சனி, 14 ஜூன், 2014

ஈராக் பதட்டத்தில் பங்குச்சந்தையில் என்ன செய்வது?

பங்குச்சந்தையில் ஈராக்கில் நிலவி வரும் நிலையற்ற அரசியல் நிலைமை 350 புள்ளிகள் வரை படு வீழ்ச்சியைக் கொடுத்தது.


சதாம் உசைன் மரணத்திற்கு பிறகு அமெரிக்கா ஈராக்கை எவ்வளவு சீரழிக்க முடியுமோ அவ்வளவு சீரழித்து விட்டு விலகி நிற்கிறது. ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பது போல அமெரிக்கா புகுந்த எந்த நாடும் மீளுவது கடினம்.

போருக்கு பிறகு, சதாம் மரணத்திற்கு பிறகு குறைந்த பட்சம் அங்குள்ள இரு பிரிவினருக்கு இணக்கத்தை அமெரிக்கா ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் அதை விட்டு திறந்த வீட்டில் எவ்வளவு திருட முடியுமோ அந்த அளவிற்கு ஈராக்கின் எண்ணெய் வளங்களை சுரண்டி விட்டு இன்று உங்கள் பாடை நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று வெளியில் இருந்து சொல்கிறார்கள்.


அதிகாரமில்லாத ஈராக் பிரதமர் நாட்டின் ஒரு பிரிவினரின் எழுச்சியைக் கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளார். கிட்டத்தட்ட இலங்கையில் தமிழர்கள், சிங்களர்கள் இன மோதல் போல் தான் உள்ளது.

அரசே ஒரு இனத்தை ஒடுக்க முற்பட்டால் பாதிப்பு அவர்களுக்கும் சேர்த்து தான் வருகிறது.

எதிரிக்கு எதிரி நண்பன் கொள்கையின் படி சன்னி பிரிவினரும் தலிபானும் இணைந்து செயல்பட இருக்கிறார்கள். ஈரானும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட உள்ளார்கள். மத்திய ஆசிய முஸ்லீம் நாடுகளுக்கிடையில் ஒற்றுமை இல்லாத பட்சத்தில் இந்த பிரச்சனைகளைத் தவிர்க்க முடியாததே.

ஈராக்கில் அரசுக்கு எதிரான பிரிவினர் அதிக நகரங்களை கைப்பற்றியுள்ளதால் அவர்கள் கை ஓங்கியுள்ளதாகவே தெரிகிறது. இதனால் இந்த பிரச்சினை கொஞ்ச நாள் நீடிக்க வாய்ப்பு உள்ளது.

சிரியா, ஈராக்கில் உள்ள இடங்களை சேர்த்து தனி நாடு கோரிக்கை 
உலக அளவில் எண்ணெய் வளத்தின் 10% ஈராக்கில் உள்ளதால் பெட்ரோலிய விலைகளில் அதிக அளவு மாற்றம் ஏற்படும் என்று தெரிகிறது.

அவ்வாறு எண்ணெய் விலை அதிகரிக்கும் போது இந்திய ரூபாயின் மதிப்பில் குறைவு ஏற்படலாம். அந்நிய செலாவணி பற்றாகுறை அதிகரிக்கலாம். இது நமது புதிய மத்திய அரசிற்கு கொஞ்சம் சவாலே.

பங்குச்சந்தையில் புள்ளிகள் பெரிய அளவில் கீழ் நோக்கி செல்ல வாய்ப்பு உள்ளது என்றும் சொல்லலாம்.

ஆனால் சில நாட்கள் அல்லது சில மாதங்களுக்கே இந்த பாதிப்பு இருக்கலாம் என்றே நினைக்கிறேன். அதன் பிறகு சிரியா, லிபியாவில் ஏற்பட்டது போல் பொருளாதாரம் சகஜ நிலைக்கு வந்து விடும் வாய்ப்புகள் உள்ளன.

அதனால் இரண்டு வருடங்கள் என்ற நோக்கில் முதலீடு செய்பவர்கள் இதனை வாங்குவதற்காக வாய்ப்பாக கருதிக் கொள்ளலாம்.

பெட்ரோலிய நிறுவனங்களை தற்போதைக்கு தவிர்க்கலாம். அல்லது குறைந்தபட்ச சதவீத அளவில் வைத்துக் கொள்ளலாம்.

மொத்தமாக வாங்கி போடாதீர்கள். சரிய சரிய வாங்குவது சரியாக இருக்கும்.


English Summary:
How Iraq tensions can affect Indian share market? Global scenarios are looking temporary things in Indian economy.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக