தற்பொழுது தான் ஞாபகம் வந்தது. எமது இலவச போர்ட் போலியோவில் பரிந்துரை செய்யப்பட்ட நிறுவனங்களின் கடந்த காலாண்டு நிதி நிலை அறிக்கைகளை நாம் எழுதவில்லை என்று. அதனால் இங்கு நிதி முடிவுகளைத் தொகுப்பாக எழுதுகிறோம்.
பங்கு முதலீட்டில் லாபம் என்பது யோகத்தில் வரவில்லை என்பதை அதன் நிதி நிலை அறிக்கைகளே உணர்த்தும். நாம் பரிந்துரைக்கும் போது கூறிய ஆய்வு கருத்துக்கள் நிதி நிலை அறிக்கைகளில் பொருந்தி வருவது மகிழ்ச்சி.
சில பங்குகள் அதிக அளவு உயர்ந்து விட்டதால் தற்போது முதலீடு செய்ய ஏற்றதல்ல.
1. ASTRA MICROWAVE
- கடந்த வருடத்தை விட லாபம் 15% அதிகரித்துள்ளது.
- கையில் வைத்து இருக்கும் அதிக அளவு ஆர்டர் புக் காரணமாக பங்கு அதிக லாபம் கொடுத்துள்ளது.
2. FINOLEX
பரிந்துரை விலை: Rs.52 தற்போதைய விலை: Rs.166 உயர்வு: +219%
- கடந்த வருடத்தை விட லாபம் 79% அதிகரித்துள்ளது.
- நாம் முன்னர் எதிர்பார்த்தது போலவே விரிவாக்கங்களும், புதிய ஆர்டர்களும் அதிக பலன் கொடுக்க ஆரம்பித்துள்ளன.
3. AEGIS
பரிந்துரை விலை: Rs.130 தற்போதைய விலை: Rs.251 உயர்வு: +93%
- புதிய ப்ராஜெக்ட்களின் செலவுகளினால் லாபம் 77% குறைந்துள்ளது.
- ஆனால் புதிய எண்ணெய் நிலையங்கள் வரும் வருடங்களில் செயல்பட ஆரம்பிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால் பங்கு அதிகரித்து வருகிறது.
4. ABBOTT INDIA
பரிந்துரை விலை: Rs.1350 தற்போதைய விலை: Rs.2112 உயர்வு: +56%
- கடந்த வருடத்தை விட லாபம் 19% அதிகரித்துள்ளது.
- மருந்து துறையின் சராசரி வளர்ச்சியான 11% என்பதை விட அதிகமாக வளர்ச்சி கொடுப்பதால் பங்கு அதிக லாபம் கொடுத்துள்ளது.
5. AMARA RAJA BATTERIES
பரிந்துரை விலை: Rs.320 தற்போதைய விலை: Rs.481 உயர்வு: +50%
- கடந்த வருடத்தை விட லாபம் 21% அதிகரித்துள்ளது.
- புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பிரிவுகள் செயல்பட ஆரம்பிப்பிதால் நல்ல செயல் திறனைக் கொடுத்துள்ளது.
6. HDFC BANK
பரிந்துரை விலை: Rs.607 தற்போதைய விலை: Rs.835 உயர்வு: +37%
- கடந்த வருடத்தை விட லாபம் 25% அதிகரித்துள்ளது.
- மற்ற வங்கிகளைக் காட்டிலும் NPA விகிதம் நன்றாக இருப்பது வங்கித் துறைக்கு ஏற்பட்ட பாதிப்பிலிருந்து காத்துள்ளது.
7. BRITANNIA IND
பரிந்துரை விலை: Rs.735 தற்போதைய விலை: Rs.997 உயர்வு: +35%
- கடந்த வருடத்தை விட லாபம் 52% அதிகரித்துள்ளது.
- பால் சார்ந்த கேக் மற்றும் பிரட் விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. லாபம் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
8. LIBERTY SHOES
பரிந்துரை விலை: Rs.162 தற்போதைய விலை: Rs.219 உயர்வு: +35%
- கடந்த வருடத்தை விட லாபம் 50% அதிகரித்துள்ளது.
- புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஷோ ரூம்கள் மற்றும் பிரிவுகள் இணைக்கப்பட்டிருப்பது சாதகமாக அமைந்துள்ளது.
9. HCL
பரிந்துரை விலை: Rs.1080 தற்போதைய விலை: Rs.1480 உயர்வு: +35%
- கடந்த வருடத்தை விட லாபம் 65% அதிகரித்துள்ளது.
- அதிகரித்து வரும் operating margin மற்றும் புதிய ஆர்டர்களும் பங்கினை மேலே உயர்த்துகிறது.
எமது கட்டண சேவையின் ஒரு பகுதியாக ஜூலை ஒன்றில் அடுத்த போர்ட்போலியோ தரவிருக்கிறோம். அதில் 900 ரூபாய்க்கு 9 பங்குகள் அதிக விளக்கங்களுடன் பகிரப்படும். ஏற்கனவே, ஏப்ரல் போர்ட்போலியோ 41% லாபமும், ஜூன் போர்ட்போலியோ 8% லாபமும் கொடுத்துள்ளது.
எமது முகவரி: muthaleedu@gmail.com
English Summary:
Good show of financial results in recommended stocks.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக