பங்கை பொது மக்களுக்கு விற்க வேண்டிய நிலை. அந்த நிகழ்வின் போது விற்கப்பட்ட பங்குகளில் 94% வெளிநாட்டு நிதிகளிடம் சென்றது.

இறுதியில், 75% பங்குகள் நிறுவனத்தார் கையிலும், 16% பங்குகள் இந்த வெளிநாட்டு நிதி அமைப்புகளிடம், மீதி 9% மட்டுமே சிறு முதலீட்டளர்கள் கையில் இருக்கிறது.

தற்போது அறிவிக்கப்பட்ட DELISTING வெற்றிகரமாக நடக்க வேண்டுமென்றால், 90% பங்குகள் நிறுவனத்திடம் விற்கப்பட்டிருக்க வேண்டும்.

இதனை வெளிநாட்டு நிதி அமைப்புகளின் உதவியோடு எளிதாக DELISTING நடத்தி விடலாம். சிறு முதலீட்டாளர்கள் தயவு தேவையில்லை. ஆனால் பங்குச்சந்தையில் சிறு முதலீட்டலர்களை புறக்கணிப்பதும் நல்லதில்லை.

இந்த சூழ்நிலையில் தான் செபி சில ஆர்வமான தகவல்களை வெளிக் கொண்டு வந்துள்ளது.
  • கடந்த 2013ல் 94% பங்குகள் விற்கப்பட்ட அணைத்து வெளிநாட்டு நிதிகளும் Elliott Group என்ற நிறுவனத்தின் கீழ் இயங்குபவை.
  • DELISTING தொடர்பாக நடந்த ஓட்டளிப்பில் Elliott Group நிறுவனத்திற்கு சாதகமாக ஓட்டளித்துள்ளது.
  • இதற்கு முன்னர் AstraZeneca இரண்டு முறை DELISTING செய்வதற்கு முயற்சித்துள்ளது. இரண்டு முறையும் பங்கு விலை புக் மதிப்பை விட குறைவாக குறிப்பிட்டு இருந்ததால் தோல்வியடைந்ததது

இவற்றை சேர்ந்து பார்க்கையில் இந்த முறை DELISTING வெற்றிகரமாக நடப்பதற்கு Elliott Groupம் AstraZenecaம் ரகசிய உடன்படிக்கையில் செயல்படுவததாக செபி சந்தேகிக்கிறது. கடந்த OFS பங்கு விற்பனையின் போதே இருவரும் இணைந்து செயல்பட ஆரம்பித்து விட்டதாக தெரிகிறது.

தற்போது செபியின்  பிடி இறுகியுள்ளதால்  floor price உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. அதனால் பங்குகளை பாதி விற்று, மீதியை கையில் வைத்து இருக்கலாம்.

நல்ல ரிஸ்க் எடுப்பதாக இருந்தால் முழுவதுமே கையில் வைத்து இருக்கலாம்.

English Summary:
SEBI found the violations on AstraZeneca.

எமது ஜூலை போர்ட்போலியோவை ஜூலை ஒன்றாம் தேதி தர விருக்கிறோம். கீழே உள்ள இணைப்புகளில் விவரங்களை பெறலாம். இது இரண்டு வருடங்களில் 40% ரிடர்ன் தருமளவு வடிவமைக்கப்படுகிறது.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக