நீண்ட கால முதலீட்டை பெரும்பாலானவர்கள் விரும்புவதற்கு ஒரு முக்கிய காரணம். 'லாபத்துடன் சேர்ந்து வரியையும் சேமிப்பது தான்.'
ஆமாம். பங்குச்சந்தை லாபங்களுக்கும் வரி உண்டு.
"பங்குச்சந்தை ஆரம்பம்" என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.
புத்தக மதிப்பை வைத்து நல்ல நிறுவனத்தை எப்படி கண்டுபிடிக்க? (ப.ஆ - 15)
நீங்கள் பங்குகளை வாங்கி ஒரு வருடத்திற்குள் விற்று விட்டால் அதற்கு வரி கட்ட வேண்டும். அந்த வரியின் பெயர் "Short Term Capital Gain(STCG)"
ஆனால் பங்கு வர்த்தகம் என்பதால், அரசு இதற்கு ஒரு சலுகை கொடுக்கிறது.
அதாவது அங்கீகரிக்கப்பட்ட பங்குச்சந்தைகளில் வர்த்தகம் செய்பவர்கள் பிளாட்டாக 15% வரி கட்டினால் போதும்.
இதனால் 20%, 30% என்று மற்ற வருமானங்களுக்கு வரி கட்டுபவர்களுக்கு இது லாபமாக அமையும்.
உதாரனத்துக்கு 1,00,000 ரூபாய்க்கு பங்குகளை வாங்கி, 1,20,000 என்று ஒரு வருடத்திற்குள் விற்றால் நீங்கள் கீழே உள்ள கணக்குகள் படி வரி கட்ட வேண்டும்.
லாபம் = 1,20,000 - 1,00.,000 = 20,000
வரி = 20,000 * 15/100 = 3000 + 90 (செஸ் வரி) = 3090 ரூபாய்
ஆனால் உங்களது இதர மொத்த வருமானங்கள் எல்லாம் சேர்த்து இரண்டு லட்சத்துக்குள் வந்தால் நீங்க இந்த வரி கட்ட வேண்டிய தேவையில்லை.
அதே நேரத்தில் பங்குகளை வாங்கி ஒரு வருடம் கழிந்த பிறகு விற்றால் பங்கு லாபங்களுக்கு எந்த வரியும் விதிக்கப்படுவதில்லை.
இதனை 'Long Term Capital Gain (LTCG)' என்று அழைக்கிறார்கள்.
இந்த "Long Term Tax Gain" வரி பங்குச்சந்தை லாபங்களுக்கு மட்டுமே 0% என்று உள்ளது.
ஆனால் மற்ற அசையா சொத்துகள், தங்கம் போன்றவற்றில் கிடைக்கும் லாபங்களுக்கு 20% அளவு வரி விதிக்கப்படுகிறது.
இதனால் ஒரு வகையில் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டை விடவும் பங்குச்சந்தை முதலீடு அதிக அளவு வரி பலன்களை தருகிறது.
இதனால் முடிந்த அளவு உங்கள் பங்கு முதலீடுகளை நீண்ட கால முதலீடாக மாற்றிக் கொள்ளுங்கள். அது மறைமுகமாக 15% லாபத்தைக் கொடுக்கிறது என்றால் சிறிய தொகை அல்ல.
"பங்குச்சந்தை ஆரம்பம்" என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இங்கு காணலாம்.
English Summary:
Profits from stock is coming under short term capital gain. If the stock is holded for more than one year, then no need to pay tax. This benefit is called Long term Capital Gain Tax.
ஆமாம். பங்குச்சந்தை லாபங்களுக்கும் வரி உண்டு.
"பங்குச்சந்தை ஆரம்பம்" என்ற இந்த தொடரின் முந்தைய பாகத்தை இங்கு காணலாம்.
புத்தக மதிப்பை வைத்து நல்ல நிறுவனத்தை எப்படி கண்டுபிடிக்க? (ப.ஆ - 15)
நீங்கள் பங்குகளை வாங்கி ஒரு வருடத்திற்குள் விற்று விட்டால் அதற்கு வரி கட்ட வேண்டும். அந்த வரியின் பெயர் "Short Term Capital Gain(STCG)"
STCG Tax |
ஆனால் பங்கு வர்த்தகம் என்பதால், அரசு இதற்கு ஒரு சலுகை கொடுக்கிறது.
அதாவது அங்கீகரிக்கப்பட்ட பங்குச்சந்தைகளில் வர்த்தகம் செய்பவர்கள் பிளாட்டாக 15% வரி கட்டினால் போதும்.
இதனால் 20%, 30% என்று மற்ற வருமானங்களுக்கு வரி கட்டுபவர்களுக்கு இது லாபமாக அமையும்.
உதாரனத்துக்கு 1,00,000 ரூபாய்க்கு பங்குகளை வாங்கி, 1,20,000 என்று ஒரு வருடத்திற்குள் விற்றால் நீங்கள் கீழே உள்ள கணக்குகள் படி வரி கட்ட வேண்டும்.
லாபம் = 1,20,000 - 1,00.,000 = 20,000
வரி = 20,000 * 15/100 = 3000 + 90 (செஸ் வரி) = 3090 ரூபாய்
ஆனால் உங்களது இதர மொத்த வருமானங்கள் எல்லாம் சேர்த்து இரண்டு லட்சத்துக்குள் வந்தால் நீங்க இந்த வரி கட்ட வேண்டிய தேவையில்லை.
அதே நேரத்தில் பங்குகளை வாங்கி ஒரு வருடம் கழிந்த பிறகு விற்றால் பங்கு லாபங்களுக்கு எந்த வரியும் விதிக்கப்படுவதில்லை.
இதனை 'Long Term Capital Gain (LTCG)' என்று அழைக்கிறார்கள்.
LTCG Tax |
ஆனால் மற்ற அசையா சொத்துகள், தங்கம் போன்றவற்றில் கிடைக்கும் லாபங்களுக்கு 20% அளவு வரி விதிக்கப்படுகிறது.
இதனால் ஒரு வகையில் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டை விடவும் பங்குச்சந்தை முதலீடு அதிக அளவு வரி பலன்களை தருகிறது.
இதனால் முடிந்த அளவு உங்கள் பங்கு முதலீடுகளை நீண்ட கால முதலீடாக மாற்றிக் கொள்ளுங்கள். அது மறைமுகமாக 15% லாபத்தைக் கொடுக்கிறது என்றால் சிறிய தொகை அல்ல.
"பங்குச்சந்தை ஆரம்பம்" என்ற இந்த தொடரின் அடுத்த பாகத்தை இங்கு காணலாம்.
English Summary:
Profits from stock is coming under short term capital gain. If the stock is holded for more than one year, then no need to pay tax. This benefit is called Long term Capital Gain Tax.
உபயோகமான தகவல்....ஆரம்ப கால முதலீட்டளர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் இது.......
பதிலளிநீக்குமேலும் பங்குச் சந்தை மட்டுமல்லாது முதலீடுகள் பற்றியும் தெரிவித்தமைக்கு நன்றிகள்......
தங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்பரே!
நீக்குஉபயோகமான தகவல்....ஆரம்ப கால முதலீட்டளர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் இது.......
பதிலளிநீக்கு