கடந்த போர்ட்போலியோக்களில் சுகர் நிறுவனங்களை பரிந்துரைக்கலாம் என்று தான் நினைத்து இருந்தோம். ஆனால் எதிர்பார்க்கப்படும் நீர் வறட்சி காரணமாக சுகர் பங்குகளை பரிந்துரைக்க முயலவில்லை.
நேற்று அரசு பெட்ரோலுடன் கலந்து எத்தனாலை விற்க முயலலாம் என்ற எதிர்பார்ப்பில் சர்க்கரை நிறுவனங்கள் 10 முதல் 20 வரை சதவீதம் உயர்ந்தன.
இது வரை ஐந்து சதவீதம் மட்டும் எத்தனால் பெட்ரோலுடன் கலந்து விற்கப்படுகிறது.
அரசு தற்போது இந்த எத்தனால் விகிதத்தைக் கூட்டலாமா என்று யோசிக்கிறது.
அறிவியல் பூர்வமாக எத்தனாலும் பெட்ரோலும் சேர்ந்து நல்ல செயல் திறன் கொடுக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதற்காகவே E85 என்ற என்ஜினும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் எத்தனால் அளவு 85% கலந்து இருக்குமாம். இந்த என்ஜினை அதிக அளவு இறக்குமதி செய்ய முடியுமா என்று அரசு யோசிக்கிறது.
அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால், கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலுக்கு அதிக அளவு தேவை ஏற்படும். இதனால் தான் சர்க்கரை நிறுவன பங்குகள் உயர்ந்ததற்கு முக்கிய காரணம்.
ஆனால் பிரச்சினை எந்த ரூபத்தில் வருகிறது என்றால், கரும்பு/சர்க்கரை என்பது உணவா? அல்லது எரிபொருளா? என்பதில்.
ஆமாம். கரும்பை எரிபொருளுக்காக பயன்படுத்தும் போது அதன் தேவை மிக அதிகரிக்கும். இதனால் உணவுப் பொருளாக கருதப்படும் சர்க்கரையின் விலை அதிகரித்து விடும்.
இப்பொழுது உணவு முக்கியமா? எரிபொருள் முக்கியமா? என்பதை நவீன நாகரீக சமுகத்தில் உள்ள நாமே தீர்மானிக்க வேண்டும்.
இன்னும் அரசு முடிவுகள் எடுக்கப்படவில்லை. வாய்ப்புகளும் பாதி:பாதி என்ற அளவிலே உள்ளன. அதனால் சர்க்கரை பங்குகளை இப்பொழுது வாங்க வேண்டாம்.
English Summary:
Ethanol is planned to use with petrol
நேற்று அரசு பெட்ரோலுடன் கலந்து எத்தனாலை விற்க முயலலாம் என்ற எதிர்பார்ப்பில் சர்க்கரை நிறுவனங்கள் 10 முதல் 20 வரை சதவீதம் உயர்ந்தன.
இது வரை ஐந்து சதவீதம் மட்டும் எத்தனால் பெட்ரோலுடன் கலந்து விற்கப்படுகிறது.
அரசு தற்போது இந்த எத்தனால் விகிதத்தைக் கூட்டலாமா என்று யோசிக்கிறது.
அறிவியல் பூர்வமாக எத்தனாலும் பெட்ரோலும் சேர்ந்து நல்ல செயல் திறன் கொடுக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதற்காகவே E85 என்ற என்ஜினும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் எத்தனால் அளவு 85% கலந்து இருக்குமாம். இந்த என்ஜினை அதிக அளவு இறக்குமதி செய்ய முடியுமா என்று அரசு யோசிக்கிறது.
அப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டால், கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலுக்கு அதிக அளவு தேவை ஏற்படும். இதனால் தான் சர்க்கரை நிறுவன பங்குகள் உயர்ந்ததற்கு முக்கிய காரணம்.
ஆனால் பிரச்சினை எந்த ரூபத்தில் வருகிறது என்றால், கரும்பு/சர்க்கரை என்பது உணவா? அல்லது எரிபொருளா? என்பதில்.
ஆமாம். கரும்பை எரிபொருளுக்காக பயன்படுத்தும் போது அதன் தேவை மிக அதிகரிக்கும். இதனால் உணவுப் பொருளாக கருதப்படும் சர்க்கரையின் விலை அதிகரித்து விடும்.
இப்பொழுது உணவு முக்கியமா? எரிபொருள் முக்கியமா? என்பதை நவீன நாகரீக சமுகத்தில் உள்ள நாமே தீர்மானிக்க வேண்டும்.
E85 பெட்ரோல் விற்கப்படும் இடம் |
English Summary:
Ethanol is planned to use with petrol
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக