திங்கள், 9 ஜூன், 2014

ஜனாதிபதி உரை தரும் பங்கு குறிப்புகள்

பங்குச்சந்தையின் அடுத்த கட்ட நகர்வு பட்ஜெட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறது. பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதற்கு முன்னோட்டமாகவே ஜனாதிபதி உரை இருக்கும்.


அதனால் நேற்று நடந்த ஜனாதிபதியின் உரையின் எதிரொலியாக சந்தை 200 புள்ளிகள் வரை உயர்ந்தது.

வழக்கமாக, ஜனாதிபதி உரை என்பது எல்லா வருடமும் நடப்பது தான். அதுவும் கவர்னர் உரை போன்று பெரும்பாலும் டம்மியாக இருப்பதே நிதர்சனம்.

ஆனால் இந்த வருடம் புதிய அரசு முழு பலத்துடன் அமைந்து இருப்பதும், வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஜனாதிபதி உரையை பங்குச்சந்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தது.

ஜனாதிபதி உரையில் குறிப்பிடப்பட்ட கருப்பு பணம், மகளிர் ஒதுக்கீடு, புல்லட் ரயில் போன்றவற்றை செயல்படுத்துவதற்கு கொஞ்சம் கடினமே.

ஆனாலும் மற்ற விடயங்கள் நல்ல நிர்வாகத்தில் சாத்தியமானவையே. அதனால் இது ஒரு விறுவிறுப்பான உரை தான்.

இதிலிருந்து பங்கு முதலீட்டிற்கு தேவையான குறிப்புகளை நாம் எடுத்துக் கொள்ளலாம்.



நாம் முன்னர் குறிப்பிட்டது போல் வறட்சியை தாங்குவதற்கும், விவசாயத்தை முன்னேற்றுவதற்கும் சொட்டு நீர் பாசனம் வேகமாக ஊக்குவிக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே இருக்கும் பாசன மானியங்கள் முறைப்படுத்தப்படும் சமயத்தில் அடுத்த ஐந்து வருடங்களில் இந்த பங்குகள் ஜொலிக்கலாம்.

அடுத்து, மோடிக்கு பிடித்த விடயமானது என்று நினைக்கிறேன். எங்கும் இன்டர்நெட் ஏற்படுத்த முனைந்துள்ளார். இதனால் கேபிள் பதிக்கும் நிறுவனங்கள், WiFi உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் போன்றவற்றை கவனித்து வாருங்கள். Finolex Cables, D-Link போன்றவை எமது சாய்ஸ்.

இறுதியாக, நிலக்கரி எடுக்கும் நிறுவனங்களும் அதனால் பயன்பெறும் மின் உற்பத்தி நிறுவனங்களும். நிலக்கரி எடுப்பது முறைப்படுத்தப்படும் என்றும், உற்பத்தியும் அதிகரிக்கப்படும் என்றும் தெரிகிறது. இதனால் Coal India, NTPC போன்ற அரசு நிறுவனங்களும், நிலக்கரியை வெட்டி எடுக்கும் காண்ட்ராக்ட் செய்து வரும் சிறு நிறுவனங்களும் விடிவு காலத்தைப் பார்க்கலாம்.

கடந்த முறை காங்கிரஸ் செய்தது போல் வங்கிக் கடன்கள் ரத்து செய்யாததே வங்கிகளுக்கு போதும். அவைகள் பிழைத்துக் கொள்ளும்.

இந்த வருட வாய்ப்புகளைத் தவற விடாமல் உங்கள் முதலீட்டினை பெருக்கி கொள்ளுங்கள்! அடுத்த ஐந்து வருடங்களில் நாமும் கோடீஸ்வரராக மாறலாம்!


English Summary:
President speech on parliament gives hopes for share market. Agriculture, Technology and Coal sectors may get major benefits in India stock market.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக