திங்கள், 23 ஜூன், 2014

சர்க்கரை பங்குகளுக்கு ஏற்பட்ட புதிய மவுசு

கடந்த பதிவில் பெட்ரோலுக்கு பதிலாக எத்தனால் அரசு பயன்படுத்துவதை ஊக்குவிக்க வாய்ப்பு இருந்ததைப் பற்றி எழுதி இருந்தோம். இங்கு பார்க்க..

பெட்ரோலுடன் எத்தனால் கலக்க விரும்பும் அரசு

ஆனால் அது யூகம் என்றே குறிப்பிட்டு இருந்தோம். நேற்று யூகம் உண்மையானது.


தற்போது மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் சர்க்கரை நிறுவனங்களுக்கு புதிய சலுகைகளை அளித்துள்ளார்.

இது வரை கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் சர்க்கரை நிறுவனங்களுக்கு 4000 கோடி அளவு வட்டியில்லாக் கடன் வழங்கப்படுகிறது. இது நிறுவனங்களின் Debt-Ratioவைக் குறைக்க பெரிதும் உதவும்.

அதையடுத்து, இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கு 40% அளவு வரி விதிக்கப்படுகிறது. இதனால் சர்க்கரை இறக்குமதி பெருமளவு குறைந்து, உள்நாட்டு சர்க்கரைக்கு தேவை அதிகம் ஏற்படும்.

இறுதியாக, சர்க்கரை நிறுவனங்களுக்கு தோதுவான ஒரு பெரிய முடிவு. பெட்ரோலுடன் எத்தனால் அளவு 10% கலந்து விற்பனை செய்யலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சுகர் நிறுவனங்களுக்கு கடும் தேவை ஏற்படும். இது வரை 5% மட்டும் கலந்து விற்பனை செய்யப்பட்டு செய்யப்பட்டு வந்தது.

சர்க்கரை விலை உயர்கிறது 

அரசுக்கு பெட்ரோல் இறக்குமதியும், சுகர் இறக்குமதியும்  கணிசமான அளவு குறையும். ஆக, அன்னிய செலாவணி பற்றாக்குறையைக் குறைக்கவும் இந்த முடிவு உதவும். இப்படி அரசுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

ஆனால், மக்களுக்கு கடும் தேவை காரணமாக சர்க்கரையின் விலை கிலோவிற்கு 10% விலை உயர்கிறது. இனி சர்க்கரை விலை கிலோவிற்கு 34 ரூபாய். (இது  தொழிற்சாலையிலிருந்து வரும் போது உள்ள ரேட் என்று நினைக்கிறேன்)

இந்த காரணங்களால் Balrampur Chini Mills, EID Parry, Sree Renuka Sugars போன்ற நிறுவனங்களைக் கூர்ந்து கவனித்து வரலாம்.

நேற்று பெரிய கருப்பன் என்ற நண்பரிடமிருந்து வந்த ஒரு மின் அஞ்சலைப் பார்த்த பிறகு இந்த இணையதளத்தை ஒரு நூறு வருடத்திற்கு பதிவு பண்ணி வைத்து விடலாமோ என்று தோன்றியது. அந்த அளவு உற்சாகமூட்டும் ஒரு மெயில். 

அவரது மின் அஞ்சலின் ஒரு சிறு பகுதியைத் தருகிறேன்.

"before i read your website my portfolio always in a negative sign... 
But your prediction are really good and these are all not come in the name of LUCK. Thats shows your Hard WORK and dedication .
If any one works hard god will behind him, if he belief on him  or not. So in my side i send a small amount to your account in my profit. Kindly accept it.
I forget to say my stock position, sorry rama, in last 3 months i got around 40000 profit , Because of you."

இவ்வளவிற்கும், நாம் ஒன்றும் இலவசமாக பரிந்துரை செய்யவில்லை. 800 ரூபாய் வாங்கி கொண்டு தான் பரிந்துரை செய்தோம். அலுவலகத்தில் கிடைக்கும் விருதுகளை விட இதனை பெரிதாக எண்ணுகிறேன்!

நன்றி பெரியகருப்பன்!

English Summary:
Sugar is in high demand due to change in Govt. policies of ethanol usage in petrol
எமது அடுத்த போர்ட்போலியோ ஜூலை 1ல் வெளிவருகிறது. கீழே உள்ள இணைப்புகளில் விவரங்களைப் பெறலாம்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக